வெளிச்சம்
From Tamil Wiki
வெளிச்சம் (1991-2005) தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் கலையிலக்கிய இதழ். முல்லைத்தீவிலிருந்தும் வேறு இடங்களில் இருந்தும் வெளிவந்த இருமாத வெளியீடு
வெளியீடு
தமிழீழ விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம் நடுவப் பணியகம், 4-ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, தமிழீழம் என்னும் முகவரியில் இருந்து வெளியிட்டது. 1991-ல் வெளிவரத்தொடங்கிய இவ்விதழ் 2005-ல் நின்றது. இவ்விதழின் ஆசிரியர் குழு அறிவிக்கப்படவில்லை. வே.பாலகுமார், புதுவை இரத்தினத்துரை, அ.ஏசுராசா, கருணாகரன் ஆகியோர் வெவ்வேறு காலகட்டங்களில் இதில் பங்காற்றியிருக்கின்றனர்.
உசாத்துணை
- வெளிச்சம் முழு இதழ்களும், ஆவணக்காப்பகம்
- வெளிச்சம் பவள இதழ் 2001, விடுதலைப் புலிகள் கலை பண்பாட்டுக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 13:37:48 IST