under review

முனிசாமி முதலியார்

From Tamil Wiki

முனிசாமி முதலியார் (பொ.யு. 1900) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். சைவ சமயப் பற்றாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

வேலூர் மாவட்டம் மோசூரில் 1900-ல் முனிசாமி முதலியார் பிறந்தார். ஆங்கிலக் கல்வியும், தமிழ்க் கல்வியும் பயின்றார். சென்னை பியர் அலுவலகத்தில் டிராபிக் ஓவர்சீயராக பணி செய்தார். ஓய்வு நேரங்களில் மாணவர்களுக்கு தமிழ்ப்பாடங்கள் கற்பித்தார். பெ.மு. சிவஞானச் செட்டியார் இவரின் மாணவர்.

இலக்கிய வாழ்க்கை

முனிசாமி முதலியார் சென்னைச் சிவனடியார் திருக்கூட்டத்திற்கு சென்று போற்றிப் பாடல்கள் பல பாடினார். தான் சென்ற தொண்டை நாட்டு சிவத் தலங்களைப் போற்றி நூல்கள் பல இயற்றினார்.

நூல் பட்டியல்

  • வினாயகர் தோத்திரம்
  • திருக்கச்சி ஏகம்பம் இரட்டைமணி மாலை
  • திருக்கச்சி மேற்றளி விருத்தம்
  • திருக்கச்சி ஓணகார்தன் தளி ஒருபா ஒருபஃது
  • திருக்கச்சி அநேகதங் காவதம் நவமணிமாலை
  • திருக்கச்சி நெறிக்காரைக்காடு கிரோட்டகம்
  • திருக்குரங்கணி முட்டம் கொச்சகக் கலிப்பா
  • திருமாகறல் விருத்தம்
  • திருவோத்தூர்ச் சந்தக் கலிவிருத்தம்
  • திருப்பனங் காட்டூர்யக்ஞவிருத்தம்
  • திருவல்லம் ஆசிரிய விருத்தம்
  • திருமாற் பேறு பதிற்றுப்பத்தந்தாதி
  • திருவூறல்விருத்தம்
  • திருஇலம்பயங்கோட்டூர் விருத்தம்
  • திருவிற்கோலம்சோடசப்பாமாலை
  • திருவெண்பாக்கம் மும்மணி மாலை
  • திருக்கள்ளில் ஆசிரிய விருத்தம்
  • திருக்காளத்திப் பதிகங்கள்
  • திருவொற்றியூர் மாலை
  • வடிவுடையம்மை தியானபஞ்சகம்
  • திருவலிதாயம் கலித்துறையர்தாதி
  • வடதிருமுல்லைவாயில் பதிகம்
  • கொடியிடை காயகியம்மை பஞ்சரத்தினம்
  • திருவேற்காடு நான்மணிமாலை திருமயிலைப் பதிகம்
  • திருவான்மியூர் வெண்பாவந்தாதி
  • திருக்கச்சூர்மாலை
  • திருவிடைச்சுரப்பதிகம்
  • திருக்கழுக்குன்றப் பதிகம்
  • திருஅச்சிறுபாக்கப் பதிகம்
  • திருவக்கரைப் பதிகம்
  • திருஅரைசிலிப்பதிகம்
  • திருஇரும்பைமாகாளம் பஞ்சரத்தினம்
  • திருப்போரூர்ப் பதிகம்
  • திருப்போரூர் வெண்பாவந் தாதிமாலை
  • திருத்தணிகை வெண்பா அந்தாதி மாலை
  • திருத்தணிகைக் கொச்சகக் கலிப்பா
  • திருத்தணிகைப் பதிகம்
  • நெஞ்சொடு கிளத்தல் துளுடையபிள்ளையார் பதிகம்
  • ஆளுடையாம்பி கொச்சகக் கலிப்பா
  • ஆளுடைய அடிகள் கொச்சகக் கலிப்பா
  • வேளாண்மரபு விளக்கம்

உசாத்துணை


✅Finalised Page