under review

குறுந்தொகைப் புலவர்கள்

From Tamil Wiki
குறுந்தொகை

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று குறுந்தொகை. குறைந்த அடிகள் கொண்ட பாடல்களின் தொகுப்பாக இருப்பதால் குறுந்தொகை என்று பெயரிடப்பட்டது. 400 பாடல்களின் தொகுப்பாக உள்ளதால் ‘குறுந்தொகை நானூறு’ என்ற பெயரும் உண்டு. இதில் மொத்தம் 401 பாடல்கள் உள்ளன. ஒரு பாடல் இடைச்செருகலாகக் கருதப்படுகிறது. உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந்தொகை. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுக்கச் செய்தவர் பெயரை அறிய இயலவில்லை.

குறுந்தொகை பாடிய புலவர்கள்

குறுந்தொகை, எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. நான்கு முதல் எட்டு அடிகள் கொண்ட பாடல்களால் ஆனது. 307 மற்றும் 391-ம் பாடல்கள் மட்டும் 9 அடிகளை உடையதாக உள்ளன. இதில் உள்ள 401 பாடல்களை 206 புலவர்கள் பாடியுள்ளனர். இவர்களில் பெண்பால் புலவர்கள் 11 பேர். அதிக எண்ணிக்கையில் குறுந்தொகைப் பாடல்களைப் பாடியவர் கபிலர். பத்து பாடல்களின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதன் கடவுள் வாழ்த்தை, பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியுள்ளார்.

குறுந்தொகை நானூறு பாடிய புலவர்கள் பட்டியல்
புலவர்கள் பெயர் பாடிய பாடல் எண்
பாரதம் பாடிய பெருந்தேவனார் (கடவுள் வாழ்த்து) 1
1 அஞ்சில் ஆந்தை 294
2 அண்டர் மகன் குறுவழுதி 345
3 அணிலாடு முன்றிலார் 41
4 அம்மூவனார் 49,125,163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401
5 அரிசில் கிழார் 193
6 அழிசி நச்சாத்தனார் 271
7 அள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68, 93, 96,140,157, 202, 237
8 அறிவுடை நம்பி 230
9 ஆசிரியன் பெருங்கண்ணன் 239
10 ஆதிமந்தியார் 31
11 ஆரியஅரசன் யாழ்ப்பிரமதத்தன் 184
12 ஆலங்குடி வங்கனார் 8,45
13 ஆலத்தூர் கிழார் 112, 350
14 இடைக்காடனார் 251
15 இருந்தையூர்க் கொற்றன் புலவன் 335
16 இளங்கீரந்தையார் 148
17 இளங்கீரனார் 116
18 இளம்பூதனார் 334
19 இறையனார் 2
20 ஈழத்துப் பூதன் தேவன் 189, 343, 360
21 உகாய்க்குடி கிழார் 63
22 உருத்திரன் 274
23 உரோடகத்துக் கந்தரத்தன் 155
24 உலோச்சனார் 175, 177, 205, 248
25 உழுந்தினைம் புலவன் 333
26 உறையன் 207
27 உறையூர்ச் சல்லியன் குமாரன் 309
28 உறையூர்ச் சிறுகந்தன் 257
29 உறையூர்ப் பல்காயனார் 374
30 உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 133
31 உறையூர் முதுகூத்தனார் 353, 371
32 உறையூர் முதுகொற்றன் 221, 390
33 ஊண்பித்தை 232
34 எயிற்றியனார் 286
35 ஐயூர் முடவனார் 123, 206, 322
36 ஒக்கூர் மாசாத்தியார் 126, 139, 186, 220, 275
37 ஒருசிறைப் பெரியனார் 272
38 ஓதஞானி 227
39 ஓதலாந்தையார் 12, 21, 329
40 ஓரம்போகியார் 10 , 70, 122, 127, 384
41 ஒரிற் பிச்சையார் 277
42 ஓரேர் உழவனார் 131
43 ஒளவையார் 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102,158,183, 200, 364, 388
44 கங்குல் வெள்ளத்தார் 387
45 கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் 213, 216
46 கச்சிப் பேட்டு நன்னாகையார் 30, 172, 180, 192, 197, 287
47 கடம்பனூர்ச் சாண்டிலியன் 307
48 கடியலூர் உருத்திரங்கண்ணனார் 352
49 கடுகு பெருந்தேவன் 255
50 கடுந்தோள் கரவீரன் 69
51 கடுவன் மள்ளன் 82
52 கண்ணன் 244
53 கணக்காயன் தத்தன் 304
54 கதக் கண்ணன் 94
55 கபிலர் 13, 18, 25, 38, 42, 87, 95, 100, 106, 115, 121, 142, 153, 187, 198, 208, 225, 241, 246, 249, 264, 288, 291, 312, 355, 357, 361, 385
56 கயத்தூர் கிழான் 354
57 கயமனார் 9, 356, 378, 396
58 கருவூர் ஓதஞானி 71
59 கருவூர்க் கதப்பிள்ளை 64, 265, 380
60 கருவூர் கிழார் 170
61 கருவூர்ச் சேரமான் சாத்தன் 268
62 கருவூர்ப் பவுத்திரன் 162
63 கல்பொரு சிறுநுரையார் 290
64 கல்லாடனார் 260, 269
65 கவைமகன் 324
66 கழார்க்கீரன் எயிற்றி 35, 261, 330
67 காக்கைப் பாடினியார் நச்செள்ளையார் 210
68 கள்ளிலாத்திரையன் 293
69 காமஞ்சேர் குளத்தார் 4
70 காலெறி கடிகையார் 367
71 காவன் முல்லைப் பூதனார் 104, 211
72 காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் 342
73 காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் 297
74 காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தங்கண்ணன் 347
75 கிடங்கிற் குலபதி நக்கண்ணன் 252
76 கிள்ளிமங்கலங்கிழார் 76, 110, 152, 181
77 குட்டுவன் கண்ணன் 179
78 குடவாயிற் கீரத்தனார் 281, 369
79 குடவாயிற் கீரனக்கன் 79
80 குப்பைக் கோழியார் 305
81 குழல் தத்தன் 242
82 குறியிறையார் 394
83 குறுங்கீரன் 382
84 குறுங்குடி மருதனார் 344
85 குன்றியனார் 50, 51, 117, 238, 301, 336
86 கூடலூர் கிழார் 166, 167, 214
87 கூவன் மைந்தன் 224
88 கொல்லன் அழிசி 26,138,145, 240
89 கொல்லிக் கண்ணன் 34
90 கொற்றனார் 218, 358
91 கோக்குளமுற்றன் 98
92 கோப்பெருஞ்சோழன் 20, 53, 129, 147
93 கோவர்த்தன் 66
94 கோவூர் கிழார் 65
95 கோவேங்கைப் பெருங்கதவன் 134
96 கோழிக் கொற்றன் 276
97 சத்திநாதனார் 119
98 சாத்தன் 349
99 சிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62, 132, 168, 222, 273, 300
100 செம்புலப் பெயல்நீரார் 40
101 செய்தி வள்ளுவன் பெருஞ்சாத்தன் 228
102 செல்லூர்க் கொற்றன் 363
103 சேந்தம் பூதனார் 247
104 சேந்தன் கீரன் 311
105 சேரமானெந்தை 22
106 தங்கால் முடக்கொல்லனார் 217
107 தாமோதரன் 92
108 தாயங் கண்ணனார் 319
109 திப்புத்தோளார் 1
110 தீன்மிதி நாகன் 111
111 தும்பிசேர் கீரனார் 61, 316, 320, 392
112 தூங்கல் ஓரியார் 151, 295
113 தேவ குலத்தார் 3
114 தேரதரன் 195
115 தொல் கபிலர் 14
116 நக்கீரனார் 78, 105, 143, 161, 266, 280, 368
117 நம்பி குட்டுவன் 109, 243
118 நரிவெரூஉத்தலையார் 5, 236
119 நன்னாகையார் 118, 325
120 நாகம்போத்தன் 282
121 நாமலார் மகன் இளங் கண்ணன் 250
122 நெடும் பல்லியத்தன் 203
123 நெடும் பல்லியத்தை 178
124 நெடு வெண்ணிலவினார் 47
125 நெய்தற் காக்கியர் 55, 212
126 படுமரத்து மோசி கீரனார் 33, 75, 383
127 படுமரத்து மோசி கொற்றன் 376
128 பதடிவைகலார் 323
129 பதுமனார் 6
130 பரணர் 19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 259, 292, 298, 328, 393, 399
131 பரூஉ மோவாய்ப் பதுமன் 101
132 பனம்பரனார் 52
133 பாண்டியன் பன்னாடு தந்தான் 270
134 பாண்டிய ஏனாதி நெடுங்கண்ணன் 156
135 பாரகாபரன் 254
136 பாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398
137 பூங்கண்ணன் 253
138 பூங்கணுத்திரையார் 48, 171
139 பூதத்தேவன் 285
140 பூதம்புல்லன் 190
141 பெருங்கண்ணனார் 269, 310
142 பெருங்குன்றூர் கிழார் 338
143 பெருஞ்சாத்தன் 263
144 பெருந்தோட் குறுஞ்சாத்தன் 308
145 பெரும்பதுமனார் 7
146 பெரும்பாக்கன் 296
147 பேயனார் 233, 359, 400
148 பேயார் 339
149 பேரி சாத்தனார் 278, 314, 366,
150 பேரெயின்முறுவலார் 17
151 பொதுக் கயத்துக் கீரந்தை 337
152 பொன்மணியார் 391
153 பொன்னாகன் 114
154 மடல் பாடிய மாதங்கீரனார் 182
155 மதுரை அளக்கர் ஞாழார் மகன் மள்ளனார் 188, 215
156 மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் 185
157 மதுரையாசிரியன் கோடங்கொற்றன் 144
158 மதுரை ஈழத்துப் பூதன் தேவன் 189, 360
159 மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90, 226
160 மதுரைக்கடையத்தார் மகன் வெண்ணாகன் 223
161 மதுரைக் கண்டரதத்தன் 317
162 மதுரைக் கண்ணனார் 107
163 மதுரைக் கதக்கண்ணன் 88
164 மதுரைக் காஞ்சிப் புலவன் 173
165 மதுரைக் கொல்லம் புல்லன் 373
166 மதுரைச் சீத்தலைச் சாத்தனார் 154
167 மதுரை நல்வெள்ளியார் 365
168 மதுரைப் பெருங்கொல்லன் 141
169 மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன் 332
170 மதுரை மருதன் இளநாகனார் 77, 160, 279, 367
171 மதுரை வேளாதத்தன் 315
172 மள்ளனார் 72
173 மாங்குடி கிழார் 302
174 மாங்குடி மருதனார் 164
175 மாடலூர் கிழார் 150
176 மாதீர்த்தன் 113
177 மாமிலாடன் 46
178 மாமூலனார் 11
179 மாயேண்டன் 235
180 மாலைமாறன் 245
181 மாவளத்தன் 348
182 மிளைக் கந்தன் 196
183 மிளைக்கிழான் நல்வேட்டனார் 341
184 மிளைப் பெருங்கந்தன் 136, 204, 234
185 மிளைவேள் தித்தன் 284
186 மீனெறி தூண்டிலார் 54
187 மோசிகீரனார் 59, 84
188 மோசி கொற்றன் 377
189 மோதாசனார் 229
190 வடமவண்ணக்கன் தாமோதரன் 85
191 வடமவண்ணக்கன் பேரிசாத்தனார் 81, 159
192 வருமுலையாரித்தி 176
193 வாடாப் பிரமந்தன் 331
194 வாயிலான் தேவன் 103, 108
195 வாயில் இளங்கண்ணன் 346
196 விட்டகுதிரையார் 74
197 வில்லகவிரலினார் 370
198 விற்றூற்று மூதெயினனார் 372
199 வெண்கொற்றன் 86
200 வெண்பூதன் 83
201 வெண்பூதியார் 97, 174
202 வெண்மணிப்பூதி 299
203 வெள்ளிவீதியார் 27, 44, 58, 130, 146, 149, 169, 386
204 வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் 219
205 வேட்டகண்ணன் 389
206 வேம்பாற்றூர்க் கண்ணன் கூத்தன் 362

உசாத்துணை


✅Finalised Page