கவிதைக்காரன் இளங்கோ

From Tamil Wiki

கவிதைக்காரன் இளங்கோ ( ) நவீன தமிழ் கவிஞர் மற்றும் எழுத்தாளர். கணையாழியின் துணையாசிரியராக இருக்கிறார். யாவரும் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு,கல்வி

கவிதைக்காரன் இளங்கோ. ஆம் ஆண்டு வடச்சென்னையில் பிறந்தார். பள்ளிக் கல்வியை தூத்துக்குடி சென்னையில் முடித்தார். இளங்கலை மற்றும் உலவியலில் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.

தனியார் திரைப்படக் கல்வியகத்தில் ஓராண்டு ஒளிப்பதிவு பட்டயப் படிப்பு முடித்துவிட்டு திரைத்துறையில் உதவி ஒளிப்பதிவாளராக பணியிலிருந்தார்த். பொன் உதவி இயக்குநராகவும் சில வருடங்கள் பணி புரிந்திருக்கிறார்.

இப்போது சென்னையில் வசிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

கவிதைக்காரன் இளங்கோ தனது முன்னோடியாக பிரமிள் மற்றும் ஆத்மாநாமை குறிப்பிடுகிறார்.

கவிதைக்காரன் இளங்கோவின் முதல் கவிதைத் தொகுப்பு "ப்ரைலியில் உறையும் நகரம்" டிசம்பர் 20 -2014ல் அன்றைய ஆளுனர் ரோசய்யாவால் ராஜ்பவனில் வெளியிடப்பட்டது.

பனிகுல்லா, மோகன் ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. ப்ரைலியில் உறையும் நகரம், 360 டிகிரி, கோமாளிகளின் நரகம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் ஏழு பூட்டுக்கள் எனும் நாவலும் எழுதியிருக்கிறார். திரைமொழிப் பார்வை எனும் கட்டுரை நூலும் வெளிவந்திருக்கிறது. தனது மகள் தான்யாவை நாவலில் கதாபாத்திரமாக்கியிருக்கிறார்.

கணையாழியின் துணையாசிரியராகவும், யாவரும் இணைய இதழின் ஆசிரியராகவும் இருக்கிறார்.

இலக்கிய இடம்

நூல்கள்

உசாத்துணை