under review

96 தத்துவங்கள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
m (Spell Check done)
Line 438: Line 438:
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]

Revision as of 15:33, 10 February 2023

96 தத்துவங்கள் (நன்றி: தமிழ் அண்ட் வேதாஸ் தளம்)

மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

96 தத்துவங்கள் விளக்கம்

பூதங்கள் 5
பொறிகள் 5
புலன்கள் 5
கன்மேந்திரியங்கள் 5
ஞானேந்திரியங்கள் 5
கரணங்கள் 4
அறிவு 1
நாடிகள் 10
வாயுக்கள் 10
ஆசயங்கள் 5
கோசங்கள் 5
ஆதாரங்கள் 6
மண்டலங்கள் 3
மலங்கள் 3
தோஷங்கள் 3
ஈசனைகள் 3
குணங்கள் 3
வினைகள் 2
விவகாரம் 8
அவத்தை 5
மொத்தத் தத்துவங்கள் 96

திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம்

திருமந்திரத்தில் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்
செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர்
செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின்
ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே

(பாடல்: எண் - 154; முதல் தந்திரம்; யாக்கை நிலையாமை)

- என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது.

தத்துவங்களின் உட்பிரிவுகள்

இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன.

பூதங்கள் - 5
1.பிருதிவி - நிலம் எலும்பு, மாமிசம், தோல், முடி, நாடி முதலியன.
2.அப்பு- நீர் உதிரம், உமிழ்நீர், சிறுநீர், விந்து, வியர்வை முதலியன.
3.தேயு - நெருப்பு அகங்காரம், சோம்பல், புணர்ச்சி, நித்திரை, பயம் முதலியன.
4.ஆகாயம் - விண் ஓடல், இருத்தல், நடத்தல், கிடத்தல், நிற்றல் முதலியன.
5.வாயு - காற்று காமம், குரோதம், கோபம், மோகம், மதம் முதலியன.
பொறிகள் - 5
1. மெய் குளிர்ச்சி, வெப்பம், மென்மை, வன்மை அறிதல்.
2. வாய் உப்பு, புளிப்பு, இனிப்பு, கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு என்னும் அறுசுவைகளை அறிதல்.
3. கண் நிறம், நீளம் , உயரம்,குட்டை, பருமன், மெலிவு போன்ற பத்து தன்மைகளை அறிதல்.
4. மூக்கு வாசனை நுகர்ச்சி.
5. செவி ஓசை அறிதல்.
புலன்கள் - 5
1. தொடு உணர்வு
2. வாசனை உணர்வு
3. சுவை உணர்வு
4. ஒளி உணர்வு
5. ஒலி உணர்வு
கன்மேந்திரியங்கள் - 5 (தொழில் உறுப்புகள்)
1. கைகள்
2. கால்கள்
3. நாக்கு
4. குதம் - எருவாய்
5. குய்யம் -கருவாய்
ஞானேந்திரியங்கள் - 5
1. தோல்
2. நாக்கு
3. மூக்கு
4. கண்
5. காது
கரணங்கள் - 4 (அந்த கரணங்கள்-அகக்கருவிகள்-4)
1. மனம்
2. புத்தி
3. சித்தம் (நினைவு)
4. அகங்காரம்
அறிவு - 1
தச நாடிகள் (10)
1. இடகலை (சந்திரகலை) வலக்கால் பெருவிரல் முதல் இடது மூக்கு துவாரத்தைப்பற்றி நிற்கும்.
2. பிங்கலை (சூரிய கலை) இடதுகால் பெருவிரல் முதல் வலது மூக்குத்துவாரத்தைப்பற்றி நிற்கும்.
3. சுழுமுனை(சுஷும்னா நாடி) குதம் முதல் சிரசு வரை செயல்படும்.
4. சிகுவை (உள்நாக்கு நாடி) மூலாதாரத்திலிருந்து உள்நாக்கு வரை உணவு, நீரை விழுங்கச்செய்யும்.
5. புருடன் (வலக்கண் நாடி) மூலாதரத்திலிருந்து வலக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும்.
6. காந்தாரி மூலாதாரத்திலிருந்து இடக்கண் ஓரம் வரை பொருட்களைக் காணச்செய்யும்.
7. அத்தி மூலாதாரத்திலிருந்து வலக்காது வரை காதுகளில் ஒலி கேட்கச் செய்யும்.
8. அலம்புடை மூலாதாரத்திலிருந்து இடதுகாது வரை காதுகளில் பல சப்தங்கள் கேட்கச் செய்யும்.
9. சங்கினி மூலதாரத்திலிருந்து ஆண்/பெண் இனக்குறி வரை.
10. குகு அனாகதம் முதல் லிங்க குதஸ்தானம் வரை.
தச வாயுக்கள் (10)
1. பிராணன் உயிர்க்காற்று-உணவை ஜீரணிக்கும்.நீல நிறம்.
2. அபானன் அபான வாயு-உணவைச் செரித்து மலஜலத்தைத் தள்ளும். பச்சை நிறம்.
3. வியானன் ஒலிக்காற்று இருப்பிடம் - இதயம்.
4. உதானன் தொழில் காற்று
5. சமானன் தொப்புளிலிருந்து கால் வரை. புஷ்பராக நிறம்.
6. நாகன் பாட, கண்திறக்க, இமை முடி சிலிர்க்க உதவும். பொன் நிறம்.
7. கூர்மன் தும்மல் காற்று - கொட்டாவி, கண் மூட, திறக்க, காண உதவும். வெண்மை நிறம்.
8. கிருகரன் விழிக்காற்று-தும்மல், இருமல் உண்டு பண்ணும். கருப்பு நிறம்
9. தேவதத்தன் தர்க்கம், சண்டை, கோபம் உண்டு பண்ணும். படிக நிறம்
10. தனஞ்சயன் மனிதன் இறந்தபின், மற்ற வாயுக்கள் எல்லாம் போனபின் உடலை வீங்கச் செய்து பின் இறுதியாக வெளியேறும். நீல நிறம்.
ஆசயங்கள் - 5 (குடல்கள்)
1. அமர் ஆசயம் இரைகுடல்
2. பகர் ஆசயம் செரிகுடல்
3. சல ஆசயம் நீர்க்குடல்
4. மல ஆசயம் மலக்குடல்
5. சுக்கில ஆசயம் வெண்ணீர் குடல்
கோசங்கள் - 5
1.அன்னமய கோசம்
2.மனோமய கோசம்
3.பிராணமய கோசம்
4.விஞ்ஞானமய கோசம்
5.ஆனந்தமய கோசம்
ஆதாரங்கள் - 6
1. மூலாதாரம்
2. சுவாதிஷ்டானம்
3. மணிபூரகம்
4. அனாகதம்
5. விசுக்தி
6. ஆக்ஞை
மண்டலங்கள் - 3
1. சூரிய மண்டலம் (வலது நாசிக்காற்று)
2. சந்திர மண்டலம் (இடது நாசிக்கற்று)
3. அக்கினி மண்டலம் (சுழுமுனை)
மலங்கள் - 3
1. ஆணவம் (அகங்காரம்)
2. கன்மம் (பழிச்செயல், வன்மம்)
3. மாயை
தோஷங்கள் - 3
1.வாதம்
2.பித்தம்
3.சிலேத்துமம்
ஈசனை - 3
1.பொருட்பற்று
2.புத்திரப்பற்று
3.உலகப்பற்று
குணங்கள் - 3
1. ராஜஸ குணம்
2. தாமஸ குணம்
3. சாத்வீக குணம்
வினை - 2
1 நல்வினை

2. தீவினை (அல்லது) 1. முன்வினை (சஞ்சிதம்+பிராரப்தம்) 2. பின்வினை (ஆகாமியம்)

விவகாரம் - 8
1. காமம்
2. குரோதம்
3. உலோபம் (கருமித் தன்மை)
4. மோகம்
5. மதம் (வெறி)
6. மாச்சரியம் (பொறாமை)
7. இடும்பை (துன்பம் விளைவித்தல்)
8. அகங்காரம் (நான் எனும் கர்வம்)
அவத்தை - 5
1. ஜாக்ரத் (நினைவு)
2. சொப்பனம் (கனவு)
3. சுழுத்தி (உறக்கம்)
4. துரியம் (பேருறக்கம்)
5. துரியாதீதம் (நிஷ்டை)

இந்த 96 தத்துவங்களில் ஏதாவது மாற்றம் ஏற்படின் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஐம்பூதங்களும் சரிவர இயங்காவிடில் உடலின் இயக்கம் பாதிக்கப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page