being created

புதியமாதவி

From Tamil Wiki
Revision as of 23:18, 24 March 2023 by Tamizhkalai (talk | contribs)

புதியமாதவி(மல்லிகா) (பிறப்பு: மார்ச் 17, 1956) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க்கவிஞர், எழுத்தாளர்.

பிறப்பு,கல்வி

மல்லிகா பி எஸ்.வள்ளிநாயகம்-வடிவம்மாள். தம்பதியருக்கு மார்ச் 17, 1956 அன்று மூன்றாவது மகளாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் 5 சகோதரிகள், ஒரு சகோதரர். பெற்றோர் இருவரும் திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்தவர்கள். மும்பை மெர்கண்டைல் பேங்க் லிமிட்டெட் வங்கியில் பணியாற்றினார். அண்ணாவின் திராவிட அரசியலோடு தொடர்புடையவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மும்பைக் கிளையைத் தொடங்கினார். மும்பையில் ஆரம்பித்தவர்.

மல்லிகா தாராவி நகர்மன்ற பள்ளியில் ஆரம்பக்கல்வியும், பத்தமடை இராமசேஷய்யர் உயர் நிலைப்பள்ளியில் உயர்நிலைகல்வியும் கற்றார். புதுமுக வகுப்பும் , இளம்கலை பாளையங்கோட்டை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரியில் பெற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இளங்கலையிலும்காமராசர் பல்கலைக்கழகத்தில் தற்காலத் தமிழ் இலக்கிய விமரிசனத்தில் தன்னை மிகவும் ஊக்குவித்தவர்களாக பேராசிரியர் கனக சபாபதி, நவநீத கிருஷ்ணன், நடராஜன், ஜெயராமன் , ராமசாமி ஆகியோரைக் குறிப்பிடுகிறார்



தனிவாழ்க்கை

மல்லிகா 1980-ல் வங்கியில் HSBC வங்கியில் பணியில் சேர்ந்தார். வங்கியில் அம்பாசிடர் விருது பெற்றார் . 2004-ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.

1982-ல் சங்கர நயினாரை திருமணம் செய்துகொண்டார். சங்கரநயினார் ONGC நிறுவனத்தில் துணைப் பொது ) மேலாளர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ஒரு மகள் ப்ரியதர்சிநி ;மகன் வள்ளி மனோரஞ்சன்.

இலக்கிய வாழ்க்கை

மாணவப் பருவத்திலிருந்தே வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். கவிதைகளும், சிறுகதைகளும் எழுதினார். அவரது தந்தையின் நண்பர் சண்முகராஜன் அவற்றை மும்பையிலிருந்து வெளிவந்த 'சீர்வரிசை' மாத இதழில் 'புதியமாதவி' என்ற புனைபெயரில் வெளியிட்டார். கவிதை, புத்தக விமர்சனங்கள். சிறுகதை , மொழியாக்கங்கள் செய்தார். முதல் கவிதைத் தொகுப்பு 'சூரிய பயணம்' நாஞ்சில் நாடனின் அணிந்துரையுடன் வெளியானது. மும்பையின் குண்டுவெடிப்பு பாதிக்கப்பட்ட வாழ்க்கை சூழலில் 'ஹேராம்' கவிதைகள் வெளிவந்தன.

சமூகவியல் செயல்பாடுகள்
  • ஊடறு (சுவிட்சர்லாந்து) பெண்கள் அமைப்புடன் இணைந்து பன்னாட்டு
  • பெண்கள் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தல்.
  • இந்திய தேர்தல் சீர்திருத்தம் ( ceri campaign for electoral reforms in india )
  • குறித்து மராட்டிய மாநிலத்தில் பயிற்சி பட்டறைகள்.தாராவி மக்கள் மேம்பாட்டு பணி, (குறிப்பாக பெண்கள், குழந்தைகள்)
  • மும்பை பன்மொழி இலக்கியச் சந்திப்புகள்.

விருதுகள்

  • கவிதைகளுக்கான சிற்பி இலக்கிய விருது ( நிழல்களைத் தேடி கவிதை தொகுப்பிற்காக)
  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது (பெண்வழிபாடு சிறுகதை தொகுப்பிற்காக
  • மணல்வீடு களரி கலை இலக்கிய விருது (புதிய ஆரம்பங்கள் சிறுகதை தொகுப்பிற்காக)
  • பெரியார் விருது (மின்சார வண்டிகள் சிறுகதை தொகுப்பிற்காக)
  • அறிஞர் அண்ணா விருது – (மும்பை இலெமுரியா அறக்கட்டளை புதியமாதவியின் எழுத்துப்பணிக்காக)
  • எழுத்து” அமைப்பு தேர்வு செய்து வெளியிட்ட முதல் கவிதை நூல் : புதியமாதவியின் “மெளனத்தின் பிளிறல்”
  • சிறந்த புதினம் விருது புதுக்கோட்டை புத்தகத்திருவிழா – 2022 பச்சைக்குதிரை” நாவலுக்கு
  • மாநில விடுதலை பண்பாட்டுக் கழகம் -2020 (ரசூலின் மனைவியாகிய நான்)
  • செளமா இலக்கிய விருது – 2020 (பச்சைக்குதிரை நாவலுக்காக)
  • கவண் கவிதை இலக்கிய விருது 2020 (அவள்களின் நாட்குறிப்புகள் கவிதை தொகுப்பிற்காக)

இலக்கிய இடம்

படைப்புகள்

கவிதைகள்
  • சூரியபயணம் – (2000) (ராஜா பதிப்பகம், மும்பை)
  • ஹேராம் –(2003) (மராத்திய மா நில தமிழ் எழுத்தாளர் மன்றம், மும்பை)
  • நிழல்களைத் தேடி – (2005) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • ஐந்திணை –(2011) (இருவாட்சி, சென்னை )
  • மெளனத்தின் பிளிறல் – (2015) (எழுத்து அமைப்பு. சென்னை)
  • பாலைத்திணை – (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • அவள்களின் நாட்குறிப்புகள் 2020- அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்)
  • கதவுகள் திறக்கும் வானம் – மொழியாக்க கவிதைகள் 2015 (இந்தியப்பெண்கவிஞர்களின் கவிதைகள்) (காவ்யா பதிப்பகம், சென்னை)
புனைவு
  • மின்சாரவண்டிகள் – சிறுகதைகள் தொகுப்பு (2005)(மருதா பதிப்பகம் – சென்னை)
  • தனியறை – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம், சென்னை)
  • புதிய ஆரம்பங்கள் – சிறுகதைகள் தொகுப்பு (2007) (மருதா பதிப்பகம் , சென்னை)
  • பெண் வழிபாடு – சிறுகதைகள் தொகுப்பு (2013) (இருவாட்சி – சென்னை)
  • ரசூலின் மனைவியாகிய நான் – சிறுகதைகள் தொகுப்பு. (2019) (காவ்யா பதிப்பகம், சென்னை)
  • பச்சைக்குதிரை – நாவல் (2019) (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை)
  • சிறகொடிந்த வலசை – நாவல் 2021 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்,சென்னை)
அ-புனைவுகள்
  • சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் – இலக்கிய சமூகவியல்– கட்டுரைகள் (2012)(வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)
  • மழைக்கால மின்னலாய் – இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் (2008) (ராஜம் வெளியீடு- சென்னை)
  • ஊமைத்தசும்புகள் – பெண்ணியம் தலித்தியம் கட்டுரைகள் (2008) ( நடராஜ் பப்ளிகேஷன்ஸ், சென்னை)
  • செய்திகளின் அதிர்வலைகள் – அரசியல் கட்டுரைகள் (2011) (வள்ளிசுந்தர் பதிப்பகம், சென்னை)
  • பெண்ணுடல் பேராயுதம் – பெண்ணியக் கட்டுரைகள் (2016) (இருவாட்சி, சென்னை)
  • சங்கமி – பெண்ணிய உரையாடல்கள் (2019).சர்வதேசப் பெண் ஆளுமைகள் , நேர்காணல்களின் மொழியாக்கம் (தொகுப்பாசிரியர்: ஊடறு றஞ்சியுடன் இணைந்து) (காவ்யா பதிப்பகம், சென்னை)
  • சைத்யபூமி – மராட்டிய மண்ணில் தலித்திய வரலாறு கட்டுரைகள் . (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் வெளியீடு,
  • 2022)
மொழியாக்கம்
  • HORSELEAP (பச்சைக்குதிரை நாவல் ஆங்கில மொழியாக்கம்-ozone books)
  • KALAKILLAकालकिल्ल (புதியமாதவியின் கவிதைகள் - மராத்தி மொழியாக்கம்-(Lokvangmaya Griha, Prabhadevi, Mumbai))

உசாத்துணை

https://www.vaarppu.com/interview/3062









🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.