108 வைணவ திவ்ய தேசங்கள்

From Tamil Wiki
Revision as of 00:18, 7 November 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

108 திவ்ய தேசங்கள் (108 திருப்பதிகள்) எனப்படுவை, ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடல் சிறப்பு) செய்யப்பட்ட திருமால் உறையும் ஆலயங்களாகும். 108 திருப்பதிகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன. கேரளாவில் 13 திருப்பதிகளும், வட இந்தியாவில் 9 திருப்பதிகளும் அமைந்துள்ளன.

திவ்ய தேச அமைப்பு

108 திவ்யதேசங்களில் 105 திருப்பதிகள் இந்தியாவில் உள்ளன. ஒன்று நேபாளத்தில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலும், வைகுந்தமும் மனிதர்களால் காண முடியாத வானுலகில் உள்ள திருப்பதிகளாகும்.

திவ்ய தேசங்கள் தமிழகத்தில் அக்காலத்தில் இருந்த நிலப்பகுதிகளின் அமைப்பில் பகுக்கப்பட்டுள்ளன.

  • சோழநாட்டுத் திவ்யதேசங்கள் - 40
  • நடுநாட்டுத் திவ்யதேசங்கள் - 2
  • தொண்டைநாட்டுத் திவ்ய தேசங்கள் - 22
  • வடநாட்டுத் திவ்யதேசங்கள் - 11
  • மலைநாட்டுத் திவ்யதேசங்கள் - 13
  • பாண்டியநாட்டுத் திவ்யதேசங்கள் - 18
  • நில உலகில் காணமுடியாத திவ்யதேசங்கள் - 2

திவ்ய தேசங்களின் பட்டியல்