எமிலி டிரீ கிளேஷேர்

From Tamil Wiki
Revision as of 18:38, 19 June 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) (திருமதி பௌர்ன், பௌர்ன் சீமாட்டி) இந்திய தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ஓவியர். கல்வியாளர் ஆல்பர்ட் பௌர்னின் மனைவி == வாழ்க்க...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) (திருமதி பௌர்ன், பௌர்ன் சீமாட்டி) இந்திய தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். ஓவியர். கல்வியாளர் ஆல்பர்ட் பௌர்னின் மனைவி

வாழ்க்கை

ஆல்பர்ட் பௌர்ன் எமிலி டிரீ கிளேஷேர் (Emily Tree Glaisher) ஐ 1888 ல் மணந்துகொண்டார். எமிலி புகழ்பெற்ற தாவரவியல் நிபுணர். ஓவியரும்கூட. கொடைக்கானலில் தாவரவியலில் ஆய்வுசெய்த பிலிப் ஃபைசனுடன் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார். அவருடைய ஓவியங்களை பிலிப் ஃபைசன் தன்னுடைய நீலகிரி மற்றும் பழனி மலைகளின் தாவரங்கள் ( The Flora of the Nilgiri and Pulney Hill-tops)என்னும் நூலில் பயன்படுத்தியிருக்கிறார்.

தனிவாழ்க்கை

எமிலி - பௌர்ன் தம்பதிகளுக்கு ஒரு மகள். பின்னாலில் இந்திய வனத்துறை அதிகாரியான ஸ்டீபன் காக்ஸ் Stephen Cox அவளை மணர்ந்தார்.

மறைவு

எமிலி ட்ரீ கிளேஷர் 18 செப்டெம்பர் 1954ல் மறைந்தார்.

உசாத்துணை