under review

நாவேந்தன் (முருகேசன்)

From Tamil Wiki
Revision as of 10:41, 25 April 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)

நாவேந்தன் (பிறப்பு: நவம்பர் 30, 1945) ஒரு தமிழ்ப் பாடாசிரியர், கவிஞர், மொழிபெயர்பாளர். திரைப்பட பாடல்கள் எழுதியிருக்கிறார்

பார்க்க: நாவேந்தன் (இலங்கைத் தமிழ் எழுத்தாளர்)

வாழ்க்கைக் குறிப்பு

நாவேந்தன் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், இராதாபுரம் என்னும் ஊரில் நாராயணசாமி - தையல்நாயகி, இணையருக்கு நவம்பர் 30, 1945 அன்று பிறந்தார். காஞ்சீபுரம் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

நூல்கள்

கவிதை
  • வீணை மலர்கள்
  • இன்று வந்த இறந்த காலம்
  • மலர்களின் மாநாடு
நாடகம்
  • அன்னை எங்கே (கவிதை நாடகம்)
பொது
  • ஆரோக்கியமே ஆனந்தம் (நல்வாழ்வு விழிப்புணர்வு கையேடு)
மொழிபெயர்ப்புகள்
  • உலகக் கவிதை மேடை அமைப்போம் (50 சோவியத் கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து செய்த தமிழாக்கம்)
  • கலீல் ஜிப்ரானின் தத்துவக் கதைகளும் கவிதைகளும் (கலீல் ஜிப்ரானின் கவிதைகளின் தமிழாக்கம்)
  • இந்துக்களின் வாழ்க்கை நெறி, (முனைவர் சி கே கரியாலியின் Hindu way of Life, நூலின் தமிழாக்கம்)
  • பெண்களுக்கே சொந்தம் (முனைவர் சி கே கரியாலியின் Womens Own நூலின் தமிழாக்கம்)
  • தமிழ் நாட்டின் முதன்மைக்கு அம்மா மாடல் (முனைவர் சி கே கரியாலியின் Amma Model of Development iñ TN நூலின் தமிழாக்கம்)
  • நான் பெறாத இரு புதல்வியர் (ஆளுநர் எஸ் எஸ். பர்னாலாவின் My Other Two Daughters என்ற நூலின் தமிழாக்கம்)
  • உலகம் பேசும் காதல் மொழி (ஆங்கிலக் காதல் கவிதைகளின் தமிழாக்கம்)

இசைப் பாடல் குறுந்தகடுகள்

  • ஜய ஜய சாயி
  • ஆனைமுகமும் ஆறுமுகமும்
  • அருட்பெருஞ்ஜோதி
  • சிவாலயம் (இசையமைத்தவர் திருச்சி லோகநாதன்)

பாடல் எழுதிய திரைப்படங்கள்

  • கல்யாண வைபோகம்
  • வாணி மஹால்
  • சங்கராபரணம் (தமிழ்)
  • கேட்டவரெல்லாம் பாடலாம்

உசாத்துணை


✅Finalised Page