under review

தலித் இதழ்கள் (1869-1943)

From Tamil Wiki
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, தலித் இதழ்கள் (1869-1943), ஜெ. பாலசுப்பிரமணியம், காலச்சுவடு வெளியீடு

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலை சமூகத்தில் இடம் பெறச் செய்வதற்காக பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல்வேறு இதழ்கள் தோன்றின. இவை ‘தலித் இதழ்கள்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. இவை தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை, சிக்கல்களை, வாழ்வியல் சவால்களை, தேவைகளை முன் வைத்தன. 1869-ல், திருவேங்கிடசாமி பண்டிதர் தொடங்கிய ’சூரியோதயம்’ தமிழின் முதல் தலித் இதழாகக் கருதப்படுகிறது.

தலித் இதழ்கள் பட்டியல்- 1869 முதல் 1943 வரை

எண் இதழின் பெயர் ஆசிரியர் பெயர் தொடங்கிய ஆண்டு
1 சூரியோதயம் திருவேங்கிடசாமி பண்டிதர் 1869
2 பஞ்சமன் அறிய இயலவில்லை 1871
3 சுகிர்தவசனி சுவாமி அரங்கையாதாஸ் 1872
4 இந்துமத சீர்திருத்தி கே. ஆறுமுகம் பிள்ளை 1883
5 திராவிட மித்திரன் அறிய இயலவில்லை 1885
6 ஆன்றோர் மித்திரன் வேலூர் முனிசாமி பண்டிதர் 1886
7 விகடதூதன் பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை 1886
8 மஹா விகடதூதன் பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை 1893
9 பறையன் இரட்டைமலை சீனிவாசன் 1893
10 திராவிடப் பாண்டியன் என் ஜான் ரத்தினம்; பண்டிதர் அயோத்திதாசர் 1895
11 இல்லற ஒழுக்கம் அறிய இயலவில்லை 1903
12 பூலோகவியாஸன் பூஞ்சோலை முத்துவீரன் பிள்ளை 1907
13 ஒருபைசாத் தமிழன்/தமிழன் பண்டிதர் அயோத்திதாசர் 1907
14 திராவிட கோகிலம் டி. மனுவேல் பிள்ளை 1909
15 மதுவிலக்கு தூதன் அல்லது Temperance Herald டி. மனுவேல் பிள்ளை 1909
16 ஆல்காட் கிண்டர்கார்டன் ரிவியூ (Olcott Kindergarten Review) எம்.சி. ராஜா 1909
17 விநோதபாஷிதன் அல்லது Witty Oralor பா.அ.அ. ராஜேந்திரம் பிள்ளை 1911
18 ஊரின் காலேஜ் கிண்டர்கார்டன் மேகசின் எம்.சி. ராஜா 1911
19 நார்த் விக் அப்சர்வர் சி.எம். சிங்காரம் பிள்ளை 1913
20 வழிகாட்டுவோன் எஸ்.ஏ.எஸ். தங்கமுத்து 1918
21 ஆதி திராவிடன் எஸ்.பி. கோபால்சாமி 1919
22 மெட்ராஸ் -ஆதிதிராவிடன் எம்.சி. ராஜா 1919
23 ஜாதி பேதமற்றோன் ஜி.எம். ஞானபிரகாசம் 1922
24 இந்திரகுல போதினி ஏ.ஜி. ஸ்ரீநிவாசகம் பிள்ளை 1924
25 சாம்பவர் நேசன் எஸ்.ஜெ. ஜோசப் 1924
26 ஆதிதிராவிட பாதுகாவலன் ஆர். வீரையன் 1927
27 திராவிடத் தூதன் அறிய இயலவில்லை 1927
28 சாம்பவர் மித்திரன் அறிய இயலவில்லை 1930
29 தருமதொனி பட்டாபிராமன் 1932
30 சந்திரிகை மாசிலாமணி தேசிகர்: என். கிருஷ்ணமூர்த்தி 1932
31 ஜோதி சுவாமி ஏ.எஸ். சகஜானந்தர் 1932
32 ஆதிதிராவிட மித்திரன் ஆர். இராஜகோபாலன் 1934
33 நந்தனார் எஸ்.பி. ராம் 1934
34 புத்துயிர் எஸ்.பி.ஐ. பாலகுருசிவம் 1935
35 சமத்துவம் வி. நாராயணன் 1935
36 கிறிஸ்தவ ஊழியன் ஆர். மாணிக்கம் 1936
37 தமிழர் சேவை வி. நாராயணன் 1936
38 தீண்டாதார் துயரம் கே.எஸ். மாரிமுத்து 1937
39 ஜெயகேசரி ஏ.கே.எஸ்.சண்முகம் 1938
40 சமத்துவச் சங்கு பள்ளிகொண்டா கிருஷ்ணசாமி 1942
41 தென்னாடு இ. சுப்பிரமணியன்; எம். ஆதிமூலம் 1943
42 உதயசூரியன் ஜெ.ஜெ. தாஸ் 1943

உசாத்துணை


✅Finalised Page