பிரம்மராஜன்

From Tamil Wiki
jeyamohan.in

பிரம்மராஜன்[1953,] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர், கட்டுரையாளர், விமர்சகர்.

பிறப்பு, கல்வி

1953ஆம் ஆண்டு பிறந்தவர். பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.

தனி வாழ்க்கை

தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

'மீட்சி' என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்.


இதுவரை ஆறு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. 1989ஆம் ஆண்டு வெளிவந்த ‘உலகக் கவிதை’ என்ற நூலின் தொகுப்பாசிரியர். 35 இதழ்கள் வெளிவந்த ‘மீட்சி’ என்ற இலக்கியச் சிற்றேட்டின் ஆசிரியர். கவிதைப் பட்டறைகள் சிலவற்றை நடத்திய அனுபவம் உண்டு. முதல் கவிதைத் தொகுப்பு ‘அறிந்த நிரந்தரம்’(1980). கடைசியாக வெளிவந்த கவிதைத் தொகுப்பு ‘ஜென் மயில்(2007).

எஸ்ரா பவுண்ட் குறித்து பிரம்மராஜன் எழுதிய அறிமுக நூல் 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. ப்ரக்ட் கவிதைகள் இவரால் மொழிபெயர்க்கப் பட்டு செறிவான அறிமுகத்துடன்1987ஆம் ஆண்டு வெளிவந்தது. தற்கால உலகக் கவிதை (2007) என்ற நூலின் தொகுப்பாசிரியர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழிபெயர்க்கிறார். சித்தர் பாடல்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்த 64 கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு சாகித்திய அகாதெமியின் இதழான இண்டியன் லிட்டரேச்சரில் (பிப்ரவரி 2000) வெளியாகியது. போர்ஹே கதைகள்(2000) மற்றும் கால்வினோவின் சிறுகதைகள்(2007) ஆகியவை பிரம்மராஜனின் குறிப்பிடத்தக்க புனைகதை மொழிபெயர்ப்புகள். மியூஸ் இந்தியா (http://museindia.com) என்ற இணைய இலக்கிய மின் இதழுக்கு தமிழுக்கான சிறப்பாசிரியராக இருக்கிறார். 1953ம் ஆண்டு சேலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ.ராஜாராம். ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர். கல்லூரிப்பணியிலிருந்து ஓய்வு பெற்று தன் பண்ணை வீட்டில் வசிக்கிறார்.

விருதுகள்

இலக்கிய இடம்

தான் வாசித்த இலக்கியப்படைப்புகள் குறித்து, உலகத்தரமான படைப்பாளிகள் குறித்து அவர்கள் எந்தவிதத்தில் உலகத்தரம் வாய்ந்தவர்களாகிறார்கள் என்பது குறித்து கவி பிரம்மராஜன் எழுதிய கட்டுரைகள், அவை இடம்பெறும் தொகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

படைப்புகள்

கவிதைத் தொகுப்புகள்

  • மிரோஸ்லாவ் ஹோலுப் கவிதைகள்
  • வார்த்தையின் ரஸவாதம்
  • ஜென் மயில்
  • போர்ஹெஸ்(கதைகள், கவிதைகள், கட்டுரைகள்)
  • கேள்விகளின் புத்தகம்
  • சமகால உலகக் கவிதை
  • கடல் பற்றிய கவிதைகள்
  • ஆத்மாநாம் படைப்புகள்
  • இலையுதிராக் காடு

கட்டுரைகள்

  • ஏன் கிளாசிக்குகளை படிக்க வேண்டும்

உசாத்துணை

பிரம்மராஜனின் இலையுதிராக் காடு