under review

நெக்ரிதோ

From Tamil Wiki
1200px-A LUZON NEGRITO WITH SPEAR.jpg

தீபகற்ப மலேசியாவின் வகுக்கப்பட்ட மூன்று பழங்குடிளில் ஒன்று நெக்ரீதோ பழங்குடி. நெக்ரீதோ பழங்குடியினரைச் செமாங் (Semang) என்றும் அழைப்பர். இந்த இனக்குழுவில் ஆறு உட்பிரிவுகள் உள்ளன.

நெக்ரிதோ உட்பிரிவுகள்

நெக்ரிதோ பிரிவில் ஆறு பழங்குடி உட்பிரிவுகள் உள்ளன;

  1. கென்சியு (Kensiu),
  2. கிந்தாக் (Kintak),
  3. ஜஹாய் (Jahai),
  4. மென்ட்ரிக் (Mendriq),
  5. லானோ (Lanoh),
  6. பாதேக் (Bateq)

பின்னனி

நெக்ரீதோ பழங்குடியினர் ஆப்ரிக்க பழங்குடியின் வம்சாவளிகள். 50000 வருடங்களுக்கு முன் நெக்ரீதோ பழங்குடியினர் தீபகற்ப மலேசியாவில் குடியேறினர். நெக்ரீதோ பழங்குடியினர் 10000 வருடங்களுக்கு முன் வாழ்ந்த ‘Hoabinhian’ பழங்குடியினர்களின் வம்சாவளிகளெனும் தொல்லியல் சான்றும் உள்ளது. நெக்ரீதோ பழங்குடினரின் தோற்ற அடிப்படையிலும் வாழ்க்கை முறையிலும் மெலானீசியர், தாஸ்மானிய பழங்குடியினர்ளுடன் நெருக்கமானவர்கள். தென்கிழக்காசியாவின் நெக்ரீதோ பழங்குடியினருள் தீபகற்ப மலேசியாவின் நெக்ரீதோ பழங்குடியினரும் அடங்குவர். இவர்கள் தென்கிழக்காசியாவின் உன்மையான ஆஸ்திரோ-மெலானேசியவர்கள்.

வாழிடம்

நன்றி: jakoa.gov.my

நெக்ரிதோ பழங்குடியினர் கிளந்தான், திரங்கானு மலைப்பகுதிகளிலும், பேராக், கெடா, பஹாங் மாநிலங்களின் வடக்கிலும் வசிக்கின்றனர். கென்சியூ பழங்குடியினர் கெடா மாநிலத்தின் வடக்கில் இருக்கின்றனர். கிந்தாக் பழங்குடியினர் கெடா-பேராக் மாநிலங்களின் விளிம்பில் வசிக்கின்றனர். ஜஹாய் பழங்குடியினர் பேராக்கின் வடகிழக்கிலும் கிளந்தானின் மேற்கிலும் வாழ்கின்றனர். லானோ பழங்குடியினர் வடக்கு பேராக்கிலும் நடு பேராக்கிலும் இருக்கின்றனர். மென்டிரிக் பழங்குடியினர் தென்கிழக்கு கிளந்தானில் உள்ளனர். பாதேக் பழங்குடியினர் திரங்கானுவின் வடமேற்கிலும், பாஹாங் வடகிழக்கிலும், தெற்கு கிளந்தானிலும் வசித்து வருகின்றனர்.

மொழி

நெக்ரிதோ வகை பழங்குடியினரின் மொழி மொன்-க்மேர் (Mon-Khmer) மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. நெக்ரிதோவின் சொற்களஞ்சியம் Proto-Mon Khmer & Proto-Austroasiatic மொழிக் குடும்பங்களின் சொற்களஞ்சியத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும். அதில் மொன்-க்மோர் மொழிகளான வியட்நாம், க்மேர், மோன் மொழிகளும் ஆஸ்திரோ-ஆசியாக்கான இந்திய முண்டா மொழிகளும் அடங்கும். நெக்ரிதோ பழங்குடியினரின் மொழியில் பழங்குடியினரின் மொழியல்லாத மலாய் மற்றும் தாய் (Thailand) மொழிகளின் தாக்கமும் உள்ளது.

நெக்ரீதோ குடும்பத்தில், கென்சியு, பாதேக், கிந்தாக், ஜஹாய், மென்ட்ரிக் பழங்குடியினர் Northern Aslian குடும்பத்தை சேர்ந்த மொழிகளைப் பேசுவர். லானோ பழங்குடி Central Aslian குடும்பத்து மொழியைப் பேசுவர்.

உசாத்துணை

மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறை


✅Finalised Page