being created

உடுமலை நாராயண கவி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:

கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்குநாட்டுக்  கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அவற்றைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  

தனது 15-ஆவது வயதில் மகாகவி சுப்ரமணிய பாரதியைச் சந்தித்தபின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டார்
== தனிவாழ்க்கை ==
நாராயணசாமி பேச்சியம்மாளை மணந்தார்.  நான்கு மகன்கள்.

== நாடகம் ==
== நாடகம் ==
நாராயணசாமி பூளைவாடியில் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இராமநாடகத்தில் இலக்குவன் வேடத்தில் நடித்தார்.  சங்கரதாஸ் சுவாமிகளின் நண்பரும்,  ஆரிய நாடக சபாவை நடத்தி வந்தவருமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர்  அவரது நடிப்பாற்றலைக் கண்டு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் . பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயரின் சபாவில் நாடகங்களில் நடித்தார். பாடல்கள் பாடுவதிலும், உரையாடல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார்.
இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார்.
வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது.  மதுரைக்குச் சென்று சங்கரதாஸ் சுவாமிகளிடம்  முறையாக யாப்பிலக்கணம்  கற்று  பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார்.  விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது  தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதினார்.

== அரசியல் ==
== அரசியல் ==

Revision as of 20:46, 2 June 2023

நன்றி: தமிழ்ஹிந்து

உடுமலை நாராயணகவி (நாராயணசாமி; செப்டம்பர் 25, 1899 – மே 23, 1981) தமிழ்க்கவிஞர், திரைப் பாடலாசிரியர், , நாடக எழுத்தாளர். விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை இயற்றி, கூட்டங்களில் பாடினார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றினார்.

பிறப்பு, கல்வி

அன்றைய கோவை மாவட்டத்தில்(தற்போது திருப்பூர் மாவட்டம்) உடுமலைப்பேட்டைக்கருகில் உள்ள பூவிளைவாடியில் (பூளவாடி) கிருஷ்ணசாமி -முத்தம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நாராயணசாமி.

இளம் வயதிலேயே தம் தாய் தந்தையரை இழந்த நாராயணசாமி அண்ணன் தனுஷ்கோடியின் ஆதரவில் வாழ்ந்தார். தீப்பெட்டிகளைச் சுமந்து சென்று விற்றார். நான்காம் வகுப்புடன் பள்ளிப்படிப்பு நின்றது. புலவர் பாலசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றார். முத்துசாமிக் கவிராயர் நடத்திய ஆரிய கான சபாவில் இணைந்து நாடகங்களில் நடித்தார். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரிடம் இசை பயின்றார். சங்கரதாஸ் சுவாமிகளிடம் நாடகக்கலை பயின்றார்.

கிராமியக் கலைகளான புரவியாட்டம், சிக்குமேளம், தம்பட்டம், உடுக்கடிப்பாட்டு, ஒயில்கும்மி போன்ற கொங்குநாட்டுக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, அவற்றைக் கற்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

தனது 15-ஆவது வயதில் மகாகவி சுப்ரமணிய பாரதியைச் சந்தித்தபின் விடுதலைப் போராட்டத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டார்

தனிவாழ்க்கை

நாராயணசாமி பேச்சியம்மாளை மணந்தார். நான்கு மகன்கள்.

நாடகம்

நாராயணசாமி பூளைவாடியில் மாரியம்மன் திருவிழாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இராமநாடகத்தில் இலக்குவன் வேடத்தில் நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகளின் நண்பரும், ஆரிய நாடக சபாவை நடத்தி வந்தவருமான உடுமலைச் சரபம் முத்துசாமிக் கவிராயர் அவரது நடிப்பாற்றலைக் கண்டு அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் . பன்னிரண்டாம் வயது முதல் இருபத்தைந்தாம் வயது வரை முத்துசாமிக் கவிராயரின் சபாவில் நாடகங்களில் நடித்தார். பாடல்கள் பாடுவதிலும், உரையாடல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார்.

இருபத்தைந்தாம் வயதில் ஊர் திரும்பிய கவி தேசிய எழுச்சி மிகுந்திருந்த அக்காலத்தில் கதர்க்கடை ஒன்றைத் தொடங்கினார். கதர்ப்பாட்டுப் பாடி ஊர் ஊராகச் சென்று கதர் விற்றார்.

வாணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தால் கடன் தொல்லை ஏற்பட்டது. மதுரைக்குச் சென்று சங்கரதாஸ் சுவாமிகளிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்று பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். விடுதலைப் போராட்டம் தீவிரமாக இருந்தபோது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதினார்.

அரசியல்

திரைத்துறை

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.

அண்ணாதுரை எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியவர்

இலக்கிய/பண்பாட்டு இடம்

விருதுகள்/பரிசுகள்

மறைவு

பாடல்கள்

உசாத்துணை

தமிழ் அறிஞர்கள் அறிவோம்-உடுமலை நாராயண கவி-தினமணி, ஜனவரி 2014

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.