under review

தமிழ்ப் பண்ணை

From Tamil Wiki
Revision as of 19:55, 23 August 2022 by Madhusaml (talk | contribs)
தமிழ்ப் பண்ணை
சின்ன அண்ணாமலை

தமிழ்ப் பண்ணை ( 1942-) தமிழ் நூல்களை பதிப்பித்த நிறுவனம். சின்ன அண்ணாமலை தொடங்கி தொடங்கி நடத்திய பதிப்பகம். தேசியப்பார்வை கொண்ட நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை, சி. ராஜகோபாலாச்சாரியார் போன்றவர்களின் நூல்களை வெளியிட்டது.

தமிழன் இதயம் - நாமக்கல் கவிஞர்

பதிப்பு, வெளியீடு

இதழாளரும் எழுத்தாளரும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளருமான சின்ன அண்ணாமலை தன் வழிகாட்டியான ஏ.கே. செட்டியாரின் தூண்டுதலாலும், கல்கி, ராஜாஜி போன்றோரது ஆலோசனையின் பேரிலும், சென்னை, தியாகராய நகரில், 'தமிழ்ப் பண்ணை’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை ஆரம்பித்தார். தமிழ்ப் பண்ணையின் முதல் வெளியீடாக, 1942-ல் நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளையின்  'தமிழன் இதயம்’ என்ற கவிதைத் தொகுதி  நூல் வெளியானது. அந்நூல் நாமக்கல் கவிஞரின் பாடல்கள் தமிழகம் முழுவதும் பரவக் காரணமானது.

தமிழன் இதயம் - தமிழ்ப் பண்ணையின் முதல் வெளியீடு

தமிழ்ப் பண்ணை வெளியீடுகள்

சின்ன அண்ணாமலை, தமிழ்ப் பண்ணை மூலம் ராஜாஜி, கல்கி, பெரியசாமி தூரன், ம.பொ.சி., வெ. சாமிநாத சர்மா உள்ளிட்ட பலரது நூல்களை வெளியிட்டார். 'பூட்டை உடையுங்கள்’, 'அன்ன விசாரம்’ போன்ற புத்தகங்களை வெளியிட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் ஆறுமாதம் சிறைத் தண்டனை பெற்றார்.

மகாத்மா காந்தி 'ஹரிஜன்’ என்ற பெயரில் ஆங்கில இதழை நடத்தி வந்தார். அவரிடம் அனுமதி பெற்று, தமிழில் அவ்விதழை 'தமிழ் ஹரிஜன்’ என்ற பெயரில் தனது 'தமிழ்ப் பண்ணை’ மூலம் வெளியிட்டார். தமிழரசு கழகத்திற்காக 'சங்கப்பலகை’ என்ற இதழும், 'தமிழ்ப் பண்ணை’ மூலம் வெளியிடப்பட்டது.

முன்னோடிப் பதிப்பாளர் என்ற வகையில், 'தமிழ்ப் பதிப்பியக்கப் பிதாமகர்' என்று சின்ன அண்ணாமலை போற்றபட்டார். சின்ன அண்ணாமலையின் மறைவுக்குப் பின் அவரது மகன் சி. அ. கருணாநிதி 'தமிழ்ப் பண்ணை’யின் பொறுப்பேற்று தந்தை வழியில் நூல் வெளியீட்டைத் தொடர்ந்தார்.

ஆவணம்

தமிழ்ப் பண்ணை வெளியிட்ட நூல்கள் சில தமிழ் இணைய நூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாற்று இடம்

காங்கிரஸ் இயக்கம் சார்ந்த தேசத் தலைவர்கள் பலரது நூலை வெளியிட்டு சுதந்திர உணர்வை மக்களிடையே பரப்பியது தமிழ்ப் பண்ணை. இலக்கிய நூல்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது.

தமிழ்ப் பண்ணை பதிப்பகம் குறித்து எழுத்தாளர் விக்கிரமன், "சின்ன அண்ணாமலை தியாகராயநகர் பனகல் பூங்கா எதிரே, பார்க்லாண்ட்ஸ் ஓட்டல் அருகே தமிழ்ப்பண்ணை என்ற நூல் வெளியீட்டகத்தைத் தொடங்கினார். அச்சிலும், அமைப்பிலும் உள்ளடகத்திலும் மிகச்சிறந்ததான நூல்களை வெளியிடுவதில் புதுமையைப் புகுத்தினார். நூல்கள் விற்பனைக் கூடத்தையும் அமைத்தார். அதே கட்டிடத்தின் ஒரு பகுதியில் வாடகை நூலகத்தையும் ஏற்படுத்தினார். சிறு இடம்தான் அது கலைவாணியின் கோயிலாகத் திகழ்ந்தது. நடுவே மகாத்மா காந்தி சிலை, அதைச் சுற்றிலும் வட்டவடிவில் நூல்களின் காட்சி. சின்னஞ்சிறிய விற்பனைக்கூடத்தில் 1942-ஆம் ஆண்டு காலகட்டத்தில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படங்கள் சுவற்றின் நான்கு பக்கமும் கம்பீரமாக அலங்கரித்தன [1]" என்று குறிப்பிட்டுள்ளார்.

காந்தி யார்? - தமிழ்ப் பண்ணை வெளியீடு
கவிஞர் களஞ்சியம்
தமிழ்ப் பண்ணை புத்தகங்கள்

நூல்கள்

சின்ன அண்ணாமலை தமிழ்ப் பண்ணை மூலம் பதிப்பித்த நூல்கள்:

நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை தமிழன் இதயம்
அவளும் அவனும்
மலைக்கள்ளன்
பிரார்த்தனை
இசைத் தமிழ்
கவிஞன் குரல்
சங்கொலி
என் கதை
ஆரியராவது திராவிடராவது
அரவணை சுந்தரம்
இலக்கிய இன்பம்
கவிஞர் களஞ்சியம்
பார்ப்பனச் சூழ்ச்சியா?
கவிஞர் களஞ்சியம்
கல்கி கிருஷ்ணமூர்த்தி சங்கீத யோகம்
வீணை பவானி
பார்த்திபன் கனவு
ஏட்டிக்குப் போட்டி
கல்கி கட்டுரைகள்
ராஜாஜி திண்ணை ரசாயனம்
போட்டி
வியாசர் விருந்து
சிறையில் தவம்
அச்சமில்லை
வ.ராமசாமி ஐயங்கார் தமிழ்ப் பெரியார்கள்
ஜப்பான் வருவானா?
தீரர் எஸ்.சத்தியமூர்த்தி அருமைப் புதல்விக்கு
சத்தியமூர்த்தி பேசுகிறார்
டி.கே.சிதம்பர முதலியார் இதய ஒலி
ஏ.கே.செட்டியார் திரையும் வாழ்வும்
ஆர்.கே.சண்முகம் செட்டியார் வாழ்க்கைத் துணை நூல்
தி.சு.அவினாசிலிங்கம் நான் கண்ட மகாத்மா
கக்கன் முன்னேற்றப் பாதை
பொ. திருகூட சுந்தரம் பிள்ளை அவன் வருவானா
கேள்வியும் பதிலும்
துமிலன் சம்ஸார சாகரம்
எல்லைப்புறச் சண்டை
கண்ணதாசன் ஐங்குறுங் காப்பியங்கள்
மலர்க் குவியல்
வெ. சாமிநாத சர்மா காந்தி யார்?
சுதந்திர முழக்கம்
ம.பொ.சிவஞானம் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு
டி.எஸ்.சொக்கலிங்கம் அன்ன விசாரம்
பெரியசாமித் தூரன் இளந்தமிழா
பரதன் ஹாஸ்யச் சுரங்கம்
சாவி வங்காளப் பஞ்சம்
லெ.ராமநாதன் கர்னல் பாஸ்கர்
ந.ராமரத்னம் பூட்டை உடையுங்கள்
ராமு (ராஜாஜியின் புதல்வர்) துன்பத்தில் இன்பம்
கு.சா.கிருஷ்ணமூர்த்தி கலைவாணன்
நாடோடி பிழைக்கும் வழி
தீபன் (தீத்தாரப்பன்) அரும்பிய முல்லை
மாயாவி மலர்ச்செடி
கிருபானந்த வாரியார் அமுதவாக்கு
அருள்வாக்கு
குன்றக்குடி அடிகளார் சொல்லமுதம்
அப்பர் விருந்து
அமுத மொழிகள்
ஈழத்துச் சொற்பொழிவுகள்
கருப்பையா பி.ஏ. இளைஞர் குலத் திலகம்
நாச்சியப்பன் ராஜாஜி முத்துக் குவியல்
சுவை நானூறு
தலையெழுத்து
அழைக்கிறது அன்னை பூமி

உசாத்துணை

இணைப்புக் குறிப்புகள்


✅Finalised Page