under review

குச்சுக் குச்சு ராக்கம்மா

From Tamil Wiki

To read the article in English: Kuchu Kuchu Rakkamma. ‎


குச்சுக் குச்சு ராக்கம்மா பெண் குழந்தைகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டு. இரண்டு பக்கங்களில் பக்கத்திற்கு இருவர் நின்று கொண்டு ஒருவர் தோள் மேல் மற்றவர் கைபோட்டுக்கொண்டு ஆடும் விளையாட்டு.

விளையாடும் முறை

இவ்விளையாட்டில் பக்கத்திற்கு இருவர் என ஒருவர் தோள் மேல் மற்றவர் கைப்போட்டுக் கொண்டு, ஒரு பக்கத்திலிருக்கும் ஜோடி எதிர்ஜோடியைச் சுற்றி வரும்போது, "குச்சுக் குச்சு ராக்கம்மா பொண்ணுண்டோ? கூசாலி ராக்கம்மா பொண்ணுண்டோ? சாதிச்சனமெல்லாம் பொண்ணுண்டோ? உங்க, சம்மந்த வழியெல்லாம் பொண்ணுண்டோ?" எனச் சுற்றியபடி பாடி வந்து இருப்பிடம் சேர்வார்கள்.

எதிரில் இருக்கும் ஜோடி முதலாமவர்களைச் அதே போல் சுற்றி வந்து பதில் கூறும் வகையில் பாடுவார்கள். "குச்சுக் குச்சு ராக்கம்மா பொண்ணில்லை. கூசாலி ராக்கம்மா பொண்ணில்லை. சாதிச் சனமெல்லாம் பொண்ணில்லை. எங்க சம்மந்த வழியெல்லாம் பொண்ணில்லை" எனப் பதில் பாடுவார்கள்.

முதல் ஜோடி மீண்டும், "குச்சுக் குச்சு ராக்கம்மா பத்து ரூபா, கூசாலி ராக்கம்மா பத்து ரூபா, சாதிச் சனமெல்லாம் பத்து ரூபா, உங்க சம்மந்த வழியெல்லாம் பத்து ரூபா." என்று பாடிக் கொண்டே எதிர் ஜோடியைச் சுற்றி வருவார்கள்.

இதற்கு பதிலாக எதிர் ஜோடி, "குச்சுக் குச்சு ராக்கம்மா அது வேண்டாம், கூசாலி ராக்கமா அது வேண்டாம், சாதிச் சனமெல்லாம் அது வேண்டாம், எங்க சம்மந்த வழியெல்லாம் அது வேண்டாம்." என பதில் பாடி முதல் ஜோடியைச் சுற்றி வருவர்.

இப்படி பத்து ரூபா, நூறு ரூபா, ஒட்டியாணம், பதக்கம், கம்மல், மூக்குத்தி, வளையல், தங்கம் என்று சொல்லி பெண் கேட்பதும், அதற்கு அவர்கள் மறுப்பதுமாக இந்த விளையாட்டு அமையும்.

விளையாடுபவர்கள்

நான்கு பெண் குழந்தைகள் பக்கத்திற்கு இருவர் என நின்றுக் கொண்டு இவ்விளையாட்டை ஆடுவர்.

உசாத்துணை

கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி.ராஜநாராயணன்


✅Finalised Page