ஆறுமுக முதலியார்
From Tamil Wiki
To read the article in English: Arumuga Mudaliar.
ஆறுமுகமுதலியார் (1827) திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பை பெண்ணாக்கிய கதையை பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் நாடகமாக எழுதியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ஆறுமுகமுதலியார் விழுப்புரம் மாவட்டம் கருவம்பாக்கத்தில் பிறந்தார். தந்தை முத்தையா முதலியார். ஆறுமுக முதலியார் சென்னையில் கணக்கராக பணியாற்றினார்.
நூல்
திருஞான சம்பந்த நாயனார்புராணத்தில் உள்ள என்பைப்பெண்ணாக்கிய தொன்மத்தை அடிப்படையாக்கொண்டு பூம்பாவையார் விலாசம் என்ற பெயரில் ஆறுமுகமுதலியார் நாடகமாக எழுதினார். பூம்பாவையார் விலாசம் 1827-ம் ஆண்டு கமர்ஷியல் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
15-Nov-2022, 12:06:54 IST