கார்த்திகேசு
From Tamil Wiki
கார்த்திகேசு (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கார்த்திகேசு இலங்கை மட்டக்களப்பில் கோட்டைக் கல்லாற்றில் பிறந்தார். தமிழ் இலக்கியம், வைத்தியம், ஜோதிடம், மாந்திரிகம் ஆகிய துறைகளில் புலமை பெற்றவர்.
இலக்கிய வாழ்க்கை
கார்த்திகேசு இயற்றிய தனிப்பாடல்களும் கும்மிகளும் வழக்கில் உள்ளன. "இலக்கண விளக்கக் குறிப்புகள்" என்ற நூலை எழுதினார்.
நூல் பட்டியல்
- இலக்கண விளக்கக் குறிப்புகள்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
17-Feb-2023, 07:01:49 IST