under review

ஆதிநாதர்

From Tamil Wiki

To read the article in English: Adinatha. ‎

ஆதிநாதர் (நன்றி பத்மாராஜ்)

ஆதிநாதர் சமண சமயத்தை நிறுவியர். 24 சமண சமய தீர்த்தங்கரர்களில் முதலாமவர்.

புராணம்

இஷ்வாகு அரச குலத்தில் கோசல நாட்டு மன்னர் நபிராஜாக்கும் மருதேவிக்கும் அயோத்தியில் பிறந்தார். கோசல நாட்டின் ரிஷபர் என்றும் அழைக்கப்பட்டவர். இவருக்கு இரண்டு மனைவியர் என அறிகின்றோம். யசஸ்வதி, சுநந்தை ஆகியோரே இவ்விருவரும். யசஸ்வதியின் மகன் பரதன், மகள் பிராமி. சுநந்தையின் வாரிசாக அமைந்தவர் பாகுபலியும் சுந்தரியும். ஆதிநாதர் தம் இரு மகள்களில் பிராமிக்கு எழுத்தைக் கற்றுத் தந்தார், சுந்தரிக்கு எண்களைக் கற்றுத் தந்தார். பிராமி என்ற பெயர் காரணத்தினாலேயே தமிழ் எழுத்துக்களின் பெயர் பிராமி என்ற பெயர் கொண்டது. ரிஷபதேவரின் மூத்த மகன் பரதனின் பெயரில் தான் இந்தியா பாரதவர்ஷம் என்றும் பரத கண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிநாதர் தமது முதுமைப் பருவத்தில் இமயமலைப் பகுதியில் கடுந்தவம் புரிந்து தம் தவ வலிமையால் மோட்சம் பெற்றார்.

வேறு பெயர்கள்

  • ரிசபநாதர்
  • ரிசபதேவர்
  • அருகன்

தமிழகத்தில் ஆதிநாதர்

விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக அதிகமான கோயில்கள் ஆதிநாத தீர்த்தங்கரருக்காக எழுப்பப்பட்டுள்ளது.

ஆதிநாதர் சிற்பம்

ஆதிநாதரின் சின்னம் நந்தி. ஆதிநாதர் சிற்பம் தவக்கோலத்தில் அமர்ந்திருக்க தலைப்பகுதிக்குமேல் முக்குடை அமைப்பும் இரு புறமும் சாமரதாரிகளுடனும் இருக்கும்.

தமிழகத்தில் ஆதிநாதர் வழிபாடு

  • தியாக துர்க்கம் மலையம்மன் கோயில்
  • அகலூர் ஆதிநாதர்கோயில்
  • வீடூர் ஆதிநாதர் கோயில்
  • புழல் ஆதிநாதர்கோயில்
  • பொன்னூர் ஆதிநாதர் கோயில்
  • பொன்னூர் ஆதிநாதர் கோயில்
  • ஒதலபாடி அணியாத அழகர் கோயில்
  • பூண்டி பொன்னி நாதர் கோயில்
  • உப்புவேலூர் ஆதிநாதர்கோயில்
  • கீழ் இடையாலம் ரிஷபநாதர் கோவில்
  • குண்ணத்தூர் ரிஷபநாதர் கோயில்
  • முதலூர் ஆதிநாதர் கோயில்
  • மேல்மலையனூர் ரிஷபநாதர் கோயில்
  • விழுக்கம் ஆதிநாதர் கோயில்
  • தச்சூர் ஆதிநாதர் கோயில்

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

மயிலாப்பூர்ப் பகுதியைக் கடல்கொண்ட பொ.யு 1600-ம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. விதனாபுரி என்னும் அயோத்தியில் இருந்துகொண்டு ஆண்ட மன்னரான ஆதிநாதரை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்ட பிள்ளைத்தமிழ்.

உசாத்துணை


✅Finalised Page