under review

வி. சுந்தரமுதலியார்

From Tamil Wiki

வி. சுந்தரமுதலியார் ( பொ.யு. இருபதாம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவ சமயப் பற்றாளர். 'சிவநாம சங்கீர்த்தனம்; முக்கியமான படைப்பு.

வாழ்க்கைக் குறிப்பு

வி. சுந்தரமுதலியார் 1904-ல் சென்னை திருமயிலையில் பிறந்தார். மயிலை சித்திரச் சரித்திரம் (ஓவிய அறச்சாலை) கட்டிய வியாசர்பாடி விநாயக முதலியாரின் உடன் பிறந்தவர். இலக்கண இலக்கியங்கள் மற்றும் இசையில் பயிற்சி பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

வி. சுந்தரமுதலியார் பல சிவாலயங்களில் எழுந்தருளிய சிவனின் மீது பாடப்பட்ட "சிவநாம சங்கீர்த்தனம்" எனும் இசைப்பாமாலை, திருவொற்றியூர் வடிவாம்பிகை மீது தோத்திரப்பதிகம், 'சுந்தராம்பிகைப்பதிகம்', 'திருச்செந்தூர் சிவசுப்ரமணியர் பதிகம்', 'கொழும்பு கதிரேசன் பஞ்சரத்தினம்', 'திருவள்ளுவநாயனார் வருகைப் பஞ்சகம்', 'திருவள்ளுவ தேவர் தியானாட்டகம்', 'ஆண்டார் குப்பம் முருகக் கடவுள் ஆனந்தக் களிப்பு', 'சென்னைக் கந்தர் திருவிழாக் கொம்மி' முதலிய நூல்களைப் பாடியிருக்கிறார்.

கொட்டாம்பட்டிக் கருப்பையாப் பாவலர், திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, தியாகராசச் செட்டியார், உ.வே. சாமிநாதையர், திரிசிரபுரம் மாத்ருபூதம் பிள்ளை, சித்தாந்த ரத்திநாகரம் அரன்வாயில் வேங்கடசுப்புப் பிள்ளை, திருநெல்வேலி ச. சுப்பிரமணிய பிள்ளை, சீ புனல்வேலி அநந்தசுப்பையர், திருத்தணிகை பெருமாளையர், காஞ்சிபுரம் சபாபதி முதலியார், புரசை அட்டாவதானம் சபாபதி விசாகப்ப முதலியார், திருக்கழுக்குன்றம் சிவஞான சுவாமிகள், தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை சோதிடக் களஞ்சியம் சிற்றம்பல முதலியார், காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு, திருமயிலை சண்முகம்பிள்ளை, தண்டலம் பாலசுந்தர முதலியார், க.வ. திருவேங்கடநாயுடு, திருவோத்தூர் பாதுகவி, நரசிங்கபுரம் வீராச்சாமி முதலியார், ஈக்காடு இரத்தினவேலு மதுரகவி - மாணிக்க முதலியார், தசாவதானம் - பேறை செகநாத தள்ளை, திருச்சிவபுரம் வேலாயுத முதலியார், திருமயிலை செந்தில்வேல் முதலியார், பூவை - வீரபத்திர முதலியார், திருமயிலை முத்துக்கிருட்டிணமுதலியார், பொன்னேரி சுந்தரம் பிள்ளை, திருமயிலை வெ. சுப்பராய முதலியார் ஆகியோர் சிறப்புப்பாயிரம் பாடியுள்ளனர்.

சாற்றுக் கவி

அட்டாவதானம் பூவை கலியாணசுந்தர முதலியார் பதுமபந்த வெண்பாவால் சுந்தரமுதலியார் இசைப்பாடல்களுக்கு சாற்றுக்கவி பாடியுள்ளார்.

சோதிபதி பூதிச்தி சோதிமதி நீதிவிதி
சோதியிலை யென்னி லென்னத் தோன்றியுறை -நீதில்
மயிலைகற் சர்தர மாகலிஞன் செய்யுள்
வியன்முப் பழச்சலைக்கு மேல்.

நூல் பட்டியல்

  • சிவநாம சங்கீர்த்தனம்
  • தோத்திரப்பதிகம்
  • சுந்தராம்பிகைப்பதிகம்
  • சிவசுப்ரமணியர் பதிகம்
  • கொழும்பு கதிரேசன் பஞ்சாத்தினம்
  • திருவள்ளுவநாயனார் வருகைப் பஞ்சகம்
  • திருவள்ளுவ தேவர் தியானாட்டகம்
  • ஆண்டார் குப்பம் முருகக் கடவுள் ஆனந்தக் களிப்பு
  • சென்னைக் கந்தர் திருவிழாக் கொம்மி

உசாத்துணை


✅Finalised Page