under review

உ.வே.சாமிநாதையர் வாழ்க்கை ஆண்டுவரிசையில்: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
No edit summary
Line 1: Line 1:
[[File:உவேசா.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
[[File:உவேசா.jpg|thumb|உ.வே.சாமிநாதையர்]]
உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை ஆண்டு வரிசையில். தொகுப்பு முனைவர் முனைவர் இரா. வெங்கடேசன்
உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை ஆண்டு வரிசையில். தொகுப்பு முனைவர் முனைவர் இரா. வெங்கடேசன்
== ஆண்டு வரிசை ==
== ஆண்டு வரிசை ==
1903, நவம்பர், கும்பகோணம் கல்லூரியிலிருந்து பணிமாறுதல் பெற்று வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்றார்; அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே. பி. பில்டர்பெக் என்ற ஆங்கிலேயர். மார்ச் 31, 1919 வரை 16 ஆண்டுகள் இக்கல்லூரியில் பணியாற்றினார்
1903, நவம்பர், கும்பகோணம் கல்லூரியிலிருந்து பணிமாறுதல் பெற்று வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்றார்; அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே. பி. பில்டர்பெக் என்ற ஆங்கிலேயர். மார்ச் 31, 1919 வரை 16 ஆண்டுகள் இக்கல்லூரியில் பணியாற்றினார்
Line 265: Line 264:
1932, ஜூன் 13, கி.வா. ஜகந்நாதன் திருமணத்தை நடத்தி வைத்தார்
1932, ஜூன் 13, கி.வா. ஜகந்நாதன் திருமணத்தை நடத்தி வைத்தார்


1932, ஆகஸ்ட் 3, அன்று சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'டாக்டர்’ (ஞிஷீநீtஷீக்ஷீ ஷீயீ லிவீtமீக்ஷீணீtuக்ஷீமீ) பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது
1932, ஆகஸ்ட் 3, அன்று சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'டாக்டர்’ (Doctor of Literature) பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது


1932, கடம்பர் கோயில் உலா பதிப்பை வெளியிட்டார்
1932, கடம்பர் கோயில் உலா பதிப்பை வெளியிட்டார்
Line 654: Line 653:


2018, ஜூலை 12, உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி - 1; 1877 - 1900) பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு உ.வே.சா. நூலக வெளியீடாக வெளியிடப்பட்டது.
2018, ஜூலை 12, உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி - 1; 1877 - 1900) பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு உ.வே.சா. நூலக வெளியீடாக வெளியிடப்பட்டது.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan21/41596-18 உ.வே.சா. நினைவுகள் - 18]
* [https://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-jan21/41596-18 உ.வே.சா. நினைவுகள் - 18]
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 16:35, 28 November 2022

உ.வே.சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையரின் வாழ்க்கை ஆண்டு வரிசையில். தொகுப்பு முனைவர் முனைவர் இரா. வெங்கடேசன்

ஆண்டு வரிசை

1903, நவம்பர், கும்பகோணம் கல்லூரியிலிருந்து பணிமாறுதல் பெற்று வந்து சென்னை மாநிலக் கல்லூரியில் ஆசிரியர் பணியை ஏற்றார்; அப்போது கல்லூரி முதல்வராக இருந்தவர் ஜே. பி. பில்டர்பெக் என்ற ஆங்கிலேயர். மார்ச் 31, 1919 வரை 16 ஆண்டுகள் இக்கல்லூரியில் பணியாற்றினார்

1903, (சுபகிருது - தை) தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக் கோவையின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1903, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பத்துப்பாட்டினுள் ஐந்தாவதாகிய முல்லைப்பாட்டு மூலத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார். இதன் மூன்றாம் பதிப்பு 1927-ல் வெளிவந்தது

1903, திரிசிரபுரம் மஹாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வடமொழி நூலிலிருந்து மொழிபெயர்த்து இயற்றிய வீரவனப்புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்

1903, மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய சீகாழிக் கோவைக்கு அரும்பதவுரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்

1904, ஜனவரி, திருவேட்டீசுவரன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் மாதம் 20 ரூபாய் வாடகையில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து குடியேறினார்

1904,ஜூன், பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்

1904, (குரோதி - புரட்டாசி) சேறைக்கவிராச பிள்ளை இயற்றிய திருக்காளத்தி நாதருலா நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்

1904, (குரோதி - கார்த்திகை) திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவண நாதருலா, முதல் பதிப்பை வெளியிட்டார்

1904, திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் இயற்றப்பெற்ற சூரைமாநகர்ப் புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்

1904, சேறைக்கவிராச பிள்ளையால் இயற்றப்பெற்ற திருக்காளத்தி நாதருலாவின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1905, ஜனவரி 13, மயிலாப்பூர், பென்னாத்தூர் சுப்பிரமணிய ஐயர் உயர்நிலைப் பள்ளியின் தொடக்கவிழாவில் பங்கேற்று வரவேற்புப் பத்திரம் வாசித்தார்

1905, மார்ச் 24, வெள்ளிக் கிழமை, இவரது தாயார் திருமதி சரஸ்வதியம்மாள் மறைவுற்றார்

1905, இவரது மணிமேகலைக் கதைச்சுருக்கம், சென்னைப் பல்கலைக்கழக எப். ஏ. வகுப்புக்குப் பாடமாக வைக்க ஏற்பாடானது

1905, அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருவாருலாவின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1905, சென்னைப் பல்கலைக்கழக பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்காகப் புறப்பொருள் வெண்பாமாலையின் முதல் நான்கு படலங்களை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்

1905, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய திருவாரூர்த் தியாகராசலீலையைப் பதிப்பித்து வெளியிட்டார், இதன் இரண்டாம் பதிப்பை 1928-ல் வெளியிட்டார்

1906, ஜனவரி 1, அரசாங்கத்தார் மகாமகோபாத்தியாயர் (பெரும்பேராசிரியர்) என்ற பட்டத்தை இவருக்கு அளித்து மரியாதை செய்தனர்

1906, மார்ச் 17, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக மகாமகோபாத்தியாயர் பட்டம் பெற்றதற்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது; பாரதியார் இவ்விழாவில் கலந்துகொண்டு இவரைப் பாராட்டி கவிதை எழுதி படித்தார்

1906, ஜூலை 12, வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார். பாண்டித்துரைத் தேவர் இப்பதிப்பிற்கு ரூபாய் 200/- அளித்தார்

1906, செப்டம்பர் 29, உ.வே. சாமிநாதையரின் தமிழ்மொழிப் பற்றைப் பாராட்டி இந்தியா இதழில் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் குறிப்பொன்றை எழுதி வெளியிட்டார்

1906, அக்டோபர் 13, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ் மாணவர்கள் சங்கத்து ஆண்டு விழாவில் உரையாற்றினார்

1906, செல்லிநகர்ப் பெரும்பற்றப்புலியூர்நம்பி இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பை 1927-ல் வெளியிட்டிருக்கிறார்

1907, டிசம்பர், சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1907, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களுக்காகச் சிலப்பதிகாரம் கொலைக்களக் காதை: அடியார்க்கு நல்லாருரை, புறநானூறு: மூலமும் உரையும் (200 - 266), பத்துப்பாட்டு: பொருநராற்றுப்படை நச்சினார்க்கினியருரை ஆகிய இவைகள் குறிப்புரை முதலியவற்றுடன் பதிப்பித்து வெளியிட்டார்

1907, தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர் கலம்பகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்; இதன் இரண்டாம் பதிப்பை 1908-ல் வெளியிட்டிருக்கிறார்

1907, திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய தனியூர்ப்புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்

1907, பலபட்டடைச் சொக்கநாதக் கவிராயர் இயற்றிய தேவையுலாவின் முதல் பதிப்பை வெளியிட்டார்; இதன் இரண்டாம் பதிப்பு, 1925-ல் வெளிவந்தது

1907, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மண்ணிப்படிக்கரைப் புராணத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்

1908, சித்தப்பா மகள் திருமணத்திற்காகக் குடும்பத்தாருடன் ஸ்ரீரங்கம் சென்று வந்திருக்கிறார்

1908, செப்டம்பர், 14, வ. உ. சிதம்பரம் பிள்ளை, கோயம்புத்தூர்ச் சிறையிலிருந்து தாம் செய்துவரும் திருக்குறள் ஆராய்ச்சி தொடர்பான ஐயங்களுக்கு விடைகேட்டு இவருக்குக் கடிதம் எழுதினார்

1908, (பிலவங்க - தை) திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்; 1919 (காளயுக்தி - மாசி) இரண்டாம் பதிப்பு வெளிவந்திருக்கிறது

1909, ஆகஸ்ட் 5, தமது புத்தக ஆராய்ச்சிச் செலவுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகத் தீர்மானித்து அரசு வழங்கிய உத்தரவு இவருக்குக் கிடைக்கப்பெற்றது

1909, ஆகஸ்ட் 23, சென்னைப் பல்கலைக்கழக பி. ஏ. வகுப்பு மாணவர்களுக்காகச் சிறுபாணாற்றுப்படை நூலைப் பதிப்பித்து வெளியிட்டார்

1909, சென்னை, திருவல்லிக்கேணியில் சொந்தமாக வீடு வாங்கி, தமக்கு வேலைபெற்றுத் தந்த தியாகராச செட்டியார் நினைவாகத் 'தியாகராச விலாசம்’ என்று பெயரிட்டு மகிழ்ந்தார்; வீட்டின் விலை ரூ 4,400/-

1909, ரதசப்தமியில் திருவாவடுதுறை மடத்தில் நடைபெற்ற குருபூஜை விழாவில் கலந்துகொண்டார்

1909, மே 21, பாரிஸிலிருந்து ஜூலியன் வின்சன், சீவகசிந்தாமணியின் இரண்டாம் பதிப்பைக் கண்டு பாராட்டி இவருக்குக் கடிதம் எழுதினார்

1910, ஆகஸ்ட் 22, சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையின் ஆண்டு விழாவில் பங்கேற்று உரையாற்றினார்

1910, திருக்கைலாயப்பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1910, சென்னையில் நடைபெற்ற திராவிட பாஷா சங்கக் (Dravidian Board of Studies, Madras University) கூட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தினார்

1911, டிசம்பர் 12, ஜார்ஜ் மன்னர் முடிசூட்டு விழாவினையட்டி ரூ.100/- காரனேஷன் பென்ஷன் ஆண்டுக்கொருமுறை வழங்குவதற்கான அரசு உத்தரவு இவருக்குக் கிடைக்கப் பெற்றது

1911, சென்னைப் பல்கலைக்கழக பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்காகப் புறநானூற்றின் 101 - 125-ஆம் பாடல்களை மட்டும் பதிப்பித்து வெளியிட்டார்

1912, ஜனவரி 21, கவர்னர் 'கார்மைக்கேல்’ பிரபு சென்னை மாநிலக் கல்லூரிக்கு வருகைபுரிந்தார்; அவருக்குத் தமிழ்ச் சுவடிகளைக் காட்டி, சுவடியில் எப்படி எழுதுவது என்பதை விளக்கியுடைத்தார்; அப்படியே தமிழ் வகுப்பிற்கும் அழைத்துச் சென்று காட்டினார்

1912, ஏப்ரல், திருக்காளத்திப் புராணத்தை அச்சிட்டு வெளியிட்டார்; காளத்தியில் நடைபெற்ற மகாகும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டார்

1912, செப்டம்பர் 18, திருக்காளத்திப் புராணம் நன்முறையில் அச்சிட்டு நிறைவேறியது பற்றி, காளஹஸ்தி சென்று ஒருவாரம் அங்கேயே தங்கியிருந்து தரிசனம் செய்தும், கிரிப்பிரதட்சிணமும் செய்தார்

1912, நவராத்திரி விழாவுக்கு வரவேண்டுமென்று இராமநாதபுரம் சேதுபதி மன்னரின் அழைப்பை ஏற்று இராமநாதபுரம் சென்றுவந்தார்

1912, சென்னைப் பல்கலைக்கழக பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்காக மலைபடுகடாம் மூலத்தை நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்

1913, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதிக் குழு உறுப்பினராக இருந்து செயல்பட்டார்

1914, தொட்டிக்கலை ஸ்ரீசுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருத்தணிகைத் திருவிருத்தத்தைப் பதிப்பித்து வெளியிட்டார்

1915, பிப்ரவரி 2, 60-ஆம் வயது நிறைவுற்றது; துணைவியாருடன் திருக்காளத்தி சென்று தரிசனமும் கிரிப்பிரதட்சிணமும் செய்துவிட்டு வந்தார்

1915, ஜூலை 10, திருவண்ணாமலைக்குச் சென்று ஸ்ரீரமண மகரிஷியைத் தரிசித்தார்

1915, புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1916, மே 6, 7, திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள இளங்காடு என்னும் ஊரில் நடைபெற்ற நற்றமிழ்ச் சங்க ஆண்டு விழாவிற்குத் தலைமை வகித்தார்

1917, ஜனவரி 31, காசி, பாரத தர்ம மகா மண்டலத்தார் 'திராவிட வித்யாபூஷணம்’ (திராவிடக் கலையழகன்) எனும் பட்டத்தை இவருக்கு வழங்கினார்கள்

1917, மார்ச் 1, காசி, சர்வகலாசாலையின் (பல்கலைக்கழகம்) தேர்வுக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்

1917, மே, 8, மனைவி 'மதுராம்பாள்’ மறைவுற்றார்

1918, மார்ச் 30, சென்னைக்கு வந்திருந்த பாலகங்காதர திலகரைச் சந்தித்தார்

1918, மே 15, புதுச்சேரியில் நடந்த சங்கர ஜெயந்தி விழாவில் தலைமை வகித்துச் சிலப்பதிகாரத்தைப் பற்றி உரை நிகழ்த்தினார்; அவ்விழாவிற்கு வந்திருந்த பாரதியாரைச் சந்தித்து மகாமகோபாத்தியாய பட்டம் பெற்றபோது தம்மைப் பற்றிப் பாடிய பாடல்களுக்காக நன்றி தெரிவித்தார்

1918, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1918, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் மயிலைநாதருரையும் முதல் பதிப்பை வெளியிட்டார்

1918, ஜூன் 1, பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் முதல் பதிப்பை வெளியிட்டார்

1919, மார்ச் 31, சென்னை மாநிலக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்

1919, ஏப்ரல் 1, சென்னைக்கு வந்திருந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூர் அவர்களைச் சந்தித்தார், அன்று மாலையில் தாகூர் அவர்கள் இவரின் வீட்டிற்கு வந்து இல்லம் வந்து பழந்தமிழ் சுவடிகளைப் பார்வையிட்டார்

1920, ஜனவரி 1, கும்பகோணம் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய ஜே. எம்.ஹென்ஸ்மேன் யாழ்ப்பாணத்திலிருந்து மெட்ராஸ் மெயில் வழியாக இவருக்கு ஒரு கடிதம் எழுதினார்

1920, ஏப்ரல் 14, சிதம்பரம் கோவில் சம்பந்தமான வழக்கொன்றிற்காகத் தீட்சிதர்களுக்கு ஆதரவாகச் சிதம்பரம் சப்கோர்ட்டில் சாட்சியம் அளித்தார்

1920, ஏப்ரல் 15, திருவாவடுதுறை மடத்தில் 17-ஆம் பட்டத்திலிருந்து விளங்கிய அம்பலவாண தேசிகர் மறைவிற்குப் பின்னர் 18-ஆம் ஆதீனத் தலைவர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்றார்; அதுமுதல் சிலகாலம் மடத்திலேயே தங்கியிருந்தார்

1920, திருவாவடுதுறையில் இருந்த இவர் நவராத்திரி நாளன்று மடத்தில் 'சுப்பிரமணிய தேசிகர் கலாசாலை’ யைத் தொடங்கினார்

1920, ஐங்குறுநூறு மூலமும் பழைய உரையும் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1920, பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1920, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும், அடியார்க்கு நல்லார் உரையும் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1920, மாணவர்களுக்காகச் சிலப்பதிகாரம் - புகார்க்காண்டத்திலுள்ள இந்திரவிழவூரெடுத்த காதையை மட்டும் குறிப்புரை எழுதியமைத்து அச்சிட்டு வெளியிட்டார்

1921, மணிமேகலை மூலமும் அரும்பதவுரையும், இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1922, சீவகசிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1922, ஜனவரி 14-ல் வேல்ஸ் இளவரசர் சென்னைக்கு வருகைபுரிந்ததின் நினைவாகப் புலவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் விருதுகள் அளிக்கப்பட்டன. இவருக்கும் 'கில்லத்’ பட்டம் அளிக்கப்பட்டது

1923, புறநானூறு மூலமும் பழைய உரையும், இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1923, உதயணன் சரித்திரச் சுருக்கத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1923, திருப்பூவணம் கந்தசாமிப் புலவர் இயற்றிய திருப்பூவணநாதருலாவின் முதல் பதிப்பு வெளியிட்டார்; இதன் இரண்டாம் பதிப்பு, 1923இல் வெளிவந்தது

1924, பிப்ரவரி 18, பெருங்கதை மூலமும் அரும்பதவுரையும் முதல் பதிப்பை வெளியிட்டார்

1924, புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1924, ஜூலை, சிதம்பரம், மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்றார், 1927-ஆம் ஆண்டு வரை அந்தப் பணியில் இருந்தார்

1924, டிசம்பர் 22-24, சென்னையில் நடைபெற்ற மூன்றாவது ஓரியண்டல் மகாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்

1924, ஜூன் 8, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24-ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்துப் பொற்கிழி பெற்றார்

1925, பௌத்த மதத்துள் மும்மணிகள் என்று வழங்குகின்ற புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் நூலின் ஐந்தாம் பதிப்பை வெளியிட்டார்

1925, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்

1925, அந்தகக்கவி வீரராகவ முதலியார் இயற்றிய திருவாருலாவின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1925, சேறைக்கவிராச பிள்ளை இயற்றிய திருக்காளத்தி நாதருலாவின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1925, ஆகஸ்ட் 5, புதுக்கோட்டை, சன்மார்க்க சபையின் 16-வது ஆண்டுவிழாவிற்குத் தலைமை தாங்கினார்

1925, ஜூன் 8, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 25-வது ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் ரூ. 5000/- பொற்கிழி பெற்றார்; பொற்கிழி வழங்கினவர்கள் பெயர்களை அதே ஆண்டு வெளிவந்த நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரைப் பதிப்பு முன்னுரையில் குறிப்பிட்டு நன்றி பாராட்டினார்; அதே விழாவில் காஞ்சி காமகோடிபீடத் தலைவர் சங்கராச்சாரிய சுவாமிகள் 'தாஷிணாத்யகலாநிதி’ (தெற்கத்திய கலைச் செல்வன்) என்ற பட்டத்தை இவருக்கு அளித்தார்

1926, ஜனவரி 10, ஞாயிறு, சிதம்பரத்திலிருந்து சென்னைக்குப் பயணம் மேற்கொண்டார்

1926, அக்டோபர் 15, மீனாட்சி கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்பு விழாவிற்கு வருகைபுரிந்த கவர்னர் கோஷன் துரை அவர்களைப் பாராட்டி வரவேற்புப் பத்திரம் வாசித்து அளித்தார்

1926, பௌத்த மதத்துள் மும்மணிகள் என்று வழங்குகிற புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் நூலின் ஆறாம் பதிப்பை வெளியிட்டார்

1926, உதயணன் சரித்திரச் சுருக்கத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1926, திருக்கைலாயப்பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1926, திருவாவடுதுறை ஆதீனத்துத் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் இயற்றிய திருவாவடுதுறைக்கோவையைப் பதிப்பித்து வெளியிட்டார்

1927, பிப்ரவரி 21, மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் சேது சம்ஸ்தான வித்வான் ரா.ராகவையங்கார், "கம்பர் கூறும் பெண்பாலியல்பு" என்னும் பொருள் பற்றி ஆற்றிய சொற்பொழிவிற்கு தலைமை தாங்கினார்

1927, பிப்ரவரி, பிற்காலத்தில் இவருக்குப் பெருந்துணையாக இருந்து விளங்கிய கி.வா. ஜகந்நாதையர் சந்திப்பு

1927, சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத உரையும் அடியார்க்கு நல்லார் உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1927, மார்ச் 11, மீனாட்சி தமிழ்க் கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்

1927, மார்ச் 18, சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பினார்

1927, நவம்பர் 1, 10, 12, 16, 18; டிசம்பர் 6, 9, 12, 14, 17-ஆம் நாட்களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்றினார்; இந்தச் சொற்பொழிவிற்காகப் பலகலைக்கழகத்தார் ரூ. 500/- சன்மானம் அளித்தனர். இந்தத் தொகையைக் கொண்டுதான் சென்னையில் தாம் வசித்துவந்த தியாகராச விலாசத்திற்கு மின் விளக்குப் போடச் செய்தார்; இது நடந்தது கார்த்திகை மாதம்

1928, ஏப்ரல் 4-5, டி.கே.சி. அழைப்பின்பொருட்டுத் திருநெல்வேலியில் தமிழ் இலக்கியச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கம்பன் விழாவிற்குத் தலைமை தாங்கினார்; கி.வா.ஜ. உடன் சென்று வந்தார்

1928, ஜூன் 6, திருப்பனந்தாள் மடத்தில் நடைபெற்ற குமரகுருபரர் திருநானாவில் கலந்துகொண்டார்

1928, செப்டம்பர் 2, மாயூரநாதர்கோயில் மகாகும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்

1929, ஏப்ரல் 9, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டார்

1929, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் நூலின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1929, செப்டம்பர் 15, சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி பெறுபவருக்குத் திருப்பனந்தாள் மடத்தின் சார்பில் ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் திட்டத்தின் முதல் விழா கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் இவரது தலைமையில் நடைபெற்றது; இவரின் மாணவர் மாணாக்கர் வி. மு. சுப்பிரமணிய ஐயர் முதல் பரிசைப் பெற்றார்

1929, ஆகஸ்ட் 16, இராஜ இராஜேசுவர சேதுபதியின் மைந்தர் சண்முகநாத சேதுபதியின் பட்டாபிஷேக விழாவில் கலந்துகொண்டார்; அப்போது முகவையிலிருந்த இராகவையங்கார் வீட்டில் தங்கியிருந்து அவர் இயற்றியிருந்த 'பாரி காதை’யைக் கி.வா.ஜ. படிக்கச் சொல்லிக் கேட்டறிந்திருக்கிறார்

1929, டிசம்பர் 8, மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 28-ஆம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டார்; சென்னை மாநிலக் கவர்னராக இருந்த கனம் நார்மன் எட்வர்டு மார்ஷ்பாங்க்ஸ் விழாவிற்குத் தலைமை தாங்கியுள்ளார்

1929, சுயாட்சிக் கட்சியின் சார்பில், சென்னை மாகாண முதல்வராக இருந்த ப. சுப்பராயன் அவர்கள் வீட்டிற்கு வந்து இவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார்

1930, ஜனவரி, கவிச்சக்கரவர்த்தியாகிய ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி மூலமும் உரையும் முதல் பதிப்பை வெளியிட்டார்

1930, பிப்ரவரி 27-28, வியாழன், சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் 'பாரதமும் திராவிட பாஷைகளும்’ எனும் தலைப்பில் ம.வீ. ராமானுஜாசாரியார் ஆற்றிய சொற்பொழிவில் பங்கேற்றார்; திருச்சி சாரநாதையங்கார், தாவுத்ஷா உள்ளிட்ட அன்பர்களை அங்குச் சந்தித்தார்

1930, மார்ச் 10, பேரர் (சா.கல்யாணசுந்தரமையரின் மகன்) சுப்பிரமணியத்திற்குத் திருமணம் நடைபெற்றது

1930, மார்ச் 21, சென்னை, வில்லிவாக்கத்தில் நடைபெற்ற திருமுறை விழாவில் கலந்துகொண்டார்

1930, சொக்கநாதப் புலவர் இயற்றிய மதுரை சொக்கநாதர் தமிழ்விடு தூது முதல் பதிப்பை வெளியிட்டார். இதன் இரண்டாம் பதிப்பு 1932-ல் வெளிவந்தது

1930, மாயூரத்திலிருந்த இராமையர் இயற்றிய மாயூரமென்று வழங்குகின்ற திருமயிலைத் திரிபந்தாதி இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1930, சென்னைப் பல்கலைக்கழக பி.ஏ. வகுப்பு மாணவர்களுக்காக சிலப்பதிகாரம் - மதுரைக்காண்டம் - ஊர்க்காண் காதை, அடைக்கலக்காதையைப் பதிப்பித்து வெளியிட்டார்

1931, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1931, மணிமேகலை மூலமும் உ.வே.சா. அரும்பதவுரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1931, பத்துப்பாட்டு மூலம் முதல் பதிப்பை வெளியிட்டார்

1931, திருவாவடுதுறையாதீனத்து மகாவித்வான் ஸ்ரீகச்சியப்ப முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1931, புராணத்திருமலைநாதர் இயற்றிய மதுரை சொக்கநாதருலா பதிப்பை வெளியிட்டார்

1932, ஜனவரி 11, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பேரகராதித் திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்

1932, ஜனவரி 13, துறைசைக்குப் பயணம் மேற்கொண்டார்.ஜனவரி 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களும் துறைசையிலேயே தங்கியிருந்து ஜனவரி 16 அன்று நடைபெற்ற துறைசைக் குருபூஜையில் கலந்துகொண்டுவிட்டு ஜனவரி 18 அன்று துறைசையிலிருந்து திருவிடைமருதூருக்குப் பயணம் மேற்கொண்டார்

1932, பிப்ரவரி 7, களவியற் காரிகை நூலினை இவரது வீட்டிற்கு வந்து எஸ். வையாபுரிப்பிள்ளை அளித்துவிட்டுச் சென்றார்; பிப்ரவரி 10ஆம் தேதியன்றும் தினகர வெண்பா கேட்பதற்கு வையாபுரிப்பிள்ளை இவரது வீட்டிற்கு வந்து சென்றார்

1932, பிப்ரவரி 7, ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மியம்மாள் என்பவர் இவரது வீட்டிற்கு வந்து சந்தித்துத் தாம் செய்யும் தமிழ் போர்டில் ஆலோசகராக இருக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்

1932, மார்ச் 18, கி.வா. ஜகந்நாத ஐயர், வி.மு. சுப்பிரமணிய ஐயர் இருவருடன் திருவான்மியூர்க்குப் பயணம் மேற்கொண்டார்

1932, ஏப்ரல் 15, மயிலாப்பூரில் நடைபெற்ற வான்மீகி நாள் விழாவில் கலந்துகொண்டார்

1932, ஏப்ரல் 17, மு.ராகவையங்கார் இவரது வீட்டிற்கு வந்து சந்தித்தார்; ஏப்ரல் 25, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி வந்து சந்தித்துவிட்டுச் சென்றார்

1932, ஏப்ரல் 26, எஸ். வையாபுரிப்பிள்ளை இவரது வீட்டிற்கு வந்து மூன்று அச்சிட்ட தினகர வெண்பா பிரதிகளைக் கொடுத்துவிட்டுச் சென்றார்; இரவு மன்னார்குடிக்குப் பயணம் மேற்கொண்டார்

1932, ஏப்ரல் 27, மன்னார்குடி சென்றடைந்தார்; ஏப்ரல் 28, மன்னார்குடி கௌமார குருகுல ஆண்டு விழாவில் பங்கேற்று 'பண்டைத் தமிழர்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இவருடன் முத்தையா முதலியார், த.வே. உமாமகேசுவரம் பிள்ளை, டி.எஸ். கந்தசாமி பிள்ளை, ரெண்டாப் துரை, சபாபதிபிள்ளை ஆகியோர் உரை நிகழ்த்தியுள்ளனர்

1932, ஜூன் 13, கி.வா. ஜகந்நாதன் திருமணத்தை நடத்தி வைத்தார்

1932, ஆகஸ்ட் 3, அன்று சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு 'டாக்டர்’ (Doctor of Literature) பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தியது

1932, கடம்பர் கோயில் உலா பதிப்பை வெளியிட்டார்

1932, சின்னப்ப நாயக்கர் இயற்றிய பழனிப்பிள்ளைத்தமிழ் பதிப்பை வெளியிட்டார்

1932, கொட்டையூர் ஸ்ரீசிவக்கொழுந்து தேசிகர் இயற்றிய பிரபந்தங்கள், முதல் பதிப்பை வெளியிட்டார்

1932, பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய ஸ்ரீபத்மகிரி நாதர் தென்றல்விடுதூது பதிப்பை வெளியிட்டார்

1932, பலபட்டடைச் சொக்கநாத பிள்ளை இயற்றிய மதுரை மும்மணிக்கோவை முதல் பதிப்பை வெளியிட்டார்

1933, டிசம்பர் 23, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (அப்போது பச்சையப்பன் கல்லூரி ஜார்ஜ் டவுனில் இருந்தது) நடைபெற்ற தமிழ் அன்பர் மகாநாட்டில் வரவேற்புரை ஆற்றினார்

1933, ஜனவரி 13, அத்வைத சங்கத்தில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டார்

1933, ஜனவரி 31, துறைக்குப் பயணம் மேற்கொண்டார். துறைசையில் பிப்ரவரி 1-ஆம் நாள் நடைபெற்ற ஸ்ரீநமச்சிவாய மூர்த்தி குருபூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்

1933, பிப்ரவரி 9, ஆந்திரப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினராக நியமித்ததற்கு உடம்பட்டுக் கடிதம் எழுதி அனுப்பினார்

1933, ஏப்ரல் 27, திருவான்மியூர் சென்று, கண் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்த கணேசையரைச் சந்தித்துவிட்டுப் பின்பு மருந்தீஸ்வரர் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தார்

1933, மே 8, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சமஸ்கிருதமொழிக் கூட்டத்திற்குச் சென்றுவந்தார்

1933, மே 29, துறைசைக்குப் பயணம் மேற்கொண்டார்.அங்கிருந்து புறப்பட்டு ஜூன் 1 காலை குடந்தை சென்று ம.வீ. ராமானுஜாசாரியாரைச் சந்தித்தார். ஜூன் 3, பனசை, ஜூன் 4, திருவிடைமருதூர், ஜூன் 10, பனசையில் குமரகுருபர சுவாமிகள் குருபூஜையில் பங்கேற்றார்

1933, ஆகஸ்ட் 1, சென்னைப் பல்கலைக்கழகச் செனட் மண்டபத்தில் கவர்னருக்கு நடந்த தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்

1933, ஆகஸ்ட் 2, திருக்குற்றாலத்திற்குச் சென்று வந்தார்

1933, செப்டம்பர் 9, பங்களூருக்குப் (பெங்களூர்) பயணம் மேற்கொண்டார்

1933, டிசம்பர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தின் முதல்பாகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1933, காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பாவின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1933, சங்கரநயினார் கோயிற் சங்கரலிங்க உலாவின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1933, பாசவதைப் பரணி, குறிப்புரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்

1934, ஜனவரி 16, சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற ஆந்திரப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்; அங்கு வந்திருந்த வையாபுரிப்பிள்ளை, பெ.நா.அப்புஸ்வாமி ஐயர், பி.ஸ்ரீ. ஆசார்யர் ஆகிய மூவரையும் சந்தித்தார்

1934, பிப்ரவரி, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1934, பிப்ரவரி 19, கும்பகோணம் கல்லூரி ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார்

1934, பிப்ரவரி 25, ராமகிருஷ்ணமடம் உயர்நிலைப் பள்ளி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார்

1934, பிப்ரவரி 26, சென்னை, ரானடே ஹாலில் நடைபெற்ற தமிழன்பர் மாநாட்டில் கலந்துகொண்டார்

1934, பிப்ரவரி 27, சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி மாணவர் சங்க விழாவிற்குத் தலைமை தாங்கினார்

1934, மார்ச் 9, கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தமிழ்ச்சங்க ஆண்டு நிறைவுவிழாவிற்குத் தலைமை தாங்கினார்

1934, மார்ச் 15, கி.வா. ஜகந்நாதனுடன் இரயிலில் தஞ்சைக்குப் பயணம் மேற்கொண்டார்

1934, மார்ச் 16, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் நாண்மங்கல விழாவில் பங்கேற்றார்; பண்டிதமணி கதிரேசஞ்செட்டியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார் முதலியோர் இந்த விழாவில் கலந்துகொண்டு உரை ஆற்றியுள்ளனர்

1934, மார்ச் 17-18, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் 23ஆம் ஆண்டு விழாவிற்குத் தலைமை தாங்கினார்; விழாவில், சதாசிவபண்டாரத்தார், சோமசுந்தரபாரதியார், வேங்கடாசலம் பிள்ளை, ரா.வாசுதேவசர்மா, பி.ஸ்ரீ. ஆசாரியார் முதலியோர் உரையாற்றினர். மார்ச் 19, இரவு போட்மெயிலில் சென்னைக்குப் புறப்பட்டார்; உமாமகேசுவரம் பிள்ளை இரயிலடிக்கு வந்து வழியனுப்பிவைத்தார்; 20-ஆம் தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்தார்; 21-ஆம் தேதி, உமாமகேசுவரம் பிள்ளை முதலியவர்களுக்குக் கடிதம் எழுதினார்

1934, மார்ச் 24, சென்னை, அடையாறில் நடைபெற்ற வால்மீகி திருநாளுக்குச் சென்று வந்தார்

1934, மார்ச் 26, வேப்பேரி செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்குத் தலைமைதாங்கினார்; கோதைநாயகி அம்மையார் 'பாரதியாரின் கவிநயம்’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்

1934, ஏப்ரல் 13, தமிழ் அன்பர் மகாநாட்டுக் காரிய நிர்வாகச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார்

1934, ஏப்ரல் 20, சிதம்பரத்திற்குப் பயணம் மேற்கொண்டார்; ஏப்ரல், 21, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்; ஏப்ரல் 22, மாலை சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்; ஏப்ரல் 23, மாலையில் சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு ஏப்ரல் 24 காலை சென்னை வந்து சேர்ந்தார்

1934, ஏப்ரல் 27, மதுரைத் தமிழ்ச் சங்கப் பண்டிதத் தேர்வுத் தாட்கள் திருத்தும் பணியைச் செய்தார்

1934, ஏப்ரல் 30, சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்

1934, மே 7, புதுக்கோட்டைக்குப் பயணம் மேற்கொண்டார்; மே 8, மேலைச்சிவபுரி சென்று, மே 9-ல் நடைபெற்ற மேலைச் சிவபுரிச் சன்மார்க்க சபையின் வெள்ளிவிழா நிகழ்வில் பங்கேற்றார்; பழமலைப் பெரியசாமிபிள்ளை,

நீ. கந்தசாமி பிள்ளை, ரா.பி. சேதுப்பிள்ளை, வேங்கடாசலம் பிள்ளை ஆகியோர் விழாவில் உரையாற்றினர்

1934, மே 23, உயர்நீதிமன்ற நீதிபதி வரதாசாரியார் இல்லத் திருமண விழாவிற்குச் சென்று வந்தார்

1934, மே 30, சென்னையிலிருந்து காரில் பனசை சென்று, மே 31 அன்று நடைபெற்ற திருப்பனந்தாள் ஆதிகுமரகுருபர சுவாமிகள் குருபூஜை விழாவில் பங்கேற்றார்

1934, ஜூன் 18, கல்வெட்டுத்துறை அதிகாரி சீநிவாஸாராவின் உதவியால் சிம்லாவிலிருந்து இவர் வேண்டியிருந்த கல்வெட்டு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றன; ஜூன் 19, அவர் இல்லம் சென்று நன்றி பாராட்டிவிட்டு வந்தார்

1934, ஜூன் 27, தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இவரது இல்லத்திற்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்றார்

1934, ஜூலை 16, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியார் இவரது இல்லத்திற்கு வந்து சந்தித்தார்

1934, ஜூலை 25, சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியன்றிற்குத் தலைமை தாங்கினார்; கோதண்டராமையர் 'கலம்பகம்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்

1934, ஜூலை 31, சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பேரகராதிக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்

1934, ஆகஸ்ட் 13, சென்னையிலிருந்து மதுரைக்குப் பயணம் மேற்கொண்டார். ஆகஸ்ட், 14, மதுரை சென்றடைந்து, ஆகஸ்ட் 15 அன்று நடைபெற்ற மதுரைத் தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்றார். ஆகஸ்ட் 17 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்றார்

1934, ஆகஸ்ட் 19 மதுரையிலிருந்து ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து ஆகஸ்ட் 21-ஆம் தேதி தனுஷ்கோடி சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் ராமேஸ்வரம் வந்து சிலநாள் இருந்துவிட்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரைக்கு வந்து சேர்ந்தார்

1934, ஆகஸ்ட் 26-ஆம் தேதி மதுரையிலிருந்து திருச்சிக்குப் புறப்பட்டு வந்து, ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற ஆராய்ச்சிக் கழகத்தின் 13-வது ஆண்டு விழாவில் பங்கேற்றார்

1934, ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலை திருச்சி பிஷப்ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற மாணவர் சங்க விழாவிற்குத் தலைமை தாங்கினார்

1934, செப்டம்பர் 9, பங்களூருக்குப் (பெங்களூர்) பயணம் மேற்கொண்டார். அலசூர் சுப்பிரமணிய சர்மா இல்லத்தில் தங்கினார்; செப்டம்பர் 10, சென்ட்ரல் காலேஜில் நடைபெற்ற பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். பங்களூர்க் கோட்டை உயர்நிலைப் பள்ளி தமிழ்ப் பண்டிதர் செங்கல்வராய ஐயர் இவரை வந்து சந்தித்தார். செப்டம்பர் 11, கே. ஆர்.சீனிவாசையங்கார், ஆர்.நரசிம்மாசாரியார் வீட்டிற்குச் சென்றுவந்தார். மாலை அங்கிருந்து புறப்பட்டுச் செப்டம்பர் 12-ஆம் தேதி சென்னை வந்தடைந்தார்

1934, அக்டோபர் 26, சென்னையிலிருந்து திருச்சிக்குப் பயணம் மேற்கொண்டார்

1934, புறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும், நான்காம் பதிப்பை வெளியிட்டார்

1934, சங்கர நயினார் கோயில் அந்தாதியின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1934, வலிவலமும்மணிக்கோவையைக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்

1934, டிசம்பர், கோயம்புத்தூரில் நடைபெற்ற, தனித் தமிழ் வித்துவான் தேர்வில் முதலாவதாகத் தேர்ச்சி பெற்றவருக்குத் திருப்பனந்தாள் மடத்தார் வழங்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றார்

1934, சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1934, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய விளத்தொட்டிப் புராணப் பதிப்பை வெளியிட்டார்

1935, உதயணன் சரித்திரச் சுருக்கம், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1935, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் மூலமும் சங்கரநமச்சிவாயருரையும், இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1935, திருவாவடுதுறையாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இயற்றிய ஆற்றூர்ப்புராணப் பதிப்பை வெளியிட்டார்

1935, மார்ச் 6, (பவ - மாசி, புதன்கிழமை) 60-ஆம் அகவை நாள். முற்பகலில் சென்னை தியாகராஜ விலாசத்தில் சதாபிஷேக முகூர்த்தம் (எண்பதாம் ஆண்டு நிறைவு விழா) நடைபெற்றது. அன்று மாலை 05:30 மணிக்குச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சதாபிஷேக விழா கோலாகலமாக நடத்தப்பெற்றது; விழாக் குழுவின் தலைவராக அன்றைய சென்னை மாகாண அமைச்சர் பி. டி.ராஜன் அவர்களும், உறுப்பினர்களாக டி. சிவராமசேதுப்பிள்ளை, பெ. நா. அப்புஸ்வாமி, எஸ். வையாபுரிப்பிள்ளை ஆகிய மூவரும் கே.வி. கிருஷணஸ்வாமி ஐயர் பொருளாளராகவும் இருந்தனர். சென்னைப் பல்கலைக்கழக செனட் மண்டபத்தில் இவரது திருவுருவப்படம் வைக்கப்பட்டு, ரூ. 3000/- பண முடிப்பும் வழங்கப்பட்டது

1935, பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும், இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1935, புறநானூறு மூலமும் பழைய உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1935, பெருங்கதை மூலமும் அரும்பதவுரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1935, உதயணகுமார காவியம் மூலமும் குறிப்புரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்

1935, தொட்டிக்கலை ஸ்ரீ சுப்பிரமணிய முனிவர் இயற்றிய கலைசைக்கோவைப் பதிப்பை வெளியிட்டார்

1935, துறைமங்கலம் சாமிநாத தேசிகரென்னும் வீரசைவக் கவிஞர் இயற்றிய பழமலைக்கோவைப் பதிப்பை வெளியிட்டார்

1935, மேலகரம் பண்டாரக்கவிராயர் இயற்றிய திரு இலஞ்சி முருகன் உலாவைக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்.

1936, ஜனவரி 29, தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை இவரைச் சந்தித்துவிட்டுச் சென்றார்

1936, ஏப்ரல் 9, திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்க ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினார்

1936, மே 3, தொண்டை மண்டல உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் சொற்பொழிவைக் கேட்டுவிட்டு வந்தார்

1936, ஜூலை 22, கிறித்துவக் கல்லூரியில் சொற்பொழிவாற்றினார்

1936, ஜூலை 25, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தமிழ்ப் பாடத்திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்

1936, ஆகஸ்ட் 20, மாநிலக் கல்லூரி மாணவர் தமிழ்ச் சங்கக் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார்

1936, ஆகஸ்ட் 27, ஸ்ரீலக்ஷ்மணசாமி முதலியார் தலைமையில் நடைபெற்ற ஆயிர ரூபாய்ப் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டார்

1936, செப்டம்பர் 3, இந்து உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆஸ்திகசபை கூட்டத்தில் கலந்து கொண்டார்; அச்சபையின் புரவலராக நியமனமும் பெற்றார்

1936, செப்டம்பர் 3, கவர்னர் தலைமையில் நடைபெற்ற சென்னைப் பல்கலைக்கழக நூலகக் கட்டிடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டார்

1936, செப்டம்பர் 6, சக்ரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்துவிட்டு வந்தார். அப்போது இவரது 'வெங்கானூர்க் கோயிற்சிற்பம்’, 'பரம்பரைக் குணம்’ ஆகிய இருகட்டுரைகளை இந்தியில் மொழிபெயர்த்துப் 'பாரதீய சாகித்திய’ இதழில் வெளியிட இராஜாஜி அனுமதி கேட்டார்

1936, செப்டம்பர் 7, இரவு சென்னையிலிருந்து போட்மெயிலில் கி.வா.ஜகந்நாதன், அலமேலு ஆகிய இருவருடன் திருச்சிக்குப் பயணம் மேற்கொண்டார். 08.9.36 அன்று திருச்சி சென்று சேர்ந்து திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரைச் சந்தித்தார்

1936, அக்டோபர் 1, மகன் கல்யாணசுந்தரம் ஐயருக்கு ஆக்டிங் ஸ¨பர்வைசர் வேலை கிடைக்கப்பெற்றது.

1936, அக்டோபர் 2, அண்ணாமலைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வைச் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் தேர்வுடன் ஒத்ததாகக் கருதவேண்டுமென்று வலியுறுத்தி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்; எஸ். வையாபுரிப்பிள்ளையும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்

1936, அக்டோபர் 4, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பரிட்சகராக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கடிதம் வந்தது

1936, அக்டோபர் 13, அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் பாடத்திட்டக் குழு உறுப்பினராக நியமனம் பெற்றார்; இவரது 'தருமம் தலைகாக்கும்’ என்ற கட்டுரையைச் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் 'ஆங்கரை சுப்பையர்’ என்ற தலைப்பில் மொழிபெயர்த்து 'ஹரிஜன்’ இதழில் வெளியிட்டார்

1936, அக்டோபர் 16, சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரும் ஆனந்தவிகடன் ஆசிரியர் ரா. கிருஷ்ணமூர்த்தியும் இவரது வீட்டிற்கு வந்து சந்தித்துவிட்டுச் சென்றனர்

1936, அக்டோபர் 26, ராஜா ஸர் அண்ணாமலை செட்டியாரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துவிட்டு வந்தார்

1936, அக்டோபர் 30, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்ப் பாடத்திட்டக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதாகக் கி.வா. ஜகந்நாதனுடன் சிதம்பரம் புறப்பட்டுச் சென்று அக்டோபர், 31-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டார்

1936, நவம்பர் 7, பண்ணுருட்டி உபாத்திமைச் சங்கத்தில் உரையாற்றினார்

1936, நவம்பர் 12, சென்னை லயோலா கல்லூரி மாணவர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்; டி.என். சேஷாசலமையர் 'மானிடப் பெருமை’ என்பது பற்றிப் பேசினார்

1936, நவம்பர் 16, சென்னையில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற பட்டங்கள் அளிக்கும் தர்பாருக்குச் சென்று வந்தார்

1936, நவம்பர் 18, மாம்பலம் ராமகிருஷ்ணமிஷன் உயர்நிலைப் பள்ளியில் நரஸிம்மாசாரியார் செய்த சொற்பொழிவிற்குத் தலைமை தாங்கினார்

1936, நவம்பர் 28, திண்டிவனம் சென்று, திண்டிவனம் ஷண்முக நிலையத்தில் சொற்பொழிவாற்றினார்; மறுநாள் காலையில் (நவம்பர் 29) சுப்பிரமணிய செட்டியார் சத்திரத்தில் 'நன்றியறிவு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.மாலையில் வேதவல்லியம்மாள் சத்திரத்தில் 'தமிழ் நூல்களும் திண்டிவனத்தைச் சார்ந்த ஊர்களும்’ என்ற தலைப்பில் உரையாற்றிவிட்டு நவம்பர், 30-ஆம் நாள் காலையில் திண்டிவனம் ஸி.சி. பயிற்சிப் பள்ளியில் ஒரு பிரசங்கம் செய்தார். மாலையில் மயிலம் சென்று சிவஞானபாலைய தேசிகராதீனத்துத் தலைவரைச் சந்தித்துவிட்டுச் சாமி தரிசனம் செய்துவிட்டு டிசம்பர் 1-ஆம் நாள் திண்டிவனம் கி.கி.வி. பள்ளியில் கி.வா.ஜ. 'தமிழ்ப் பிரபந்தங்கள்’ என்னும் தலைப்பில் பேசிய கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். டிசம்பர் 2-ஆம் நாள் திண்டிவனத்திலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார்

1936, டிசம்பர் 4, பிராமணக் குடும்பத்தில் பிறந்த, தென்னகத்தின் முதல் பட்டதாரியான ஸி.ஷி. சுப்பலக்ஷ்மி அம்மாள், இவருக்கு இரண்டு கண்ணாடி பீரோக்களை அனுப்பி உதவினார்

1936, டிசம்பர் 5, மயிலாப்பூர் சென்று ஆர்.எஸ். சுப்பலக்ஷ்மி, ஸ்வர்ணாம்பாள் ஆகியோர்களைச் சந்தித்துவிட்டு வந்தார்

1936, டிசம்பர் 7, சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கண்காட்சியில் இவரது புத்தகங்களை வைப்பதற்கு விண்ணப்பம் செய்துகொண்டார்

1936, டிசம்பர் 9, திருவனந்தபுரம் மகாராஜாவிற்குப் புத்தகங்கள் வாங்கிக்கொள்ள வேண்டியும், சில உதவிகள் செய்ய வேண்டியும் கடிதம் எழுதி அனுப்பினார்

1936, டிசம்பர் 14, காங்கிரஸ் கண்காட்சியில் சர்தார் வல்லபாய் படேல் கண்காட்சியைத் திறந்த வைத்தபோது அங்குச் சென்று வந்தார்; அங்கு ராஜாஜியைச் சந்தித்தார்

1936, டிசம்பர் 18, ஆனந்தவிகடன் அதிபர் எஸ்.எஸ். வாசன் அவர்களை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார்

1936, டிசம்பர் 23, சென்னை சங்கீத வித்வத் சபையின் (இன்று மியூசிக் அகாடெமி என்று அழைக்கப்படுவது) துவக்கவிழாவிற்குச் சென்று வந்தார்; வித்வத் சபையை ஸர்.சிவஸ்வாமி ஐயர் திறந்துவைத்தார்; உமையாள்புரம் சாமிநாதையர் தலைமை வகித்தார்.அங்கு, கே. ஸ்ரீநிவாஸன், கே. பாலசுப்ரமணிய ஐயர், பழமானேரி சாமிநாதையர், டி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், கே.வி. கிருஷணசாமி ஐயர், எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி ஐயர், பி.எஸ். சிவஸ்வாமி ஐயர் முதலியோர்களைச் சந்தித்தார்

1936, டிசம்பர் 24, 'மகாவைத்தியநாதையர் எனும் உரைநடை நூலை வெளியிட்டார்; வைகுண்ட ஏகாதசி நாள்

1936, நான் கண்டதும் கேட்டதும் (12 கட்டுரைகள்), புதியதும் பழையதும் (20 கட்டுரைகள்) ஆகிய கட்டுரைத் தொகுப்பு நூல்களின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1936, கனம் கிருஷ்ணையர், கோபாலகிருஷ்ண பாரதியார் ஆகிய இரு உரைநடை நூல்களை வெளியிட்டார்

1936, தாண்டவராய கவிராயர் இயற்றிய திருமயிலை யமக அந்தாதி மூலமும் பழைய உரையும், முதல் பதிப்பு வெளிவந்தது

1936, புறநானூறு மூலம், முதல் பதிப்பை வெளியிட்டார்

1936, மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் இயற்றிய மான்விடு தூது, குறிப்புரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்

1936, ஸ்ரீவானமாமலை மடம் ஆஸ்தான வித்வான் தென்திருப்பேரை அபிநவ காளமேகம் அபிநவ பிள்ளைப் பெருமாளையங்கார் என்று வழங்குகின்ற ஸ்ரீமத் ஸ்ரீ அநந்தகிருஷ்ணையங்கார் சுவாமிகள் இயற்றிய திருவரங்கச் சிலேடை மாலையை விருதுநகர் நாடார் டவுன் ஹைஸ்கூல் தலைமைத் தமிழாசிரியர் கி. இராஜகோட்டியப்ப பிள்ளையவர்களது குறிப்புரையுடன் பதிப்பித்து வெளியிட்டார்

1937, நல்லுரைக்கோவை - முதல் தொகுதி (8 கட்டுரைகள்), இரண்டாம் தொகுதி (14 கட்டுரைகள்) நூல்களின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1937, ஜனவரி 1, சங்கீத வித்வத் சபையின் பரிசளிப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார், அங்கு வந்திருந்த ராஜாஜியைச் சந்தித்தார்

1937, ஜனவரி 3, 'மறவர் நேசன்’ இதழின் ஆசிரியர் எஸ்.ஆர். பெரியசாமித் தேவர் வந்து இவரைச் சந்தித்து, இதழிற்கு ஏதேனும் ஒரு கட்டுரை எழுதித் தரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்

1937, ஜனவரி 14, சிங்கப்பூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த 'முன்னேற்றம்’ என்ற இதழின் ஆண்டு மலருக்குத் 'தாசில் அனந்தராமையர்’ என்ற கட்டுரையை எழுதி அனுப்பினார்

1937, ஜனவரி 6, சென்னை மாநிலக் கல்லூரித் தமிழ்ச் சங்க ஆண்டுவிழாவில் கலந்து கொண்டார்; பி.பி.எஸ்.சாஸ்திரியின் தலைமையின்கீழ் சக்கரவர்த்தி இராஜகோபாலாசாரியார் 'மாணாக்கர் வாழ்க்கை’ எனும் தலைப்பில் உரையாற்றினார்

1937, ஜனவரி 6-7, மதுரை வழக்கறிஞர் ஸ்ரீமான் என்.நடேசையர் தலைமையில் நடைபெற்ற சநாதனதர்ம மகாநாட்டில் கலந்து கொண்டார்

1937, ஜனவரி 9, சு.சத்தியமூர்த்தி ஐயரை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்துவிட்டு வந்தார்; வரும்போது தலையில் காயம்பட்டுவிட்டது, மறுநாள் (ஜனவரி 10) சு. சத்தியமூர்த்தி ஐயர் இவர் வீட்டிற்கு நலம் விசாரித்துவிட்டுச் சென்றார்

1937, ஜனவரி 16, குடந்தை, கோபால்ராவ் நூல் நிலையத்தில் இவரின் திருவுருவப்படம் ம.வீ. ராமாநுஜாசாரியரால் திறந்துவைக்கப் பெற்றது

1937, ஜனவரி 26, இவரது திருமகனார் கலியாணசுந்தரம் ஐயருக்கு ஸ¨ப்ரிண்டெண்ட் வேலை கிடைக்கப்பெற்றது

1937, ஜனவரி 28, மயிலாப்பூர் மகளிர் (மயிலாப்பூர் ஸ்திரீகள்) சங்கத்தில் 'தமிழ்நாட்டுப் பெண்பாலார்’ என்னும் தலைப்பில் உரையாற்றினார்; இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்த ஆர்.எஸ். சுப்பலஷ்மி இவரைப் பாராட்டிப் பேசிவிட்டுச் சென்றார்

1937, மார்ச் 3, மயிலாப்பூர் பி. எஸ்.உயர்நிலைப் பள்ளியில் வி.எஸ். ஸ்ரீநிவாஸசாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்குச் சென்று வந்தார்

1937, மார்ச் 16, சென்னையில் நடைபெற்ற சுருக்கெழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டார்

1937, மார்ச் 19, சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் இல்லத்தில் நடைபெற்ற ஹேல்ஸ் துரையின் விருந்தளிப்பில் கலந்துகொண்டார்

1937, மே 22, கலைமகள் இதழில் இவர் எழுதியிருந்த 'பிச்சைப் பாட்டு’ எனும் கட்டுரையைப் படித்துவிட்டு ராஜாஜி பாராட்டிக் கடிதம் எழுதினார்

1937, தமிழ்நெறி விளக்கம் மூலமும் பழைய உரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்

1937, மார்ச் 26, திருவல்லிக்கேணி தமிழ்ச் சங்கத்தில் டி.ஸி. ஸ்ரீநிவாசையங்கார் தலைமையில் நடைபெற்ற 'கம்பர் திருநாள்’ கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்

1937, மார்ச் 27, சென்னையில் நடைபெற்ற பாரதீய சாகித்திய பரிஷத்தின் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்னை வந்து இந்தி பிரசாரச் சபாவில் தங்கியிருந்த மகாத்மா காந்தியை ராஜாஜியுடன் சென்று சந்தித்தார்; அதன்பின் மாநாட்டிற்குச் சென்று வரவேற்புரை ஆற்றினார்; மாநாட்டிற்கு மகாத்மா காந்தியவர்கள் தலைமை வகித்தார்

1937, ஏப்ரல் 9, ஸி. ஆர்.ஸ்ரீநிவாஸன் தலைமையில் நடைபெற்ற திருவல்லிக்கேணிக் கூட்டுறவுப் பண்டக சாலை ஆண்டு விழாவில் கலந்துகொண்டார்; அந்த விழாவில் திரு. வி. கல்யாணசுந்தர முதலியாரும் உரையாற்றினார்

1937, ஏப்ரல் 12, தொண்டை மண்டலம் உயர்நிலைப் பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துகொண்டார்

1937, ஏப்ரல் 13, ஆர்.எஸ். சுப்பலட்சுமி அம்மாள், அம்புஜம் அம்மாள் ஆகிய இருவரும் இவரது வீட்டிற்கு வந்து சந்தித்து விட்டுச் சென்றனர்

1937, ஜூலை 16, வெ. ப. சுப்பிரமணிய முதலியார் 80-ஆம் ஆண்டு நிறைவு விழாவிற்குத் தலைமை தாங்கினார்

1937, குறுந்தொகை மூலமும் உரையும் (இவர் எழுதிய உரை) முதல் பதிப்பை வெளியிட்டார்

1937, சிராமலைக்கோவையின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1937, எல்லப்ப நயினார் இயற்றிய திருவாரூர்க் கோவை, முதல் பதிப்பை வெளியிட்டார். இரண்டாம் பதிப்பு 1941-ல் வெளிவந்தது

1937, நினைவு மஞ்சரி - முதல் தொகுதியின் (24 கட்டுரைகள்) முதல் பதிப்பை வெளியிட்டார்

1937, செய்யுள் வாசகத் திரட்டு, சென்னை இராஜதானிக் கலாசாலைத் தமிழாசிரியர் வித்துவான் ஸி. விசுவநாதையருடன் இணைந்துத் தொகுத்து வெளியிட்டார்

1938, ஜனவரி 11, சென்னையில் வைஸ்ராய் நடத்திய விருந்தில் கலந்துகொண்டார்

1938, நல்லுரைக்கோவை - மூன்றாம் தொகுதியின் (15 கட்டுரைகள்) முதல் பதிப்பை வெளியிட்டார்

1938, மார்ச் 15, சென்னை, ஆக்ஸ்போர்டு சமஸ்கிருத ஆசிரியர் பிரசங்கத்திற்குச் சென்றுவந்தார்

1938, மார்ச் 28, கவர்னர் தலைமையில் அரசு இல்ல பாங்கெட் அரங்கில் நடைபெற்ற நூலகச் சங்கக் கூட்டத்தில் கலந்துகொண்டார்

1938, மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இரண்டாம் பாகத்தின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1938, அந்தகக்கவி வீரராகவமுதலியார் இயற்றிய திருக்கழுக்குன்ற உலாவைப் பதிப்பித்து வெளியிட்டார்

1938, திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலையின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1938, திருமலையாண்டவர் குறவஞ்சியின் முதல் பதிப்பை வெளியிட்டார்

1938, ஸ்ரீசென்னமல்லையர் இயற்றிய சிவ சிவ வெண்பா மூலமும் உரையும், முதல் பதிப்பை வெளியிட்டார்

1938, பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் இயற்றிய திருமாலிருஞ்சோலைமலை அழகர் கிள்ளைவிடுதூது, முதல் பதிப்பை வெளியிட்டார், இரண்டாம் பதிப்பு 1941-ல் வெளிவந்தது

1939, நல்லுரைக்கோவை - நான்காம் தொகுதியின் (20 கட்டுரைகள்) முதல் பதிப்பை வெளியிட்டார்

1939, செப்டம்பர், 16, குமரகுருபர சுவாமி பிரபந்தங்கள், முதல் பதிப்பை வெளியிட்டார்

1939, சீனிச்சர்க்கரைப் புலவர் இயற்றிய புகையிலை விடு தூது, முதல் பதிப்பை வெளியிட்டார்

1939, காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் இயற்றிய திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பாவின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1939, திருத்தணிகைக் கந்தப்பையர் இயற்றிய தணிகாசல புராணம், முதல் பதிப்பை வெளியிட்டார்

1939, நாராயண தீக்ஷிதர் இயற்றிய தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் பாமாலையின் முதல் பதிப்பை வெளியிட்டார்.

1939, ஜூன் 1, செட்டிநாட்டு கொப்பனாப்பட்டியில் மெய்யப்பச் செட்டியார் கட்டிமுடித்திருந்த கலைமகள் கோவில் திறப்புவிழாவில் பங்கேற்று வரவேற்புரை ஆற்றினார்

1939, நவம்பர் 25, செவ்வைச்சூடுவார் பாகவதத்திற்குக் குறிப்புரை எழுதத் தொடங்கினார்

1939, நவம்பர் 28, டி. கே. ஸி, கல்கி இருவரும் இவரது வீட்டிற்கு வந்து சந்தித்தனர்; சுயசரிதையை ஆனந்தவிகடனில் எழுதுவது குறித்துக் கலந்துரையாடினர்

1939, டிசம்பர் 7, இந்து நாளிதழின் வைரவிழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்

1939, டிசம்பர் 15, கல்கி அவர்களிடம் ஆனந்தவிகடன் இதழில் வெளியிடும் வகையில் தனது சுயசரிதத்தின் முதல் அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார்

1940, மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரத்தின் இரண்டாம் பாகத்தின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1940, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1940, மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர் இயற்றிய திருக்குற்றாலச் சிலேடை வெண்பா பதிப்பை வெளியிட்டார்

1940, வீரராகவ கவி இயற்றிய வில்லைப்புராணப் பதிப்பை வெளியிட்டார்

1940, டிசம்பர் 6, ஆனந்த விகடன் இதழில் இவரது 'சுயசரிதம்’ முதல் அத்தியாயம் வெளிவந்தது

1940, ஜனவரி 21, உடல்நலம் பாதிப்புற்று இராயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பெற்றார்

1940, ஜூன் 12, கூத்தனூர் கலைமகள் சம்பந்தமாகப் பாடல்கள் எழுதி அனுப்பினார்

1941, பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும், மூன்றாம் பதிப்பை வெளியிட்டார்

1941,ஆகஸ்ட்டு 5, தமிழ் இசையைப் பற்றி டைகர் வரதாசாரியாருக்கு எழுதி அனுப்பினார்

1941,செப்டம்பர் 29, திருச்சி வானொலியில் இவர் எழுதி அனுப்பிய 'எது தமிழ்’ கட்டுரை வாசிக்கப்பட்டது

1941, நல்லுரைக்கோவை - முதல் தொகுதி (8 கட்டுரைகள்)யின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்

1941, டிசம்பர் 7, கொள்ளுப்பேரன் வேங்கடகிருஷ்ண ஐயரால் கனகரத்னாபிஷேகம் நடத்தி வைக்கப்பெற்றது

1942, ஜனவரி 12, தியாகராசவிலாச இல்லத்தின் மேல்மாடியிலிருந்து இறங்கிவரும்பொழுது (அதிகாலை 4 மணி) தவறி கிழே விழுந்து காலில் வீக்கம் ஏற்பட்டுவிடுகிறது; வீக்கத்திற்கு வைத்தியம் பார்த்தார்கள்.

1942, ஜனவரி 29, குடும்ப மருத்துவர் திருமூர்த்தி அவர்கள் இவரைப் பரிசோதித்துப் பார்த்து இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டிருப்பதை அறிந்து, அதற்குரிய மருத்துவம் பார்த்துவந்தார்

1942, ஏப்ரல் 11, இரண்டாம் உலகப்போர் காரணமாகச் சென்னையிலிருந்த பலரும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றனர். அந்தச் சமயத்தில் இவரைத் திருக்கழுக்குன்றம் அழைத்துச் சென்று திருவாவடுதுறை மடத்திற்குச் சொந்தமான இல்லத்தில் தங்கவைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்

1942, ஏப்ரல் 27, குளிர் காய்ச்சல் அதிகமானது

1942, ஏப்ரல் 28, மாலை 03:35 மணிக்கு ஏடுகாத்த பெருங்கிழவர் மறைவுற்றார்

1942, உ.வே.சாமிநாதையர் எழுதி வைத்திருந்த 'வித்துவான் தியாகராச செட்டியார்’ என்ற நூல், திரு. கலியாணசுந்தர ஐயரால் வெளியிடப்பட்டது

1942, நினைவுமஞ்சரி - இரண்டாம் தொகுதியின் (25 கட்டுரைகள்) முதல் பதிப்பு வெளிவந்தது; உ.வே.சாமிநாதையர் எழுதிய கட்டுரைகள்; இவரின் மகன் கலியாணசுந்தர ஐயரால் வெளியிடப்பட்டது

1942, டிசம்பர், திருவல்லிக்கேணி இந்து இளைஞர் சங்கத்தில் உ.வே.சாமிநாதையர், மகாகவி சுப்பிரமணிய பாரதியார் திருவுருவப் படங்கள் அமைப்பு விழா நடைபெற்றது; விழாவில் எஸ். வையாபுரிப்பிள்ளை கலந்துகொண்டு சாமிநாதையரைப் பற்றி உரையாற்றினார்

1943, ஜூலை 7, உ.வே.சாமிநாதையர் திருமகனார் எஸ். கல்யாணசுந்தரமையர் விருப்பத்தின்படி, திருமதி ருக்மிணிதேவி அவர்களின் முயற்சியினால் அடையாற்றுப் பிரம்மஞான சபையின் தலைமை அலுவலகத்தின் ஓர் அறையில் நிறுவப்பெற்ற மாகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தைச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சந்திரசேகர ஐயர் திறந்து வைத்தார், அதுமுதல் மே 7, 1962 வரையில் ஏறக்குறைய 20 ஆண்டுகளாக நூல் நிலையம் இங்குதான் செயல்பட்டுவந்தது; முதன் முதலாக 939 ஓலைச் சுவடிகளைக் கொண்டு நிறுவப்பெற்றது

1948, மார்ச் 6, சென்னை, மாநிலக் கல்லூரியில், சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் திவான்பகதூர்

ஆ. இலக்குமணசாமி முதலியார் தலைமையில் உ.வே.சாமிநாதையர் உருவச்சிலை நாட்டுவிழா நடைபெற்றது; சென்னை மாகாண முதல்வர் ஓ. பி. இராசாமி ரெட்டியார் அவர்கள் உருவச்சிலையைத் திறந்துவைத்தார்கள்

1948, ஜூலை, 'மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர்’ எனும் நூல், சுதேசமித்திரன் ஆசிரியர் கே. சுந்தரராகவன் அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது

1950, ஆனந்த விகடன் இதழில் 1940, ஜனவரி 6, முதல் 1942, மே மாதம் வரையில் சாமிநாதையர் எழுதிவந்த சுயசரிதம் 'என் சரித்திரம்’ எனும் பெயரில் இவரின் மகன் கலியாணசுந்தர ஐயரால் தொகுத்துப் பதிப்பித்து வெளியிடப்பட்டது

1951, ஜூன், அடையாற்றுப் பிரம்மஞான சபையின் தலைமை அலுவலகத்தில் இயங்கிவந்த மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின் ஒரு பகுதியில், நூல்களை ஆராய்வதற்கும், புதிய பதிப்புகளை வெளியிடுவதற்கும், நிலையத்திற்கு வருகிறவர்கள் படிப்பதற்கும் பயன்படும்படி அச்சிட்ட நூல்கள் அடங்கிய ஒரு பகுதி 524 நூல்களைக் கொண்டு திறக்கப்பெற்றது

1955, பிப்ரவரி 18, உ. வே. சாமிநாதையரின் நூற்றாண்டு நிறைவுவிழா நினைவாக அடையாறு, பிரம்ம ஞான சபையில் சாமிநாதையரின் சம்பந்தமான அரிய பொருளமைந்த ஒரு பொருட்காட்சி திறக்கப்பட்டு மூன்று நாட்கள் நடைபெற்றது.கண்காட்சியை முதலமைச்சர் திரு. கே. காமராஜர் அவர்கள் திறந்து வைத்தார்கள். பேராசிரியர் மு. வரதராசனார் 'தமிழ் ஆராய்ச்சி’ என்னும் பொருள்பற்றிப் பேருரை நிகழ்த்தினார்

1955, பிப்ரவரி 19, உ. வே. சாமிநாதையரின் நூற்றாண்டு நிறைவுவிழா நினைவாகச் 'சாமிநாதையரவர்களின் மாணவர் மாநாடு’ மயிலாப்பூர் பி. எஸ்.உயர்நிலைப் பள்ளியில் கே. பாலசுப்பிரமணிய ஐயர் தலைமையில் நடைபெற்றது

1955, பிப்ரவரி 20, உ. வே. சாமிநாதையரின் நூற்றாண்டு நிறைவுவிழா நினைவாகச் சென்னை ராஜாஜி ஹாலில் கவர்னர் ஸ்ரீ பிரகாசா அவர்கள் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.பொதுக்கூட்ட மேடையில் வித்துவான் தியாகராச செட்டியார் அவர்களின் படத்தைப் பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் திறந்துவைத்தார். பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் 'தமிழ் வளர்ச்சி’ என்ற தலைப்பிலும், ராஜாஜி 'ஐயரவர்களால் தமிழ் அடைந்த பெருமைகள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்

1956, பிப்ரவரி 18, 19, 20 உ. வே. சாமிநாதையரின் நூற்றாண்டு விழா 'மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின்’ சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதற்கான விழாக்குழுவில் அன்றைய கல்வி, நிதி அமைச்சர் கனம். சி. சுப்பிரமணியம் அவர்கள் தலைவராகவும், வ.சோ. தியாகராஜ முதலியார், கி.வா. ஜகந்நாதன் ஆகிய இருவரும் உறுப்பினர்களாகவும் இருந்து செயல்பட்டனர்

1958, ஜனவரி 21, என் சரித்திரம் (சுருக்கம்), சாகித்திய அகாடமிக்காக என் சரித்திரத்தைச் சுருக்கி எழுதி கி. வா. ஜகந்நாதனால் வெளியிடப்பட்டது

1961, தமிழ்ப்பா மஞ்சரி - முதல் பாகம் வெளிவந்தது; பல்வேறு சூழல்களில் உ.வே. சாமிநாதையர் இயற்றியிருந்த தெய்வத் துதிப் பாடல்களைக் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டார்

1962, தமிழ்ப்பா மஞ்சரி - இரண்டாம் பாகம் வெளிவந்தது; பல்வேறு சூழல்களில் உ.வே. சாமிநாதையர் எழுதியிருந்த பாடல்களைக் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துப் பதிப்பித்து வெளியிட்டார்

1962, டிசம்பர் 3, சென்னை, கலாக்ஷத்திர வளாகத்தில் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின் புதிய கட்டிடத்திற்கு, சென்னைக் கல்வியமைச்சர் மாண்புமிகு திரு.எம். பக்தவச்சலம் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது

1967, பிப்ரவரி 5, மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையத்தின் கிருகப் பிரவேசம் நடைபெற்றது

1967, ஏப்ரல் 22, கல்வி அமைச்சர் மாண்புமிகு திரு. நெடுஞ்செழியன் அவர்களால் மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலைய கட்டிடம் திறந்துவைக்கப் பெற்றது

1983, என் ஆசிரியப்பிரான், என் சரித்திரத்தின் தொடர்ச்சியாக உ.வே. சாமிநாதையர் எழுதிவைத்திருந்த குறிப்புக்களைக் கொண்டு கி. வா. ஜ. அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது

1983, தமிழ்த் தாத்தா (டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்கள் வாழ்வும் இலக்கியப் பணியும்) என்ற நூல் சாகித்திய அகாடமியின் 'இந்திய இலக்கியச் சிற்பிகள்’ எனும் வரிசையில் கி. வா. ஜகந்நாதனால் எழுதி வெளியிடப்பெற்றது

1983, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல தமிழ் ஆர்வலர்களின் பொருளுதவியைக் கொண்டு 'டாக்டர் உ.வே. சாமிநாதையர் அறக்கட்டளை’ நிறுவப்பட்டது; இந்த அறக்கட்டளையின் வழியாகத் தமிழ்நூல் பதிப்பு வரலாறு பற்றி ஆண்டுதோறும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டு வருகின்றது

1997, ஜனவரி 19, சென்னை, திருவான்மியூர், மகாமகோபாத்தியாய உ.வே. சாமிநாதையர் நூல்நிலைய நுழைவாயிலில் சாமிநாதையர் திருவுருவச்சிலை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. ஆர்.வெங்கட்ராமன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது; இதற்கான விழாக் குழுவில் திரு. கே. சங்கரமேனன், திரு. அ.மு. பரமசிவானந்தம் இருவரும் தலைவர்களாகவும், திரு. எல். ராமநாதன், திரு. சு. பாலசாரநாதன், திரு. குமரி அனந்தன் உள்ளிட்ட ஒன்பதுபேர் உறுப்பினர்களாகவும் இருந்தனர்.சிலை திறப்பு விழா நினைவாகச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பெற்றது; முதலமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 50,000/- அளிக்கப்பட்டது

2006, பிப்ரவரி 18, இவரின் இருநூற்றாண்டு நினைவாக 'நினைவு அஞ்சல் தலை’ இந்திய அரசால் வெளியிடப்பட்டது

2008, ஏப்ரல் 27, தமிழக அரசால் உத்தமதானபுரத்தில் உ.வே. சாமிநாதையர் வாழ்ந்த வீட்டைப் புனரமைத்து நினைவு இல்லமாக அமைத்துத் திறந்துவைக்கப் பெற்றது

2018, ஜூலை 12, உ. வே. சாமிநாதையர் கடிதக் கருவூலம் (தொகுதி - 1; 1877 - 1900) பேராசிரியர் ஆ. இரா. வெங்கடாசலபதி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு உ.வே.சா. நூலக வெளியீடாக வெளியிடப்பட்டது.

உசாத்துணை


✅Finalised Page