under review

காமாட்டா

From Tamil Wiki

To read the article in English: Kamatta. ‎


காமாட்டா என்பது சமூகம் சார்ந்த ஒரு பண்டிகை. இந்த பண்டிகை நாளில் ஆடப்படும் ஆட்டம் என்பதால் காமாட்டா கொட்டுதல் அல்லது காமாட்டா என அழைக்கின்றனர். இந்தக் கலை கரகாட்டத்தின் துணை ஆட்டமாகவும் தேவக்கோட்டை காரைக்குடி பகுதிகளில் நிகழ்கிறது.

நடைபெறும் முறை

காமாட்டா ஆட்டம் ஒரு வகையில் கும்மி போன்றது. கரகாட்டக் கலைஞர்கள், துணைக் கலைஞர்கள் இதனை நிகழ்த்துகின்றனர்.

ஆடுகளத்தில் கரும்பு ஒன்று நடப்படும். அதனைச் சுற்றி எரியும் பொருட்களை வைத்து தீயை மூட்டுவர். அந்த தீயைச் சுற்றி கரகாட்டப் பெண்களும், கோமாளியும் மாரடிப்புப் பாடலைப் பாடி மார்பில் அடித்துக் கொண்டு ஆடுவர். இது இலாவணியின் தாக்கம் கொண்டது. இது காரைக்குடி தேவக்கோட்டை பகுதியில் நிகழும் காமாட்டா.

மாறாக சேலம் பகுதியில் காமாட்டா என்னும் பண்டிகை 15 நாட்கள் வரை நடைபெறும். இந்த பதினைந்து நாட்களிலும் காமாட்டா கொட்டுதல் நிகழும். இங்கும் ஒரு வகை கும்மியாட்டம் போலவே காமாட்டா கொட்டுதல் நிகழும்.

நிகழ்த்துபவர்கள்

கரகாட்டத்தின் கலைஞர்களும், துணைக்கலைஞர்களுமே இதனை நிகழ்த்துகின்றனர். கரகாட்டப் பெண்களும், கோமாளியும் சேர்ந்து கும்மியாட்டம் போல் சுற்றிவந்து ஆடுவர்.

நிகழும் ஊர்கள்

தேவக்கோட்டை, காரைக்குடி பகுதியில் மாரடிப்புப் பாடலாகவும். சேலம் பகுதியில் காமாட்டா என்னும் சமூக பண்டிகையின் நிகழ்வாகவும் நிகழ்கிறது.

நடைபெறும் இடம்

இது கரகாட்டம் நிகழும் ஆடுகளத்திலேயே நிகழும்

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்பு


✅Finalised Page