ந.ச. பொன்னம்பலப் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 18:01, 1 December 2022 by Ramya (talk | contribs) (Created page with "ந.ச. பொன்னம்பலப் பிள்ளை (1836-1902) ஈழத்து தமிழ் == வாழ்க்கைக் குறிப்பு == ந.ச. பொன்னம்பலப் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் சரவண முத்துப்பிள்ளைக்க்கு மகனாகப் பிறந்தார். தாய் ஆறுமுக ந...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ந.ச. பொன்னம்பலப் பிள்ளை (1836-1902) ஈழத்து தமிழ்

வாழ்க்கைக் குறிப்பு

ந.ச. பொன்னம்பலப் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் நல்லூரில் சரவண முத்துப்பிள்ளைக்க்கு மகனாகப் பிறந்தார். தாய் ஆறுமுக நாவலரின் சகோதரி. இளமைக் காலத்தில் நல்லூர் கார்த்திகேய உபாத்தியாயரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். ஆறுமுக நாவலரிடம் நீண்ட காலம் கற்றார்.

ஆசிரியப்பணி

யாழ்ப்பாணத்திலுள்ள நாவலர் சைவப் பிரகாச வித்தியாசாலையின் தலைமையாசிரியராகவும், பரிபாலகராகவும் பணியாற்றினார்.

மாணவர்கள்

உரத்தூர் வைத்தியலிங்க பிள்ளை திருவாவடுதுறை பொன் ணுேதுவார் திருவாவடுதுறை சுப்பிரமணிய ஒதுவார் காரைக்குடி சொக்கலிங்சஞ் செட்டியார் பழனி குமார சுவாமித் தம்பிரான் ஆதியானேர் ம.க. வேற்பிள்ளை சி. சுவாமிநாத பண்டிதர் சி. பொன் னுத்துரை ஐயர் ச. பொன்னம்பலப் பிள்ளை கொக்குவில் ச. சபாரத்தின முதலியார் சோமாஸ்கந்த பண்டிதர் கந்தர் மடம் சிவகுருநாத பிள்ளை வ. தம்பு, சி. கணேசையர்

இலக்கிய வாழ்க்கை

ந.ச. பொன்னம்பலப் பிள்ளை தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, மணிமேகலை, இராமாயணம் பாரதம் முதலான இலக்கண இலக்கியங்களைக் கற்றார். கவிதைகள் எழுதினார். புராணங்களுக்குப் பொருள் கூறும் விரிவுரைகள் செய்தார். இந்தியா, இலங்கையிலிருந்து மாணவர்கள் பலர் கற்றனர். தேவகோட்டை வேதாரணியம் முதலிய இடங்களிலும் சிறிது காலம் இவர் தங்கி வாழ்ந்தார். வேதாரணியத்தில் வாழ்ந்தபோது நற்றிணை உரையாசிரியரான பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் சிலப்பதிகாரம் முதலான நூல்களில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களை இவரிடம் கேட்டுத் தெளிந்தாரென நற்றிணை நூல் அறிமுகத்தில் உள்ளது. இவர் பல நூல்களும் உரைகளும் எழுதி வெளியிட்டார். பாரதத்தில் சில பருவங்களுக்கும், மயூரகிரிப் புராணத்துக்கும் விரிவான உரை எழுதினார். அரசகேசரியவர்கள் தமிழில் மொழிபெயர்த்து இயற்றிய ரகுவம்சம் என்னும் நூலானது முதன் முதலாக இவராலேயே பரிசோதித்து அச்சேற்றப்பட்டது.

மறைவு

ந.ச. பொன்னம்பலப் பிள்ளை 1902இல் காலமானார்.

நூல் பட்டியல்

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை