under review

பெருவழிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Moved to Final)
No edit summary
Line 3: Line 3:
பெருவழி : பழங்காலத்தில் நகரங்களையும், ஊர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள் பெருவழி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருவழிகளின் அருகே ஊர்களின் தூரங்களைக் குறிப்பிடும் நெடுவழிக் கற்களைப் பதித்திருப்பர். இவை வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லவும், மக்களின் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டன.

== தமிழ்நாட்டு பெருவழிகள் ==
== தமிழ்நாட்டு பெருவழிகள் ==
பண்டைத்தமிழகத்தில் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன என்று தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன. ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன. இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன. வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின.
பண்டைத்தமிழகத்தில் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன என்று தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு சிற்றூர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன. ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன. இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன. வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின.

தமிழகத்தில் சங்க காலம் முதல் பெருவழிகள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் பெருவழி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் சோழநாட்டிலுள்ள பூம்புகார் மற்றும் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருவழியைப் பற்றிய குறிப்பு வருகிறது.

கோயில்களுக்காகக் நிலக்கொடைகள் வழங்கப்படுகையில் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் பெருவழிகள் பற்றிய செய்திகள் சிலவும் கிடைக்கின்றன. வணிக மையமாக இருந்த கொங்குப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
கோயில்களுக்காக நிலக்கொடைகள் வழங்கப்படுகையில் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் பெருவழிகள் பற்றிய செய்திகள் சிலவும் கிடைக்கின்றன. வணிக மையமாக இருந்த கொங்குப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, கொங்குப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, இராஜகேசரிப் பெருவழி, மகதேசன் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, அரங்கம் நோக்கிய பெருவழி, இராசராசபுர பெருவழி, இராச இராசன் பெருவழி, இராசேந்திரன் பெருவழி, குலோத்துங்கன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி, மேற்குநோக்கிப் போன பெருவழி, மேலைப் பெருவழி, வடுகப் பெருவழி, தடிகைப் பெருவழி, பட்டினப் பெருவழி என்று பல பெருவழிகளின் பெயர்கள் கிடைக்கின்றன. அரசர், அரசியர் பெயர்களிலும் அந்தப் பெருவழிகளின் பெயர்கள் இருந்துள்ளன. செல்லும் ஊர்களின் பெயர்களிலும், திசைகள் குறித்தும் அவை பெயரிடப்பட்டுள்ளன என்று ஆய்வாளர் தேமொழி குறிப்பிடுகிறார்.  

Revision as of 16:19, 28 November 2022

அதியமான் பெருவழி, கல்வெட்டு
ராஜகேசரிப் பெருவழி

பெருவழி : பழங்காலத்தில் நகரங்களையும், ஊர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள் பெருவழி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. பெருவழிகளின் அருகே ஊர்களின் தூரங்களைக் குறிப்பிடும் நெடுவழிக் கற்களைப் பதித்திருப்பர். இவை வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லவும், மக்களின் போக்குவரத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டன.

தமிழ்நாட்டு பெருவழிகள்

பண்டைத்தமிழகத்தில் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என அறியப்பட்டன என்று தஞ்சை பெரியகோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன. இரு சிற்றூர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என அறியப்பட்டன. ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின் தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும் இணைத்தன. இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன. வணிகர்களும், சரக்கு வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும் பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின.

தமிழகத்தில் சங்க காலம் முதல் பெருவழிகள் இருந்ததற்கான இலக்கியச் சான்றுகள் கிடைக்கின்றன. பெரும்பாணாற்றுப்படை, பரிபாடல், அகநானூறு ஆகிய சங்க இலக்கியப் பாடல்களில் பெருவழி பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. சிலப்பதிகாரத்தில் சோழநாட்டிலுள்ள பூம்புகார் மற்றும் உறையூரிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருவழியைப் பற்றிய குறிப்பு வருகிறது.

கோயில்களுக்காக நிலக்கொடைகள் வழங்கப்படுகையில் வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகளைக் குறிப்பிடுகையில் பெருவழிகள் பற்றிய செய்திகள் சிலவும் கிடைக்கின்றன. வணிக மையமாக இருந்த கொங்குப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட பெருவழிகள் இருந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

அதியமான் பெருவழி, ஆதன் பெருவழி, கொற்கைப் பெருவழி, கொங்குப் பெருவழி, பட்டினப் பெருவழி, தஞ்சாவூர்ப் பெருவழி, இராசமகேந்திரன் பெருவழி, இராஜகேசரிப் பெருவழி, மகதேசன் பெருவழி, வீரநாராயணன் பெருவழி, சேரனை மேற்கொண்ட சோழன் பெருவழி, சோழமாதேவிப் பெருவழி, அரங்கம் நோக்கிய பெருவழி, இராசராசபுர பெருவழி, இராச இராசன் பெருவழி, இராசேந்திரன் பெருவழி, குலோத்துங்கன் பெருவழி, விளாங்குடையான் பெருவழி, கூழையானை போன பெருவழி, மேற்குநோக்கிப் போன பெருவழி, மேலைப் பெருவழி, வடுகப் பெருவழி, தடிகைப் பெருவழி, பட்டினப் பெருவழி என்று பல பெருவழிகளின் பெயர்கள் கிடைக்கின்றன. அரசர், அரசியர் பெயர்களிலும் அந்தப் பெருவழிகளின் பெயர்கள் இருந்துள்ளன. செல்லும் ஊர்களின் பெயர்களிலும், திசைகள் குறித்தும் அவை பெயரிடப்பட்டுள்ளன என்று ஆய்வாளர் தேமொழி குறிப்பிடுகிறார்.

ஆனைமலை, திருமூர்த்தி மலை, ஐவர் மலை ஆகிய மலைகளை ஒட்டிச் செல்லும் பெருவழிகள் இன்றும் உள்ளன. இப்பெருவழிகளுக்கு அருகில் வடபூதி நத்தம், ஆனைமலை, சி. கலையமுத்தூர் ஆகிய ஊர்களில் இரண்டாயிரம் ரோமானிய காசுகள் கண்டறியப்பட்டுள்ளன. இடைக்காலக் கல்வெட்டில் இதற்கு வீர நாராயணப் பெருவழி எனப் பெயர் காணப்படுகிறது. பழனியிலிருந்து மதுரை வழியாக இராமேஸ்வரத்தை இணைக்கும் பெருவழி அசுரர்மலைப் பெருவழி என்றழைக்கப்பட்டது.

இராஜகேசரிப் பெருவழி

இராஜகேசரிப் பெருவழி சோழர்கள் காலகட்டத்தில் கொங்குநாடு வழியாக சேரநாட்டு மேற்குக் கடற்கரையை இணைக்கும் வணிகப்பாதை. இப்பாதையை முதலாம் ஆதித்தசோழன் செப்பனிட்டான் என்று கல்வெட்டுச்சான்று உள்ளது.

(பார்க்க இராஜகேசரிப் பெருவழி)

அதியமான் பெருவழி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பதிகால் பள்ளம் என்ற ஊரில் "அதியமான் பெருவழி" என்ற கல்வெட்டுடன் கூடிய பெருவழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு உட்பட்ட அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.

(பார்க்க அதியமான் பெருவழி)

மகதேசன் பெருவழி

சேலம் ஆத்தூர் பகுதியில் உள்ள ஆறகளூர் அருகில் மகதேசன் பெருவழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பெருவழி கொங்கு மணடலத்தை காஞ்சிபுரத்துடன் இணைக்கும் பெருவழியாக இருந்துள்ளது.

(பார்க்க மகதேசன் பெருவழி)

கொங்குநாட்டுப் பெருவழிகள்

கொங்குநாட்டில் அசுரர் மலைப்பெருவழி, சோழமாதேவிப்பெருவழி, பிடாரிகோயில் பெருவழி, வீர நாராயணப்பெருவழி முதலிய பெருவழிகள் இருந்தன. கொழுமத்திலிருந்து பழநி வரை சென்றது அசுரர் மலைப்பெருவழி. சோழமாதேவிப்பெருவழி கொழுமத்திலிருந்து சோழமாதேவி வரை சென்றது.  வீரநாராயணப்பெருவழி ஆனைமலையிலிருந்து கொழுமம் வரை சென்றது. கருவூரிலிருந்து புகார் வரை சென்ற பெருவழி கொங்கப்பெருவழி என்று ஆய்வாளர் நா.கணேசன் குறிப்பிடுகிறார்.

தஞ்சாவூர் பெருவழிகள்

சோழர்காலத்துப் பெருவழிகள் பலவும் தஞ்சாவூரை பிற பகுதிகளுடன் இணைப்பவை

  • தஞ்சாவூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள ஆடுதுறை மகாதேவர் கோவிலுக்கு திருவிளக்குகள் வைக்க குலோத்துங்க சோழனின் பதினான்காம் ஆட்சியாண்டில் அம்பர் நாட்டவர் நன்கொடையாக நிலம் வழங்கியதையும், அதன் நான்கு எல்லைகளைக் குறிப்பிடும் போதும் ‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கு’ என்ற குறிப்பு வருகிறது. இதே கோவிலில் உள்ள மற்றொரு துண்டுக்கல்லிலும் இக்குறிப்பு காணக்கிடைக்கிறது.
  • தஞ்சாவூர் மாவட்டம் அவளிவணல்லூர் அருகில் உள்ள முனியூர் சிவன் கோவிலில் மூன்றாம் இராஜராஜசோழனின் நான்காம் ஆண்டு கல்லெழுத்து சாசனத்தில் ‘தஞ்சாவூர்ப் பெருவழிக்கு வடக்கும், மேல்பாற்கெல்லை’ என்ற மற்றொரு பெருவழி பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. முனியூர் வெண்ணாற்றின் வடகரையில் உள்ள ஊர், இதனை ஒட்டி அவளிவணல்லூர், அரதைப் பெரும்பாழி என தேவாரம் பாடப்பெற்ற தளங்கள் இரண்டு உள்ளன. எனவே திருஇரும்பூளை என்றழைக்கப்படும் ஆலங்குடியிலிருந்து, அரதைப் பெரும்பாழி, முனியூர், இரும்புதலை, கோவத்தக்குடி, உதாரமங்கலம், குலமங்கலம் வழியாக வெண்ணாற்றின் வடகரை தொடர்ந்து தஞ்சைக்கு வடக்காக செல்லும் கோடிவனமுடையாள் பெருவழியோடு இப்பெருவழி இணைந்திருக்க வேண்டுமென ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன் கருதுகிறார்.
கோடிவனமுடையாள் பெருவழி

தஞ்சாவூரை திருவாரூர் வழியாக வெவ்வேறு ஊர்களுடன் இணைத்த பெருவழி. கோடிவனமுடையாள் கோயிலை ஒட்டிச்சென்றமையால் இப்பெயர் பெற்றது.

(பார்க்க கோடிவனமுடையாள் பெருவழி)

உசாத்துணைகள்

சான்றுகள்
  1. பிற்கால சோழர் சரித்திரம்,3ஆம் பகுதி சதாசிவ பண்டாரத்தார், ப-107
  2. இந்திய வரலாறு, சத்தியநாதய்யர், முதல்பாகம், ப-425
  3. திருப்பாற்கடல் கல்வெட்டு, காவேரிப்பாக்கம் ஊர்மன்றம்
நூல்கள்
  • தஞ்சாவூர், குடவாயில் பாலசுப்ரமணியன், அன்னம் பதிப்பகம்
  • கல்வெட்டுக் கலை, பொ. இராசேந்திரன், சொ. சாந்தலிங்கம், என்.சி.பி.ஹெச்.
சுட்டிகள்

✅Finalised Page