under review

பரராசசிங்கன்

From Tamil Wiki

பரராசசிங்கன் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) ஈழநாட்டு அரசர், தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழநாட்டு அரசர். பரராச சிங்கையாரியன், பரராச சேகரன் என்றும் அழைப்பர். புலவர்களை ஆதரித்து வந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பரராசசிங்கன் செய்யுள்கள் பல பாடினார். அந்தகக்கவி வீரராகவ முதலியாரின் செய்யுள்களைப் பாராட்டி பரிசுகள் அளித்தார். அவரைப் புகழ்ந்து பாடல் பாடினார்.

பாடல் நடை

நரைகோட் டிளங்கன்றும் நல்வள நாடு நயந்தளிப்பான்
விரையோட்டு தார்ப்புய வெற்பீழ மன்னனென் றேவிரும்பிக்
கரையோட்ட மீதின் மரக்கலம் போட்டுனைக் காணவந்தால்
நரைபோட்டு நீயிருந் தாய்சிங்க பூப சிரோமணியே

உசாத்துணை


✅Finalised Page