being created

எஸ். டி. சுந்தரம்

From Tamil Wiki
Revision as of 22:28, 21 September 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Image Added.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எஸ். டி. சுந்தரம்

எஸ். டி. சுந்தரம் (சேலம் துரைசாமி சுந்தரம்; பிறப்பு: ஜூலை, 22, 1921; இறப்பு: மார்ச் 3, 1979) கவிஞர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசன ஆசிரியர், திரைப்பாடலாசிரியர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர். தமிழ்நாடு சட்டசபையில் மேலவை உறுப்பினராகப் பணி புரிந்தவர்.

பிறப்பு, கல்வி

சேலம் துரைசாமி சுந்தரம் என்னும் எஸ். டி. சுந்தரம், ஜூலை, 22, 1921ல், சேலம் மாவட்டம் ஆத்தூரில் துரைசாமி - பூங்கோதை அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அடிப்படைக் கல்வி பயின்ற இவர், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்தி வந்த நாடகக்குழுவில் சேர்ந்தார். பால பார்ட் வேடங்களில் நடித்தார்.

சுந்தரத்திற்கு இருந்த தமிழார்வத்தை அறிந்த ராஜமாணிக்கம் பிள்ளை, திருவையாறு அரசுக் கலைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைத்தார். படிக்கும் போதே சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். திருவையாறில் நடந்த வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்துகொண்டார். அதனால் சிறையில் அடைக்கப்பட்டார்.

தனி வாழ்க்கை

1948-ல், ஜெயலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகள், மூன்று மகன்கள்.

நாடக வாழ்க்கை

சிறையில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில்  ‘கவியின் கனவு’ என்ற தலைப்பில் நாடக்ம் ஒன்றை எழுதினார் சுந்தரம். சிறையிலிருந்து வெளிவந்ததும் மீண்டும் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். ‘சக்தி’ கிருஷ்ணசாமியின் நட்புக் கிடைத்தது. அவருடன் இணைந்து ‘சக்தி நாடக சபா’ என்ற நாடகக்குழுவை உருவாக்கினார். அதன் மூலம் தான் எழுதியிருந்த ‘கவியின் கனவு’ நாடகத்தை மேடையேற்றினார். அந்நாடகத்தில் சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி. சுப்பையா உள்ளிட்ட பலர் நடித்தனர். நாடகத்திற்கு மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான முறைகளுக்கும் மேல் இந்நாடகம் மேடையேறியது. ‘கவியின் கனவு ஸ்பெஷல்’ என்று திருச்சியிலிருந்து நாகப்பட்டினம் வரை தனியாக ரயில் விடப்பட்டது.

திரைப்பட வாழ்க்கை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.