under review

ஆபரணங்கள்

From Tamil Wiki
Revision as of 12:06, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

To read the article in English: Ornaments. ‎

பாதம், தண்டை, கை, இடுப்பு, கழுத்து, சுத்துமணி, மூக்கு, காது, தலை என உடலின் வெவ்வேறு பகுதியில் அணியப்படும் ஆபரணங்கள் உள்ளது. அவற்றின் பட்டியல் கீழே தொகுக்கப்பட்டிருக்கிறது.

ஆபரண வகைகள்

பாதம்
திருமணத்தில் மிஞ்சி அணிவது
கால் விரல்களில் அணிவன
  • பெருவிரல் முடிச்சி - பெருவிரலில் அணிவது
  • தடை - 2 வது விரலில் அணிவது
  • மிஞ்சி - 2 வது விரலில் அணிவது
  • மெட்டி - 2 வது விரலில் அணிவது
  • பீலி - 3 வது விரலில் அணிவது
  • பில்லணை - 4 வது விரலில் அணிவது
  • பாதசரம் - கால் கொலுசு
தண்டை
  • குழல் தண்டை
  • முறுக்குத் தண்டை
  • தரிசுத் தண்டை (சிலும்பு போல் இருக்கும்)
வங்கி
கை
  • வங்கி - புஜத்திற்குக் கீழாக ஒரு கையில் அணிவது
  • நாகவத்து - வங்கிக்கு கீழ் அணிவது
  • வளவி - வளையல்கள் (வெவ்வேறு வகையில்). கங்கணம்
  • மோதரம் - மோதிரங்கள்
இடுப்பு
  • ஒட்டியாணம் - அரைமூடி (சிறு பெண் குழந்தைகளுக்கு அணிவது)
  • அரைச்சலங்கை
  • அரைஞாண்கொடி
கழுத்து
சுத்துமணி
சங்கிலி வகைகள்
  • அட்டியல்
  • உட்கழுத்துச் சங்கிலி (இதில் பதக்கம் கோர்த்தும் போடுவார்கள்)
  • கண்டசரம்
  • காசுமாலை
  • கெச்சுப் புரச்சை
  • கெவுடு (ஆண்கள் அணிவது)
  • சரடு
  • சுத்துமணி - கழுத்தை ஒட்டினாற் போலிருக்கும் இதில் சுமார் 25 எண்ணங்கள் உண்டு.
  • காசு மாலை - குவலை
  • தாயத்து - பவளம்
  • பீங்காந்தட்டு - புடைதாக்கி
  • மணி - மூணடுக்கு மணி
  • வெத்திலைச் சுருட்டு
  • தாலி
  • பதக்கம்
மூக்கு
  • மூக்குத்தி
  • ஒத்தக்கல் மூக்குத்தி
  • பேசரி
  • முத்தும் தளுக்கும்
  • பில்லாக்கு (புல்லாக்கு)
  • கல் வைத்தது
  • கல் வைக்காமல்
  • முத்துத் தொங்கல்
  • தொறட்டி
பாம்படம்
காது
  • பூடி - பெண்கள் மேல் காதில் அணிவது
  • குருத்தட்டு - டைமன் வடிவில் காதின் குருத்தட்டில் போடுவது
  • முருகு - பூடி அணியும் இடத்திற்கு சற்று கீழாக பெண்கள் அணிவார்கள். ஆண்களும் அணிவார்கள். பெரும் பாலும் ஒரு காதில்
  • பச்சைக்கல் - முருகுபோடும் இடத்தில் அதற்குப் பதில் போடுவது; கம்பியில் கட்டித் தொங்கும்
  • அலுக்கு - முஸ்லீம் பெண்கள் காதில் அணியும் வளையம். வாளி என்றும் சொல்வர்.
  • ஒன்னப்பு - காது வளர்த்த பெண்கள் நடுக் காதுமடலில் அணிவது
  • கம்மல்
  • கடுக்கன் - ஆண்கள் அணிவது. ஒருகல் வைத்தது.
  • வில்கடுக்கன் - மேற்படியில் காதுக்குக் கீழாக வளைந்த இணைப்பாலானது.
  • மரைக்காத்தோடு
  • முக்கட்டு - மூன்று கல் பதித்தது. பெண்களும், சிறுவர்களும் அணிவது
  • லோலாக்கு
  • மாட்டி - காதணியிலிருந்து ஒரு மெல்லிய சங்கிலி கொக்கியுடன் போய் கூந்தலில் மாட்டிக் கொள்வது.
  • குணுக்கு - பெண்கள் காது வளர்ப்பதற்காகப் போடும் வளையம். கனமானது. பித்தளையிலும் உண்டு
  • தண்டட்டி - காது வளர்த்த பின் அணிவது
  • மேலிடு - தண்டட்டி மாதிரியில் சதுரம் சதுரமாயிருக்கும்
  • பாம்படம்
  • முடிச்சி - தங்கக் கம்பியில் பின்னிய வளையம். இரண்டு அரும்பும் ஒரு சதுரக் கட்டையும் ஓடாணியும் இருக்கும்.
  • காது ஓலை - கம்மவார் போன்ற தெலுங்கு இனப் பெண்கள் அணிவது
தலை, கழுத்து, காது, கை அணிகலன் அலங்காரம்
தலை
  • நெத்திச்சுட்டி
  • சுத்துப் பரிஞ்சி - நெத்திச்சுட்டிக்கு இரு பக்கமும் இருப்பது
  • உச்சி ராக்கடி - தலை உச்சியில் வைத்துப் பின்னுவது
  • கொண்டைத் திருக்கு - தாமரைப்பூக் கொண்டைத் திருக்கு. தாழம்பூக் கொண்டைத்திருக்கு. "சடைவில்லை"
  • திருக்கு ராக்கடி - ஜடையில் வைத்துப் பின்னுவது
  • ஜடை நாகம் - ஜடை பூராவும் நெடுக, கீழே நுனிவரையில் வருவது.
  • குஞ்சம்

உசாத்துணை

  • கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள் - கி. ராஜநாராயணன்


✅Finalised Page