under review

இசைப்பேரறிஞர்கள்

From Tamil Wiki
Revision as of 15:39, 29 December 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Moved categories to bottom of article)

தமிழ் இசைச் சங்கத்தால், தமிழிசையைப் பரப்பும் நோக்கத்துடன், ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில், 12 நாட்களுக்குத் தமிழிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சிறந்த இசைக் கலைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ‘இசைப்பேரறிஞர்’ விருதும், பொற்பதக்கமும், பொன்முடிப்பும் இசை விழாவின் தொடக்க நாளன்று வழங்கப்படுகிறது.

தமிழிசைச் சங்கம்

செட்டிநாட்டைச் சேர்ந்த ராஜா சர் அண்ணாமலை செட்டியார், நிதி அமைச்சர் டாக்டர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ராஜாஜி, எழுத்தாளர் கல்கி, டி. கே. சிதம்பரநாத முதலியார், சிதம்பரநாதன் போன்றோர் ஆதரவுடன், சென்னையில், 1943-ல்தமிழிசைச் சங்கத்தைத் தோற்றுவித்தார்.

தமிழ் இசைச் சங்கம் தமிழிசையைப் பரப்பும் நோக்கத்தில் ஆண்டுதோறும் தமிழிசை விழாவை நடத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், சிறந்த இசைக் கலைஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு ‘இசைப்பேரறிஞர்’ விருதும், பொற்பதக்கமும், பொன்முடிப்பும் வழங்கப்படுகிறது.

இசைப்பேரறிஞர் பட்டம் பெற்ற இசைக் கலைஞர்கள்

எண் பெயர்கள் ஆண்டு
1 எம்.எம். தண்டபாணி தேசிகர் 1957
2 பி. சாம்பமூர்த்தி 1957
3 கும்பகோணம் கே. இராசமாணிக்கம் பிள்ளை 1957
4 பி.எஸ்.வீருசாமி பிள்ளை 1959
5 அரியக்குடி டி. இராமநுஜ ஐயங்கார் 1960
6 வழுவூர் பி. இராமையா பிள்ளை 1961
7 மதுரை மணி ஐயர் 1962
8 முசிறி சுப்பிரமணிய ஐயர் 1963
9 சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை 1964
10 பாபநாசம் சிவன் 1965
11 கே.பி. சுந்தராம்பாள் 1966
12 திருமுருக கிருபானந்த வாரியார் 1967
13 பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் 1968
14 செம்மங்குடி ரா. சீனிவாச ஐயர் 1969
15 எம்.எஸ். சுப்புலட்சுமி 1970
16 மதுரை எஸ். சோமசுந்தரம் 1971
17 ம. ப. பெரியசாமித்தூரன் 1972
18 டி.கே. பட்டம்மாள் 1973
19 திருவீழிமிழலை எஸ். சுப்பிரமணிய பிள்ளை 1974
த. பாலசரசுவதி 1975
21 மாயூரம் வி.ஆர்.கோவிந்தராச பிள்ளை 1976
22 திருவீழிமிழலை எஸ்.நடராச சுந்தரம் பிள்ளை 1977
23 எம்.எல். வசந்தகுமாரி 1978
24 இராமநாதபுரம் சி.எஸ். முருகபூபதி 1979
25 மீ. ப. சோமசுந்தரம் 1980
26 டாக்டர் எஸ். இராமநாதன் 1981
27 இசைமணி சீர்காழி எஸ். கோவிந்தராஜன் 1982
28 நாமகிரிப்பேட்டை கே. கிருஷ்ணன் 1983
29 லால்குடி ஜி. ஜெயராமன் 1984
30 தஞ்சை க.பொ. கிட்டப்பா பிள்ளை 1985
31 தருமபுரம் ப. சாமிநாதன் 1986
32 ஆர்.எஸ். மனோகர் 1987
33 ஏ.கே.சி. நடராஜன் 1988
4 குன்னக்குடி ஆர். வைத்தியநாதன் 1989
35 வலையப்பட்டி ஏ.ஆர். சுப்பிரமணியன் 1990
36 மகாராஜபுரம் வி. சந்தானம் 1991
37 கே.ஜே. ஏசுதாஸ் 1992
38 ஷேக் சின்ன மௌலானா 1993
39 டாக்டர் செல்வி பத்மா சுப்பிரமணியம் 1994
40 டாக்டர் திருப்பாம்புரம் சோ. சண்முகசுந்தரம் 1995
41 டி.ஆர். பாப்பா 1996
42 திருவிழா ஆர். ஜெயசங்கர் 1997
43 என். ரமணி 1998
44 காஞ்சிபுரம் ஆ. விநாயக முதலியார் 1999
45 மதுரை டி.என். சேஷகோபாலன் 2000
46 காஞ்சிபுரம் எம்.என். வேங்கடவரதன் 2001
47 டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா 2002
48 எம்.எஸ். விஸ்வநாதன் 2003
49 கே.ஜே. சரசா 2004
50 திருவிடைமருதூர் திரு பி.எஸ்.வி. ராஜா 2005
51 பம்பாய் சகோதரிகள் சி.சரோஜா, சி.லலிதா 2006
52 சைதை த. நடராசன் 2007
53 செம்பனர்கோயில் எஸ்.ஆர்.டி. வைத்திய நாதன் 2008
54 அருணா சாய்ராம் 2009
55 டி.என். கிருஷ்ணன் 2010
56 சுதா ரகுநாதன் 2011
57 நாகசுரக் கலை கலைஞர் மதுரை எம். பி. என். பொன்னுசாமி 2012
58 கிருஷ்ணகுமாரி நரேந்திரன் 2013
59 டாக்டர் சீர்காழி ஜி. சிவசிதம்பரம் 2014
60 ஹரித்துவாரமங்கலம் ஏ. கே. பழநிவேல் 2015
61 சஞ்சய் சுப்ரமண்யன் 2016
62 டி. எம். கிருஷ்ணா 2017
63 பத்மவிபூஷன் உமையாள்புரம் கே. சிவராமன் 2018
64 A. கன்னியாகுமரி 2019
65 சேஷம்பட்டி டி. சிவலிங்கம் 2021

பண் இசைப்பேரறிஞர் விருது பெற்ற இசைக் கலைஞர்கள்

1 திருப்பனந்தாள் சோ. முத்துக் கந்தசாமி தேசிகர் 2009
2 தருமபுரம் எஸ். ஞானப்பிரகாச தேசிகர் 2010
3 திருத்தணி திரு என். சுவாமிநாதான் 2011
4 சாமி தண்டபாணி 2012
5 சீர்காழி சா. திருஞானசம்பந்தன் 2013
6 திருவிடைமருதூர் சு. சம்பந்த தேசிகர் 2014
7 வேதாரண்யம் எஸ். முத்துக்குமாரசாமி தேசிகர் 2015
8 பழநி ப. சண்முகசுந்தர தேசிகர் 2016
9 கரூர் சாமிநாத தேசிகர் 2017
10 பழநி க. வெங்கடேசன் 2018
11 பாலசுப்ரமணிய ஓதுவார் 2019
12 பொன். மு. முத்துக்குமரன் 2021

உசாத்துணை


✅Finalised Page