under review

தரங்கிணி

From Tamil Wiki
Revision as of 13:35, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)
தரங்கிணி நாவல்

தரங்கிணி (1964) நாரண துரைக்கண்ணன் (ஜீவா) எழுதிய நாவல். தமிழில் ஆண்பெண் உறவைப் பற்றி ஆய்வுநோக்கில் எழுதப்பட்ட நாவல்களில் ஒன்று.

எழுத்து, பிரசுரம்

நாரண துரைக்கண்ணன் 1963-ல் சாரதா என்னும் சிறுகதையை எழுதினார். அக்கதை உருவாக்கிய விவாதங்களை ஒட்டி அதை விரிவாக்கி 1964-ல் தரங்கிணி என்னும் நாவலை எழுதினார். இதை அவர் தரங்கிணி நாவலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

கதைச்சுருக்கம்

சௌந்தரராஜன் தன்னைப் பெண்பார்க்க வரும்போது தரங்கிணி அவன் மேல் காதல்கொள்கிறாள். ஆனால் பெற்றோரின் ஒத்துழைப்பின்மையால் மணம் நிகழவில்லை. தரங்கிணியின் தோழி காதரீனின் அண்ணனாகிய ஜோசப் தரங்கிணியை சீண்டுபவன். ஆனால் தரங்கிணியின் மன உறுதியைக் கண்டு திருந்துகிறான். சௌந்தர ராஜனிடம் பேசி அவனுக்கே தரங்கிணியை மணம்புரிந்துவைக்க முயற்சி செய்கிறான். சௌந்தர ராஜன் பெற்றோருக்கு தெரியாமல் தரங்கிணியை மணந்துகொள்கிறான். பின்னர் பெற்றோரின் காலில் விழுந்து ஆசிபெறுகிறான். அவர்களும் அவனை ஏற்றுக்கொள்கிறார்கள்.

இலக்கிய இடம்

இந்நாவல் 1960-களில் குடும்ப ஏற்பை மீறி நிகழும் ஒரு திருமணத்தை மிகையின்றிச் சித்தரிக்கிறது. சாதிமத வேறுபாடுகள் கடந்து குடும்ப உறவுகள் உருவாவதையும் காட்டுகிறது. பாடப்புத்தகத் தன்மை கொண்ட இந்நாவல் கல்லூரிகளில் பாடமாக இருந்தது

உசாத்துணை


✅Finalised Page