under review

மா சிங்காரவேலு முதலியார்

From Tamil Wiki

மா.சிங்காரவேலு முதலியார் (பொ.யு. 1900) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். திருப்போரூர் முருகன் மீது பாடிய பாடல்கள் முக்கியமானவை.

வாழ்க்கைக் குறிப்பு

சென்னை கிருட்டிணாம்பேட்டையில் மாரியப்ப முதலியாருக்கு மகனாக 1900-ல் சிங்காரவேலு பிறந்தார். பள்ளிக் கல்வியும், புலமைக் கல்வியும் கற்றார். திருப்போரூர் முருகனிடத்தில் பக்தி கொண்டிருந்தார்.

இலக்கிய வாழ்க்கை

திருப்போரூர் முருகன் மீது பல செய்யுள்கள் பாடியுள்ளார். பத்து, தூது, ஊசல், பதிகம்

முதலான சிற்றிலக்கிய வகைமைகளைக் கொண்டு முருகன் மீது சிற்றிலக்கியப்பாடல்கள் பாடியுள்ளார். தனிப்பாடல்கள் பல இயற்றியுள்ளார்.

பாடல் நடை

பதிகம்

தொண்டர்கள் தமக்காக மேனாளில் உன் தந்தை
சுடர்முடியின் மண் சுமந்தான்
தோலா வழக்கினைக் கொண்டடிமை கண்டபின்
சுகமுடன் தூது சென்றான்

சிறப்புப்பாயிரம் பாடியவர்கள்

  • காஞ்சி நாகலிங்க முதலியார்
  • காஞ்சி சிங்கார வேலுத்தேசிகர்
  • புரசை அட்டாவதானம்
  • சபாபதி முதலியார்
  • கோமளபுரம் இராசகோபாலபிள்ளை
  • ஆ சுப்பராயபிள்ளை
  • ஈக்காடு அண்ணாச்சாமி முதலியார்
  • மயிலை மா. சுப்பராய முதலியார்
  • பாலசுப்பிரமணிய முதலியார்
  • கருங்குழி ஏகாம்பர முதலியார்
  • புதுவை வேங்கடசாமி நாயுடு
  • வேலூர் வீரபத்திர முதலியார்
  • பாளையம் வேலுச்செட்டியார்

நூல் பட்டியல்

  • அங்கப்பத்து
  • அச்சப்பத்து
  • அடிமைப்பத்து
  • அடைக்கலப்பத்து
  • அநுபூதிப்பத்து
  • அருட்பத்து
  • ஆனந்தக்களிப்பு
  • ஆனந்தப்புகழ்ச்சி
  • உண்மை நெறிப்புகழ்ச்சி
  • ஊசல்
  • எச்சரிக்கை
  • எந்தாயப்பத்து
  • கருநாட்பத்து
  • காட்சி
  • கிளிப்பத்து
  • குயிற்பத்து
  • சீர்பாதப்பத்து
  • சேவற்பத்து
  • தாலாட்டு
  • திருப்பல்லாண்டு
  • திருப்பள்ளியெழுச்சி
  • திருவருட்புகழ்ச்சி
  • நமகாரப்பத்து
  • நாமாவளி
  • நெஞ்சுவிடு தூது
  • பதிகம்
  • புகழ்ச்சிமாலை
  • போற்றிப்பத்து
  • மயிற்பத்து
  • வேற்பத்து

உசாத்துணை


✅Finalised Page