under review

இணைமணி மாலை

From Tamil Wiki
Revision as of 15:35, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)

To read the article in English: Inaimanimaalai. ‎

இணைமணிமாலை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இணைமணிமாலையின் இலக்கணம் தொடர்பாக பாட்டியல் நூல்களில் வேறுபாடுகள் இருக்கின்றன:

  • வெண்பாவும் அகவலும் மாறிமாறி வர அந்தாதியாக அமையும் நூறு பாடல்கள் கொண்டதே இணைமணிமாலை என்று நவநீதப் பாட்டியல் குறிப்பிடுகிறது[1]
  • வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக இரண்டிரண்டாக இணைத்து வெண்பா அகவல் இணைமணிமாலை, வெண்பாக் கலித்துறை இணைமணிமாலை என நூறுநூறு அந்தாதித் தொடையாக வரப்பாடுவது இணைமணிமாலை என்று இலக்கண விளக்கம் குறிப்பிடுகிறது[2].

அடிக்குறிப்புகள்

  1. வருபா (வெண்பா, கலித்துறை) இரண்டிரண்டாய்த் தம்முள் மாறின்றி நூறுவரின்
    பொருமா விழியாய்! இணைமணிமாலை புகல்வர்களே

    - நவநீதப் பாட்டியல், பாடல் 36

  2. வெண்பா அகவல் வெண்பாக் கலித்துறை
    பண்பால் ஈரைம் பஃதுஅந் தாதி
    இயலின் வகுப்பது இணைமணி மாலை

    - இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 818

உசாத்துணை

இதர இணைப்புகள்




✅Finalised Page