under review

அரபா உம்மா

From Tamil Wiki

அரபா உம்மா (இஸ்லாமியச் செல்வி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், ஆசிரியர். நாடகப் பிரதிகள், சிறுவர் கதைப்பாடல்கள் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

அரபா உம்மா இலங்கை கண்டி ஹீரஸ்ஸகலையில் பிறந்தார். தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

அரபா உம்மா கண்டி பதியுதீன் மஹ்மூத் மகளிர் கல்லூரி தமிழ்ப்பாடப் பொறுப்பாசிரியராகவும் ஊடகப் பிரிவு பொறுப்பாசிரியையாகவும் உள்ளார். அரபா உம்மா இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மலையகச் சேவையின் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணியாற்றினார்.

அரபா உம்மாவின் கணவர் மன்சூர். மூன்று குழந்தைகள்.

நாடக வாழ்க்கை

அரபா உம்மா வானொலி, தொலைக்காட்சிகளுக்கு நாடகப் பிரதிகள் எழுதினார். 1989-ம் ஆண்டு முதல் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லம் சேவையின் மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சிக்கு பிரதியாக்கம் செய்துள்ளார். 'கவிச்சரம்', சிறுகதை, நாடகம், இளைஞர் இதயம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

அரபா உம்மா 'இஸ்லாமியச் செல்வி', 'ஏ.யூ.எல்.எஸ்.அரபா உம்மா', 'யூ.எல்,செல்வி அரபா உதுமான்', 'அரபா மன்சூர்' ஆகிய புனை பெயர்களில் 1984-ம் ஆண்டு முதல் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் எழுதினார். இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, நவமணி, விடிவெள்ளி, தினக்குரல், எழுச்சிக்குரல் ஆகிய நாளிதழ்களிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. ஆரம்ப காலங்களில் பத்திரிகைகளுடன் வானொலிகளிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்தன.

அரபா உம்மா கண்டி சித்திலெப்பை மகாவித்தியாலயம், கட்டுகஸ்தோட்டை ஸாஹிரா ஆண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடசாலை கீதங்களை இயற்றினார். 'பாடு பாப்பா கதைகேளு பாப்பா' என்ற பெயரில் இவர் 1994-ம் ஆண்டு சிறுவர் கதை பாடல் நூல் ஒன்றை வெளியிட்டார்.

விருதுகள்

  • 2012-ல் மகா ரத்மல் உலல சிறந்த அறிப்பாளர் விருது
  • தேசிய கலை கலாச்சார திணைக்கள சிறுகதை, கவிதை, கட்டுரை, ஓவியம், திறனாய்வு, பாடலாக்கம், சிறுவர் கதை போட்டிகளில் மாகாண அளவில் முதலாம் இடம்
  • 2018-ல் தேசாபிமானி, இரத்தின தீப விருதுகள்
  • 2018-ல் பிரதீபா பிரபா சிறந்த ஆசிரியருக்கான விருது

நூல் பட்டியல்

  • பாடு பாப்பா கதைகேளு பாப்பா

உசாத்துணை


✅Finalised Page