ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்

From Tamil Wiki
Revision as of 23:57, 22 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "thumb|ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ( ) சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகளை தன் இளமைப்பருவத்தில் வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் பின்...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஸ்ரீரங்கத்து தேவதைகள்

ஸ்ரீரங்கத்து தேவதைகள் ( ) சுஜாதா எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இக்கதைகளை தன் இளமைப்பருவத்தில் வாழ்ந்த ஸ்ரீரங்கத்தின் பின்னணியில் கற்பனையையும் மெய்யனுபவங்களையும் கலந்து எழுதினார். பெரும்பாலான கதைகள் அனுபவக்குறிப்புகள் போல அமைந்தவை. அவற்றில் இருந்த நேரடித்தன்மையால் குறிப்பிடத்தக்க இலக்கியப்படைப்புகளாக கருதப்படுகின்றன

எழுத்து வெளியீடு

உள்ளடக்கம்

  • கடவுளுக்கு கடிதம்
  • ராவிரா
  • குண்டுமணி
  • விஜிஆர்
  • திண்ணா
  • சின்ன ரா
  • பெண் வேஷம்
  • ஏறக்குறைய ஜீனியஸ்
  • பேப்பரில் பேர்
  • பாம்பு
  • எதிர்வீடு
  • கிருஷ்ணலீலா
  • காதல்கடிதம்
  • மறு

இலக்கிய இடம்

சுஜாதாவின் விளையாட்டுத்தனம் மிக்க நடை இக்கதைகளிலுள்ள இளமைப்பருவ நினைவுகளின் மனநிலைக்கு மிகவும் பொருந்திச் செல்கிறது. நினைவுகளில் இருந்து எழுந்து வரும் மனிதர்களாகையால் அவர்கள் சுருக்கமான சொற்களில் கூறப்பட்டிருப்பது இயல்பாகவும் அமைகிறது. நடைச்சித்திரங்கள் என்னும் பாணியில் வ.ராமசாமி ஐயங்கார் , சாவி ,போன்றவர்கள் எழுதிய கட்டுரைக்கதைகளுக்கு அண்மையில் நின்றிருக்கும் வடிவம் கொண்டவை இக்கதைகள்.

உசாத்துணை