இந்திரா பார்த்தசாரதி: Difference between revisions

From Tamil Wiki
Line 44: Line 44:


=== சிறுகதைகள் ===
=== சிறுகதைகள் ===
நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.


=== நாவல்கள் ===
=== நாவல்கள் ===

Revision as of 20:29, 23 January 2022

****** Under Construction by Muthu (Muthusitharal) ******

இ. பா என சுருக்கமாக அழைக்கபடுபவர். தமிழ் நவீன இலக்கியத்தின முன்னோடிகளில் ஒருவர். ஆங்கிலப் புலமை பெற்ற தமிழாசிரியர். வைணவ பக்தி இலக்கியங்களில் புலமை கொண்ட மார்க்சிய ஆர்வலர். பெரு நகரத்தில் பிறந்து சிறு நகரத்தில் வளர்ந்தவர் என oxymoron அல்லது முரணகளின் தொகுப்பு இவர்.

இவருடய பெரும்பாலான நாவல்கள் உயர் நடுதர வர்க்கத்தினரின் உளவியலைப் பேசுபவை. ஆனால் இவ்வுளவியல் சிக்கல்களை பொருளாதார அடிப்படைகளைக் கொண்டு மட்டுமே இவருடைய நாவல்கள் வரையறுப்பதில்லை என்பது இவருக்கு இயல்பாக அமைந்த முரண்களின் வெளிப்பாடு.

வாழ்க்கை குறிப்பு

பிறப்பு,இளமை

இயற்பெயர் பார்த்தசாரதி. 1930ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி சென்னையில் ஒரு தமிழ் வைணவக் குடும்பத்தில் பிறந்தார். கும்பகோணத்தில் வளர்ந்தவர். ஆங்கிலப்புலமை பெற்ற தமிழாசிரியர்.தனது ஒன்பதாவது வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அதுவும் நேரடியாக ஆறாவது வகுப்பில். இளமையிலேயே, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு (புகழ் பெற்ற மார்க்சியரான தேவிபிரசாத் சட்டோபாத்யாவின் முக்கியமான நூல் ஒன்றை 'இந்தியத் தத்துவங்களில் நிலைத்தவையும் அழிந்தவையும்' என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தவர்) போன்ற தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம் இவருக்கு கிட்டியுள்ளது.

தனி வாழ்க்கை

திருச்சியில் உள்ள நேஷனல் கல்லூரியில் தமிழாசிரியராக 1952ல் தன் பணியைத் துவக்கினார். பின்னர் டெல்லி பல்கழைக்கழகத்தில் தமிழாசிரியராகவும் (1962-2002), ஓய்வுக்குப் பிறகு பாணடிச்சேரி பல்கழைக்கழகத்தில் நாடகப் பேராசிரியராகவும் பணியாற்றினார். இடைப்பட்டக் காலத்தில் (1981-1986) போலந்தில் உள்ள வார்ஷா பல்கழைக்கழகத்தில் இந்தியத் தத்துவ மற்றும் பண்பாட்டு ஆசிரியராக குறுகிய காலம் பணியாற்றி இருக்கிறார். தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

குடும்பம்

தன்னுடைய குடும்பத்தில் இருந்துதான் வைணவ பக்தி இலக்கிய அறிமுகமும், மார்க்சிய ஆர்வமும் இவருக்கு கிட்டியுள்ளது. இவருடைய தந்தை தீவிர வைணவ பக்தர். சகோதரர் வெங்கடாச்சாரி தீவிர இடதுசாரி அரசியலில் ஈடுபட்டிருந்தவர். இவருடைய குடும்பத்தில் இருந்து தான் வாசிப்பு பழக்கமும் இவருக்கு கைகூடியிருக்கிறது. இவரது பாட்டியும், அம்மாவும் தீவிரமான வாசிப்பாளர்கள். இவருடைய புனைப் பெயரிலுள்ள இந்திரா, இவருடைய மனைவியின் பெயர்.

இலக்கிய பங்களிப்பு

சிறுகதைகள்

தனது 15வது வயதில், தன்னுடைய முதல் சிறுகதையை எழுதியதாக விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்திருக்கிறார். அக்ரஹாரத்தில் பெருகியிருந்த இளம் விதவைகளைப் பற்றிய கதை இது.

முதன் முதலாக பிரசுரிக்கப்பட்ட சிறுகதை ‘மனித எந்திரம்'. ஆனந்த விகடன் பத்திரிக்கையில் முத்திரைக் கதையாக வெளியானது.

``சிறுகதையின் வடிவம் அந்தந்தப் படைப்பாளியின் உள்மனத்தோற்றத்திற்கேற்ப உருக்கொள்கிறது. இதற்கு இலக்கணம் ஏதும் கிடையாது. கோட்பாட்டிற்கேற்ப இலக்கியம் படைப்பதற்கும், பெண் மருத்துவ இயல் படித்த பிறகுதான் ஒருத்தி பிள்ளைப்பெற வேண்டும் என்று சொல்வதற்கும் வித்தியாசமில்லை" என்றவர் இ.பா. இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்திப் போகிறது.

நாவல்கள்

இவருடைய முதல் நாவல் காலவெள்ளம் 1968ல் வெளியானது. பல்வேறு தரப்பட்ட குண வார்ப்புக்களைக் கொண்ட கதபாத்திரங்களை உருவாக்கி, அவற்றிற்கிடேயே உள்ள ஊடாட்டங்களை, முரண்களை, ஒத்திசைவைச் சித்தரிப்பதின் வழியாக நாவலின் தரிசனத்தை வாசகர்களுக்கு உணர்த்துவதை இவருடைய முதல் நாவல் தொடங்கி எல்லாப் படைப்புகளிலும் காணமுடியும்.

இவருடைய சுயசரிதை நாவலான வேர்ப்பற்று இ.பா வை ஒரு மாணவராகவும், இலக்கியவாதியாகவும் மிகவும் நெருங்கி அணுக உதவுபவை.

கீழ்வெண்மணி என்ற தஞ்சையில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த சாதியப் படுகொலைகளை முற்றிலும் புதிய கோணத்தில் அணுகிய இவருடைய குருதிப்புனல் என்னும் நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. வர்க்கப் பிரிவினையை வெறும் புறவய காரணிகளான பொருளாதாரத்தின் அடிப்படையில் மட்டும்

நாடகங்கள்

நாடகங்கள் மேல் இலக்கியவாதிகள் நம்பிக்கையற்று இருந்த போது, அதனுடைய மிகப் பெரிய படைப்பு வடிவத்தினால் ஈர்க்கப்பட்டவர். இவருடைய முதல் நாடகம் 'மழை'. பல்வேறு எதிர்ப்புக்களுக்கிடையே டில்லியில் இருந்த தஷிண பாரத நாடக சங்கத்தைச் சேர்ந்த பாரதி மணி என்பவரால் 'மழை' நாடகம் மேடையேற்றப்பட்டது. இந்த ஊக்கத்தினால் தொடர்ந்து நாடகங்கள் எழுத ஆரமபித்தார்.

மேலும் டில்லியில் அப்போதிருந்த Enact பத்திரிக்கே இவருடைய பெருமபாலான நாடகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததால், டில்லியில் நாவலாசிரியர் என்பதைவிட நாடக ஆசிரியராகவே அறியப்பட்டார். இவருடைய ஔரங்கசீப் மட்டும் ராமாநுஜர் போன்ற வரலாற்று நாடகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.

ஆழ்வார்கள் குறித்து இவர் செய்த ஆய்வுகளுக்காக டில்லி பல்கழைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்த ஆய்வுகளின் விளைவான ராமாநுஜர் நாடகத்துக்கு ‘சரஸ்வதி சம்மான்’ விருதும் வழங்கப்பட்டது.

விவாதங்கள்

படைப்புகள்

சிறுகதைகள்

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு பதிப்பகத்தாரால், பல்வேறு தொகுப்புக்களாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

நாவல்கள்

நாடகங்கள்

கட்டுரைகள்

மொழிபெயர்ப்புகள்

மொழிபெயர்க்கப்பட்டவை

விருதுகள்

உசாத்துணை