under review

தெறிகள்

From Tamil Wiki

தெறிகள் (1972- 1976) தமிழில் வெளிவந்த சிற்றிதழ். விருதுநகரில் இருந்தும் நாகர்கோயிலில் இருந்தும் வெளிவந்தது.

வரலாறு

1972 முதல் விருதுநகரிலிருந்து தெறிகள் என்ற சிறிய இதழை கவிஞர் உமாபதி நடத்திவந்தார். பின்னர் நாகர்கோவிலிலிருந்து அதே பெயரில் அதிக பக்கங்களுடன் 1976 -ல் காலாண்டு இதழாக வெளியிட்டார். உமாபதி அரசு ஊழியர். அப்போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்ததனால் இதழை தொடர முடியவில்லை. அந்த ஒரே இதழுடன் தெறிகள் நின்றுவிட்டது. இதழுக்காக திரட்டப்பட்ட படைப்புகள் கொல்லிப்பாவை இதழாக வெளிவந்தன.

உள்ளடக்கம்

சம்பத் எழுதிய இடைவெளி நாவல், கலாப்ரியாவின் சுயம்வரம் குறுங்காவியம், வானம்பாடிகளின் வெளிச்சங்கள் கவிதைத் தொகுப்பு குறித்த வெங்கட் சாமிநாதனின் நீண்ட விமர்சனம் மற்றும் கவிதைகள் முதல் இதழில் இடம்பெற்றிருந்தன. சம்பத்தின் இடைவெளி வெளிவந்த இதழ் என தெறிகள் அறியப்படுகிறது

உசாத்துணை


✅Finalised Page