under review

துளசியம்மாள்

From Tamil Wiki

துளசியம்மாள் (பொ.யு. 16-ம் நூற்றாண்டு ) கொங்கு வட்டாரத் தமிழ்க் கவிஞர்களில் ஒருவர்.

வரலாறு

பொள்ளாச்சி வட்டம் நாகூர் குயிலண்ண மாப்பிள்ளைக் கவுண்டரின் மகள் துளசியம்மாள். புரவிப்பாளையம் ஜமீன்தார் கங்கைகொண்ட சகமண்டலாதிபதி கோப்பண மன்றாடியாரின் மனைவி. பேரூர் பட்டீஸ்வரர் கோயில் பற்றி பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். பழனி ஆலயம் பற்றியும் பாடியுள்ளார்.

நூல்கள்

  • பச்சைத்தாய் பதிகம்
  • பட்டிநாதர் பதிகம்
  • அமிர்தரசக் கும்மி
  • பேரூர் வெண்பா மாலை
  • மரகதவல்லி பதிகம்

உசாத்துணை

கொங்குநட்டு மகளிர்.செ.இராசு


✅Finalised Page