under review

கனகசபைப்பிள்ளை

From Tamil Wiki
Revision as of 11:53, 6 September 2022 by Jeyamohan (talk | contribs)

கூ. கனகசபைப்பிள்ளை (1901) இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்கள் பற்றி ஆராய்ந்து எழுதப்பட்ட 'வருண சிந்தாமணி’ என்ற நூலின் ஆசிரியர்.

[பார்க்க வி.கனகசபைப் பிள்ளை, கனகசபைப் புலவர் )

வாழ்க்கைக் குறிப்பு

கனகசபைப்பிள்ளை தொண்டைமண்டலம் கூடலூரில் பிறந்தார். ஆங்கிலத்தில் பி.ஏ பட்டம் பெற்ற கனகசபைப்பிள்ளை சென்னை அரசின் கணக்கராக பணியாற்றினார்.

நூல்

கனகசபைப்பிள்ளை இந்து மதத்தில் உள்ள சாதிகள், கோத்திரங்களை ஆராய்ந்து 'வருண சிந்தாமணி’ என்ற நூலை எழுதினார். வருண சிந்தாமணிக்கு சி.சுப்பிரமணிய பாரதியார் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கிறார். (தேசியகவி பாரதியார் அல்ல. சி.சுப்ரமணிய பாரதியார் என்னும் பெயரில் எழுதிய இன்னொருவர். சுதேசமித்திரனில் பணியாற்றியவர்)

விமர்சனம்

வருணசிந்தாமணி என்ற நூலின் வழியாக கனகசபைப்பிள்ளை தன் சொந்த குலமான வேளாளர் குலம் மற்ற குலங்களைவிட மேன்மையானது என்று காட்டிக்கொள்கிறார் என தமிழக நாட்டாரியல் ஆய்வராளரான நா.வானமாமலை ’தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை


✅Finalised Page