under review

உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்

From Tamil Wiki

To read the article in English: Umattur Kizhar Makanar Parankotranaar. ‎


உமட்டூர்கிழார் மகனார் பரங்கொற்றனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

உமட்டூர் என்ற ஊரில் உமட்டூர் கிழாரின் மகனாக பரங்கொற்றனார் பிறந்தார்.

இலக்கிய வாழ்க்கை

அகநானூற்றில் உள்ள 69-ஆவது பாடலைப் பாடினார். தோழி தலைவியைத் தேற்றும் பாலைத் திணைப் பாடலாக உள்ளது. இப்பாடலில் தமிழகத்தின் உள்நாட்டு வரலாறும், தமிழகம் பிற நாடுகளோடு கொண்ட உறவும் விளக்கப்படுகிறது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்
  • மோரியரில் ஒரு வகையினரான இயல்தேர் மோரியர் தமிழகத்திற்கு படையெடுத்து வந்து நிறைவேறாமல் திரும்பிப் போனதைப் பற்றிய செய்தி உள்ளது.
  • பெரிய தேர்ப்படையைக் கொண்ட மோரியர்கள் தான் செல்லும் வழியில் தனக்கு தடையாக இருந்த மலையை வெட்டி வழி செய்து முன்னேறிச் சென்ற செய்தி உள்ளது.
  • கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஆய் தன் கையில் மணிப்பூண் அணிந்திருந்தார். இவர் வயவர் (படைவீரர்கள்) பெருமகன் என்று போற்றப்பட்டார்.
  • ஆய் அரசனின் கொடைத்தன்மை பற்றிய செய்தி உள்ளது.
  • ஆய் அரசனின் படைவீரர்கள் கையில் மயில் பீலி கட்டிய வில்லும் அம்புமாக இருப்பர்.

பாடல் நடை

  • அகநானூறு: 69

ஆய்நலம் தொலைந்த மேனியும், மா மலர்த்
தகை வனப்பு இழந்த கண்ணும், வகை இல
வண்ணம் வாடிய வரியும், நோக்கி,
ஆழல் ஆன்றிசின் நீயே. உரிதினின்
ஈதல் இன்பம் வெஃகி, மேவரச்
செய் பொருள் திறவர் ஆகி, புல் இலைப்
பராரை நெல்லி அம் புளித் திரள் காய்
கான மட மரைக் கணநிரை கவரும்
வேனில் அத்தம் என்னாது, ஏமுற்று,
விண் பொரு நெடுங் குடை இயல் தேர் மோரியர்
பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த
அறை இறந்து அகன்றனர்ஆயினும், எனையதூஉம்
நீடலர் வாழி, தோழி! ஆடு இயல்
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து, தம்
சிலை மாண் வல் வில் சுற்றி, பல மாண்
அம்புடைக் கையர் அரண் பல நூறி,
நன்கலம் தரூஉம் வயவர் பெருமகன்
சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத்
தலை நாள் அலரின் நாறும் நின்
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே.

உசாத்துணை


✅Finalised Page