நாஞ்சில் நாடன்

From Tamil Wiki
Revision as of 09:46, 7 April 2022 by Navingssv (talk | contribs) (Created page with "நாஞ்சில் நாடன் (பிறப்பு - டிசம்பர் 31, 1947) நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் எழுதி வருபவர். நாஞ்சில் மண் சார்ந்த...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

நாஞ்சில் நாடன் (பிறப்பு - டிசம்பர் 31, 1947) நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் எழுதி வருபவர். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை யதார்த்த பாணியிலும், மாய யதார்த்த பாணியிலும் எழுதியவர். கம்ப ராமாயணத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நாஞ்சில் நாடன் தொடர்ந்து கம்ப ராமாயணம் வகுப்புகளும், சொற்ப்பொழிவுகளும் நிகழ்த்தி வருகிறார்.

பிறப்பு, இளமை

க. சுப்பிரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட நாஞ்சில் நாடன் 1947 ஆம் ஆண்டு டிசம்பர் 31 கன்னியாகுமரி மாவட்டம் வீர நாராயணமங்கலம் என்னும் ஊரில் பிறந்தார்.

கணிதவியல் எம்.எஸ்.சி பட்டம் பெற்று கோயம்புத்தூரில் உள்ளடபிள்யூ. ஹெச். பிராடி அண்ட் கோ (W.H. Brady) நிறுவனத்தில் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை