under review

எயினந்தையார்

From Tamil Wiki

எயினந்தையார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

எயினனின் தந்தை எயினந்தை. இவர்பாடலில் ”எயின் மன்னன்போல” என்று வருவதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதினார்.

இலக்கிய வாழ்க்கை

எயினந்தையார் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் 43-ஆவது பாடலாக உள்ளது. பாலைத்திணையில் அமைந்த பாடல்.

பாடல்வழி அறியவரும் செய்திகள்
  • பொருள் தேடச் செல்லும் வழி செந்நாய் மானைப் பிடித்துத் தின்றுவிட்டு விட்டுப்போன இறைச்சியைத் தின்பர்.
  • ஒரே ஒரு மதில் சுவரைக் கொண்ட தலைநகரை உடைய மன்னன் அந்த மதிலும் அழியும்போது மனம் நோவது போல தலைவி வருந்தினாள்.

பாடல் நடை

  • நற்றிணை: 43 (பாலைத்திணை)

துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்
என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு
அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்
வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே
மெய் மலி உவகை ஆகின்று இவட்கே
அஞ்சல் என்ற இறை கைவிட்டென
பைங் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின்
களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில்
ஓர் எயில் மன்னன் போல
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே

உசாத்துணை


✅Finalised Page