கணபதிப்பிள்ளைப் புலவர்
கணபதிப்பிள்ளைப் புலவர்(பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து சிற்றிலக்கியப்புலவர், ஜோதிடக்கலைஞர், நாட்டுமருத்துவர்.
வாழ்க்கைக் குறிப்பு
கணபதிப்பிள்ளைப் புலவர் இலங்கை மட்டக்களப்பு, செட்டிபாளையத்தில் இளையதம்பிக்கு மகனாகப் பிறந்தார். இளமைக்காலத்தில் சின்னவர் கணபதிப்பிள்ளையிடம் நிகண்டு, கந்தபுராணம், மகாபாரதம் போன்ற நூல்களைப் பயின்றார். கினியா என்னும் ஊரில் கொம்பன் வைத்தியரிடம் முறையே நாட்டுவைத்தியக் கலையைப் பயின்றார். களுதாவளை என்னும் ஊரில் சோதிடவல்லுநரான மூத்ததம்பிச் சாத்திரியாரிடத்தில் ஜோதிடக்கலை பயின்றார்.
இலக்கிய வாழ்க்கை
முருகக் கடவுள்மீதும் திருக்கதிர்காமத்தின் மீதும் பத்தி கொண்டு "கதிர்காமத்தம் மானை", "கதிர்காம சதகம்", "மாணிக்க கங்கைக் காவியம்" ஆகிய மூன்று நூல்களை இயற்றினார். திருக்கோவிலுக்கு அண்மையிலே சங்க மாங்கண்டிக்குன்றில் கோயில் கொண்டிருக்கும் விநாயகப் பெருமான் மீதும், "சங்கமாங்கண்டிப் பதிகம்" என ஒரு நூலை இயற்றினார்.
நூல் பட்டியல்
- கதிர்காமத்தம்மானை
- கதிர்காம சதகம்
- மாணிக்க கங்கைக் காவியம்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
01-Dec-2022, 17:42:41 IST