under review

கோபுரக்கலை மரபு

From Tamil Wiki
Revision as of 17:00, 21 July 2022 by Tamizhkalai (talk | contribs)
கோபுரக்கலைமரபு

கோபுரக்கலை மரபு (2004 ) குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதிய நூல். கோபுரம் என்னும் கட்டுமானம் இந்திய சிற்பக்கலையில் உருவாகி, வளர்ந்து, தமிழகத்தில் முழுமையடைந்ததை விரிவான சிற்பச்செய்திகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளுடன் விரித்துரைக்கும் நூல்.

எழுத்து, வெளியீடு

குடவாயில் பாலசுப்ரமணியன் 2004-ல் இந்நூலை எழுதினார். கோயில்களஞ்சியம் - வரலாறு மற்றும் கலையியல் ஆய்வு மையம் இதை வெளியிட்டது. இந்நூலின் வெளியீட்டில் சுவாமி தயானந்த சரஸ்வதி உதவினார். இந்நூல் அவர் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

இந்நூலின் இரண்டாம் பதிப்பை அன்னம் பதிப்பகம் 'தமிழகக் கோயில்கலை மரபு' என்னும் தலைப்பில் வெளியிட்டது

உள்ளடக்கம்

கோபுரக்கலை இயல்கள்

  • இயல் ஒன்று : கோபுரக்கலை - தோற்றம், வடிவங்கள், தத்துவம்
  • இயல் இரண்டு : கோபுரக் கட்டிடக்கலை வளர்ந்த திறம்
  • இயல் மூன்று : இடம்பெயர்ந்து எழுந்த கோபுரங்கள்
  • இயல் நான்கு : கோபுரங்களில் கலைக்கூறுகள்
  • இயல் ஐந்து : கோபுரப்பதிவுகளில் வரலாற்று வெளிப்பாடு

பின்னிணைப்புகள்

  • கோபுரலக்ஷணம் என்னும் ஏட்டுச்சுவடியின் ஒளிப்படங்கள்
  • காமிகாகமம், கோபுர ஸ்தாபன விதிப்படலம்
  • தில்லை கிழக்குக் கோபுர கல்வெட்டும் பரத சாஸ்திர கரணச் சிற்பங்களும்

ஆய்வு இடம்

தமிழகத்தின் கோபுரங்களைப் பற்றி தனித்தனியான ஆய்வுகள் முன்னர் வந்துள்ளன எனினும் கோபுரம் என்னும் பண்பாட்டு- கலைநிகழ்வை சிற்பவியல், வரலாறு, கலைமரபுகள், ஆகம வழிபாட்டுமுறைகள் ஆகிய அனைத்துக்கோணங்களிலும் ஆராய்ந்து எழுதப்பட்ட முழுமையான முதல் நூல் இது. அவ்வகையில் தமிழக வரலாற்றெழுத்திலும் , கலைவரலாற்றெழுத்திலும் முன்னோடியான படைப்பு.

உசாத்துணை

கோபுரக்கலை இணைய நூலகம்


✅Finalised Page