under review

ஏனாதி நெடுங்கண்ணனார்

From Tamil Wiki

To read the article in English: Enathi Nedunkannanar. ‎


ஏனாதி நெடுங்கண்ணனார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய இரு பாடல்கள் அகநானூறு மற்றும் குறுந்தொகையில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் என்று அழைக்கப்படுகிறார். ஏனாதி என்பது சிறந்த போர்வீரனைப் பாராட்டி வழங்கப்படும் விருதுப்பெயர். பாண்டிய அரசர் இவருக்கு ஏனாதி பட்டம் வழங்கினார்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூறில் 373-ஆவது பாடலான பாலைத்திணைப் பாடலைப் பாடினார். இதில் பிரிந்து போகாது நின்ற தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியதாக பாடல் அமைந்துள்ளது. குறுந்தொகை 156-ஆவது பாடல் தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன் வருந்துவதாக அமைந்துள்ளது.

பாடல் நடை

  • அகநானூறு 373

முனை கவர்ந்து கொண்டென, கலங்கி, பீர் எழுந்து,
மனை பாழ் பட்ட மரை சேர் மன்றத்து,
பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சி,
செது காழ் சாய்ந்த முது காற் பொதியில்,
அருஞ் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்று,
பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர,
மீளி உள்ளம் செலவு வலியுறுப்ப,
தாழ் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு,
தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள்;
இரும் பல் கூந்தல், சேயிழை, மடந்தை,
கனை இருள் நடு நாள், அணையொடு பொருந்தி,
வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு, ஐது உயிரா,
ஆய் இதழ் மழைக் கண் மல்க, நோய் கூர்ந்து,
பெருந் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி
மெல் விரல் உகிரின் தெறியினள், வென் வேல்
அண்ணல் யானை அடு போர் வேந்தர்
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில்
ஓர் எயில் மன்னன் போல,
துயில் துறந்தனள்கொல்? அளியள் தானே!

  • குறுந்தொகை 156

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!!
செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பி னின்சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ மயலோ விதுவே.

உசாத்துணை


✅Finalised Page