புதிய ஆத்திசூடி (வாணிதாசன்)
- ஆத்திசூடி என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ஆத்திசூடி (பெயர் பட்டியல்)
புதிய ஆத்திசூடி (1963) வாணிதாசன் எழுதிய நூல். ஔவையார் இயற்றிய ஆத்திசூடியைத் தொடர்ந்து பாரதியார், சுத்தானந்த பாரதி, பாரதிதாசன் எனப் பலரும் பல ஆத்திசூடி நூல்களை இயற்றினர். புதிய ஆத்திசூடி நூல் அவ்வகையில் அமைந்தது.
வெளியீடு
வாணிதாசன் எழுதிய 'புதிய ஆத்திசூடி' நூல், அவர் எழுதிய 'சிரித்த நுணா' என்ற நூலில் பிற கவிதைப் படைப்புகளுடன் இடம்பெற்றது. 1963-ல் வெளியான இந்நூலை கடலூர் ஐயை பதிப்பகம் வெளியிட்டது. மனோன்மணி புத்தக நிலையம் உரிமை பெற்று விற்பனை செய்தது.
நூல் அமைப்பு
வாணிதாசனின் புதிய ஆத்திசூடி, ஓரடியால் அமைந்த 95 பாடல்களைக் கொண்டது. ஆத்தி மலரை தமிழ் அன்னையின் முடியில் சூட்டுவதாக இந்நூலின் காப்புச் செய்யுள் அமைந்துள்ளது.
உள்ளடக்கம்
வாணிதாசனின் புதிய ஆத்திசூடி நூல் அறிவைப் பெருக்கு, ஆள்வினை நம்பு, இழிதொழில் இலைசெய், ஈரம் மனங்கொள் என்று அகர வரிசையில் தொடங்கி கடமை மறவேல், காதல் மணம்புரி, கிழமைக் குயிர்விடு எனக் ககரத்தில் தொடர்ந்து வாய்மை தவறேல், விடுதலை யோடுவாழ், வௌவாலாய் வாழேல் என்ற வரிகளுடன் நிறைவு பெற்றது.
பாடல் நடை
காப்புச் செய்யுள்
ஆத்தி மலர்தேடி அன்னத் தமிழ்முடியிற்
சூட்ட முனைந்தேன் தொகுத்து
நீதி மொழிகள்
- கடமை மறவேல்
- காதல் மணம்புரி
- கிழமைக் குயிர்விடு
- கீரை மிகஉண்
- குளிர்மையாய் நோக்கு
- கூடா நட்பொழி
- கெஞ்சி வாழேல்
- மீசை முறுக்கு
- முப்பால் கைவிடேல்
- மூடப் பழக்கம்தள்
- மெய்வளர் பயிற்சிசெய்
- வெந்நீர் அழித்திடேல்
- வேளையோ டுண்ணு
- வைகறை ஒது
- வெளவாலாய் வாழேல்
மதிப்பீடு
வாணிதாசனின் புதிய ஆத்திசூடி, இளையார்களை நெறிப்படுத்தும் வகையிலும் ஊக்குவிக்கும் வகையிலும் இயற்றப்பட்ட நூலாக அறியப்படுகிறது
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Jul-2024, 18:18:46 IST