கே.எம்.ஜார்ஜ்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|கே.எம்.ஜார்ஜ் கே.எம்.ஜார்ஜ் ( 1914–2002) (கரிம்புமண்ணில் மத்தாயி ஜார்ஜ்) கேரள இலக்கிய விமர்சகர், இலக்கியப் பேராசிரியர். இந்திய இலக்கியங்களைப் பற்றி ஒட்டுமொத்தப் பார்வையை உ...")
 
Line 1: Line 1:
[[File:K. M. George.jpg|thumb|கே.எம்.ஜார்ஜ்]]
[[File:K. M. George.jpg|thumb|கே.எம்.ஜார்ஜ்]]
[[File:இந்திய இலக்கியம்.webp|thumb|இந்திய இலக்கிய அறிமுகம்]]
கே.எம்.ஜார்ஜ் ( 1914–2002) (கரிம்புமண்ணில் மத்தாயி ஜார்ஜ்) கேரள இலக்கிய விமர்சகர், இலக்கியப் பேராசிரியர். இந்திய இலக்கியங்களைப் பற்றி ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கும் முக்கியமான நூல்களை எழுதியவர்
கே.எம்.ஜார்ஜ் ( 1914–2002) (கரிம்புமண்ணில் மத்தாயி ஜார்ஜ்) கேரள இலக்கிய விமர்சகர், இலக்கியப் பேராசிரியர். இந்திய இலக்கியங்களைப் பற்றி ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கும் முக்கியமான நூல்களை எழுதியவர்


Line 19: Line 20:


== அமைப்புப்பணிகள் ==
== அமைப்புப்பணிகள் ==
கேந்திர சாகித்ய அக்காதமி தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பை ஏற்ற கே.எம்,ஜார்ஜ் அதன் தென்னக ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். கேரள சாகித்ய அக்காதமியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் செயலாளராக பணியாற்றினார்


கேரள கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் கே.எம்.ஜார்ஜ்
* கேந்திர சாகித்ய அக்காதமி தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பை ஏற்ற கே.எம்,ஜார்ஜ் அதன் தென்னக ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
* கேரள சாகித்ய அக்காதமியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் செயலாளராக பணியாற்றினார்
* கேரள கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் கே.எம்.ஜார்ஜ்
* இரண்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியர் சங்கச் செயலாளராக பணியாற்றினார்.
* பாரதீய ஞானபீடம் அமைப்பின் வட்டாரச் செயலர்
* ராஜா ராம் மோகன் ராய் ஃபௌண்டேஷனின் மையக்குழு உறுப்பினர்


== இதழியல் ==
== இதழியல் ==
கே.எம். ஜார்ஜ் சாகித்ய அக்காதமியின் இதழான Indian literature ன் ஆசிரியராக பணியாற்றினார்  
1948 இல் லோகவாணி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் கே.எம். ஜார்ஜ் சாகித்ய அக்காதமியின் இதழான Indian literature ன் ஆசிரியராக பணியாற்றினார்  


== மறைவு ==
== மறைவு ==
Line 121: Line 126:
* Commonwealth Literature – Themes & Techniques
* Commonwealth Literature – Themes & Techniques
* The best of Thakazhi Sivasankara Pillai
* The best of Thakazhi Sivasankara Pillai
*
 
== உசாத்துணை ==
*https://www.veethi.com/india-people/k._m._george-profile-11981-25.htm
*[https://keralaliterature.com/malayalam-wrters-%E0%B4%AE%E0%B4%B2%E0%B4%AF%E0%B4%BE%E0%B4%B3%E0%B4%82-%E0%B4%8E%E0%B4%B4%E0%B5%81%E0%B4%A4%E0%B5%8D%E0%B4%A4%E0%B5%81%E0%B4%95%E0%B4%BE%E0%B4%B0%E0%B5%8D%E2%80%8D/george-dr-k-m-%E0%B4%9C%E0%B5%8B%E0%B4%B0%E0%B5%8D%E2%80%8D%E0%B4%9C%E0%B5%8D%E0%B4%9C%E0%B5%8D-%E0%B4%A1%E0%B5%8B-%E0%B4%95%E0%B5%86-%E0%B4%8E%E0%B4%82/ கேரள இலக்கியம் இணையதளம்]

Revision as of 18:43, 25 March 2023

கே.எம்.ஜார்ஜ்
இந்திய இலக்கிய அறிமுகம்

கே.எம்.ஜார்ஜ் ( 1914–2002) (கரிம்புமண்ணில் மத்தாயி ஜார்ஜ்) கேரள இலக்கிய விமர்சகர், இலக்கியப் பேராசிரியர். இந்திய இலக்கியங்களைப் பற்றி ஒட்டுமொத்தப் பார்வையை உருவாக்கும் முக்கியமான நூல்களை எழுதியவர்

பிறப்பு கல்வி

கே.எம்.ஜார்ஜ் 20 ஏப்ரல் 1914 ல் கேரளத்தில் இன்றைய பத்தனம்திட்டா மாவட்டத்தில் எடையாரன்மூலை என்னும் ஊரில் கரிம்புமண்ணில் குரியன் மத்தாயிக்கும் மறியாம்மைக்கும் பிறந்தார். மலக்கரா ஆரம்பப்பள்ளியிலும் பின்னர் எடையாறன்மூலை மார்த்தோமா பள்ளியிலும், கோழஞ்சேரி செயிண்ட் தாமஸ் பள்ளியிலும் பள்ளிக்கல்வியை முடித்தபின் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜில் புகுமுக ப்படிப்பை முடித்தார்.ஆலுவா யூனியன் கிறிஸ்தவக் கல்லூரியில் கணிதத்தில் பட்டப்படிப்பை முடித்தார். 1941ல் சென்னை பல்கலையில் இருந்து மலையாள இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

ஜார்ஜ் ஏலியாம்மாவை 1944ல் மணந்தார்.

கல்விப்பணி

கே.எம்.ஜார்ஜ் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்றினார். சிம்லா உயர்கல்வி நிலையம், அமெரிக்காவில் சிகாகோ பல்கலை மற்றும் கலிஃபோர்னியா பல்கலை ஆகிய கல்விநிலையங்களில் சிறப்புப்பேராசிரியராகப் பணிபுரிந்தார். ஹவாய் பல்கலையின் கிழக்கு மேற்கு மையத்தில் இந்திய இலக்கியத்தில் மேலைச்செல்வாக்கு பற்றி ஆய்வுசெய்தார்.

இலக்கியப்பணிகள்

கே.எம்.ஜார்ஜ் கேரளக் கலைக்களஞ்சியத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். கேரளக் கலைக்களஞ்சியத் திட்டத்தின் முதன்மை ஆசிரியராகப் பணியாற்றினார். இந்திய ஒப்பிலக்கியத்துறையின் தலைவராகவும் பணியாற்றினார்.

கேரள ஊர்ப்பெயர் வரலாறுகளின் ஆய்விலும் முன்னோடியானவர். கேரள இலக்கியத்தின் வரலாற்றை ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் விரிவாக எழுதினா. இலக்கிய விமர்சனக் கோணத்தில் இந்தியமொழி இலக்கியங்களிலும் மலையாள இலக்கியத்திலும் மேலைநாட்டுச் செல்வாக்கை ஆராய்ந்து வகுத்துரைத்தார்.

கே.எம்.ஜார்ஜின் பணிகள் இரண்டு தளங்களில் இன்று முக்கியமானவையாக கருதப்படுகின்றன. இந்திய இலக்கியத்தை முழுமையாக அறிமுகம் செய்யும் தொகைநூல்களையும், வரலாற்று நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார். இந்திய மொழி இலக்கியங்கள் நடுவே ஒப்பிலக்கிய ஆய்வை உருவாக்கிய முன்னோடியாக மதிக்கப்படுகிறார்

அமைப்புப்பணிகள்

  • கேந்திர சாகித்ய அக்காதமி தொடங்கப்பட்டபோது அதன் பொறுப்பை ஏற்ற கே.எம்,ஜார்ஜ் அதன் தென்னக ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார்.
  • கேரள சாகித்ய அக்காதமியின் நிறுவனர்களில் ஒருவர். அதன் செயலாளராக பணியாற்றினார்
  • கேரள கலைக்களஞ்சியத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் கே.எம்.ஜார்ஜ்
  • இரண்டு ஆண்டுகள் கல்லூரி ஆசிரியர் சங்கச் செயலாளராக பணியாற்றினார்.
  • பாரதீய ஞானபீடம் அமைப்பின் வட்டாரச் செயலர்
  • ராஜா ராம் மோகன் ராய் ஃபௌண்டேஷனின் மையக்குழு உறுப்பினர்

இதழியல்

1948 இல் லோகவாணி இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார் கே.எம். ஜார்ஜ் சாகித்ய அக்காதமியின் இதழான Indian literature ன் ஆசிரியராக பணியாற்றினார்

மறைவு

ஜார்ஜ் 2002ல் திருவனந்தபுரத்தில் மறைந்தார்

விருதுகள்

  • 1987 சோவியத்லாண்ட் நேரு விருது
  • 1988 பத்மஸ்ரீ
  • 1989 கேரள சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப்
  • 1996 எழுத்தச்சன் விருது
  • 1997 சூரநாடு குஞ்ஞன்பிள்ளை விருது
  • 1998 வள்ளத்தோள் விருது
  • 2001 பத்ம பூஷன்

நினைவுகள்

2001ல் கேரள அரசு டாக்டர் கே.எம்.ஜார் நினைவு ஆய்வுமையத்தை தொடங்கியது

இலக்கிய இடம்

தனிப்பட்ட கருத்துக்கள், எதிர்மறைக்கருத்துக்கள் இல்லாத கல்வித்துறை சார்ந்த ஆய்வுமுறையை இந்திய இலக்கியத்தில் அறிமுகம் செய்தவர் கே.எம்.ஜார்ஜ். மிக விரிவான தரவுகள் கொண்டவை அவருடைய எழுத்துக்கள். இந்திய இலக்கியத்தை ஒருங்குதிரட்டி ஓர் அமைப்பாக முன்வைத்தவர். அவருடைய இலக்கியத் தொகைநூல்கள், இலக்கிய வரலாறுகள், ஒப்பிலக்கிய ஆய்வுகள் முக்கியமானவை

நூல்கள்

  • வேதபுஸ்தக மகாத்மியம் 1935
  • சாது கொச்சுஞ்சு 1947
  • ஏகாந்த மண்டலம் 1947
  • ரேடியோ நாடகங்கள் 1947
  • பிரபந்த சந்திரிகா 1953
  • முந்திரிச்சாறு 1950
  • சர்தார் பட்டேல் 1952
  • விசார கௌதுகம் 1952
  • அமெரிக்கா சில வஸ்துதகள் 1953
  • ஜனங்களுடே பாரதம் 1955
  • வளருய்ந்ந கைரளி 1954
  • நிரீக்ஷண நிலையம் 1955
  • தத்வஞானங்கள் புனர்நிர்மாணம் 1955
  • ராமசரிதம் (ஆய்வு) 1956
  • 9 ரேடியோ நாடகங்கள் 1957
  • சம்ஸ்கார சரணி 1957
  • இந்திய சரித்ரத்திலே பூமிசாஸ்திர கடகங்கள் 1962
  • ஜீவசரித்ர சாகித்யம் 1964
  • அமெரிக்கயில் போய கத 1967
  • சோவியத் நாட்டில் 1964
  • அவலோகனங்கள் 1978
  • தமிழ் சாகித்யம் 1977
  • ஏ.ஆர்.ராஜராஜ வர்மா 1979
  • பாரதத்திலே பாஷகள் 1979
  • அன்வேஷணங்கள் படனங்கள் 1980
  • அமெரிக்கயிலே அனுபவங்கள் 1980
  • சாகித்ய விஞ்ஞானமும் விஞ்ஞானசாகித்யமும் 1983
  • என்னே ஆகர்ஷிச்ச பிரதிபாசாலிகள் 1985
  • பாரதிய சாகித்ய படனம் 1985
  • கவிகள் நிரூபணங்கள் 1986
  • கே.எம்.ஜார்ஜ் பிரபந்தங்கள் 1989
  • சோவியத் நாட்டில் வீண்டும் 198
  • அறிவுகள் அவலோகனங்கள் 1991
  • வீக்ஷணங்கள் விசிந்தனங்கள் 1991
  • பாரதிய சாகித்ய சமீக்ஷ 1990
  • என்னே ஞான் காணும்போள் 1999
மொழியாக்கம்
  • எட்வர்ட் ஜென்னர் 1954
  • தோரோ (மொழியாக்கம்) 1962
  • தாகூர் 1962 (மொழியாக்கம்)
  • மூகநர்த்தகன் (ஆசிப் குரிம்போய்) 1990
  • ஸ்னேகத்தின்றே சிக் (தாகூர்) 1955
  • அர்தமானவ் தலமுறைகள் 1985 (மக்ஸிம் கார்க்கி)
ஆங்கிலம்
  • American Life Through Indian Eyes (1967)
  • Malayalam Grammar and Reader (1971)
  • Kumaran Asan (1972)
  • Place Names of Southern India (1986)
  • Kesari Balakrishna Pillai (1989)
  • A Many Branched Tree (1991)
  • Renaissance in Indian Literature and its Social Implications (1991)
  • The Role of Sanskrit in the development of Dravidian Literature (2000)
  • Facets of Indian Literature (1994)
தொகுப்புகள்
  • சர்வ விஞ்ஞானகோசம் தொகுதிகள்
  • மகாகவி உள்ளூர்
  • பாரதிய சாகித்ய சரித்ரம்
  • ஆதுனிக மலையாள சாகித்ய சரித்ரம் பிரஸ்தானங்களிலூடே
ஆங்கில தொகைநூல்கள்
  • Comparative Indian Literature 2vols.(1984)
  • Masterpieces of Indian Literature – 3 vols.
  • Commonwealth Literature – Themes & Techniques
  • The best of Thakazhi Sivasankara Pillai

உசாத்துணை