being created

ஆனந்தரங்கம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 12:31, 31 January 2022 by RV (talk | contribs) (Updates)
Anandarangam Pillai
ஆனந்தரங்கம் பிள்ளை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


ஆனந்தரங்கம் பிள்ளை (மார்ச் 30, 1709 – ஜனவரி 16, 1761) பாண்டிச்சேரி நகரத்தில் ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனிக்காக மொழிபெயர்ப்பாளராகப் (துபாஷ்) பணி புரிந்தார். ஃப்ரெஞ்சு ஆளுனர் டூப்ளேக்கு அணுக்கமானவர். 1736-இலிருந்து 1761 வரை அவர் எழுதி வைத்திருந்த நாட்குறிப்புகள் பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியாவைப் பற்றிய உண்மையான் சித்தரிப்பை அளிக்கின்றன. இவை அன்றைய அரசியல் சூழ்நிலை, தினசரி வாழ்க்கை ஆகியவற்றைப் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

பிறப்பு, இளமை

ஆனந்தரங்கம் பிள்ளை 30 மார்ச் 1709 அன்று பெரம்பூரில் (இன்றைய சென்னை நகரம்) ஒரு வசதியான வணிகக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். தந்தை பெயர் திருவேங்கடம் பிள்ளை. பாண்டிச்சேரியில் ஆனந்தரங்கம் பிள்ளையின் மாமாவான நைனியா பிள்ளை ஃப்ரெஞ்சு ஆட்சியில் தலைமை இந்திய அதிகாரியாக இருந்தார். அவரது ஆலோசனைப்படி அன்றைய ஃப்ரெஞ்சு ஆளுநர் திருவேங்கடம் பிள்ளை உள்ளிட்ட முக்கிய வணிகர்களை பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்து அங்கே வணிகம் செய்யுமாறு அழைத்தது. அந்த அழைப்பை ஏற்று திருவேங்கடம் பிள்ளை 1716-இல் பாண்டிச்சேரிக்கு குடிபெயர்ந்தார். திருவேங்கடம் பிள்ளைக்கு உயர்பதவி கிடைத்தது. பிற்காலத்தில் நைனியா பிள்ளை சிறைப்படுத்தப்பட்டபோதும் திருவேங்கடம் பிள்ளைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

தனி வாழ்க்கை

ஆனந்தரங்கம் பிள்ளை 1726-இல் அவரது தந்தையின் மறைவுக்குப் பிறகு பரங்கிப்பேட்டையில் இருந்த ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் தொழிற்சாலையின் தலைமை இந்திய அதிகாரியாக பொறுப்பேற்றார். அன்று ஃப்ரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில் இந்தியர்களுக்கான முக்கியப் பதவியாக துபாஷ் பதவி இருந்தது. துபாஷ் வெறும் மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்லர், ஃப்ரெஞ்சு-இந்திய வணிகர்களுக்கு நடுவே தலைமை இடைத்தரகராகவும் பணி புரிய வேண்டும். அதனால் அந்தப் பதவிக்கு பெரிய போட்டி இருந்தது. ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினரான குருவா பிள்ளை மறைவுக்குப் பிறகு துபாஷ் பதவிக்கான போட்டியில் ஆனந்தரங்கம் பிள்ளையும் இருந்தார். ஆனால் அந்தப் பதவி கனகராய முதலியாருக்கு கிடைத்தது. 1746-இல் கனகராய முதலியார் இறந்த பிறகு அன்றைய ஆளுனர் டூப்ளே ஆனந்தரங்கம் பிள்ளைக்கு தலைமை துபாஷ் பதவியை அளித்தார்.

ஆனந்தரங்கம் பிள்ளை டூப்ளேக்கு நெருக்கமானவராக இருந்தார். அந்த நெருக்கமும் அவரது பதவியும் வணிக வெற்றியும் அவரை சில ஆண்டுகளாவது ஒரு அதிகார மையமாக வைத்திருந்தன. டூப்ளேயின் காலத்தில் ஆர்க்காடு நவாப் பதவிக்கு சந்தாசாஹிப், முகம்மது அலி ஆகியோருக்கு நடுவே கடும் போட்டி இருந்தது. டூப்ளே சந்தாசாஹிபையும் அன்றைய ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ராபர்ட் க்ளைவ் தலைமையில் முகம்மது அலியையும் ஆதரித்தார்கள். ஆங்கிலேயர்கள் வெற்றி அடைந்ததால் டூப்ளே ஃப்ரான்சுக்கு திரும்பினார். ஆளுநர் மாற்றத்துக்குப் பிறகு பிள்ளையின் தாக்கம் குறைந்தது. அவருடைய உடல் நலமும் குன்றியது. அதனால் 1756-இல் அவர் துபாஷ் பதவியிலிருந்து விலக்கப்பட்டார்.

உடல் நலக் குறைவால் ஜனவரி 16, 1961 அன்று பிள்ளை மறைந்தார்.


குடும்பம்

ஆனந்தரங்கம் பிள்ளை மூன்று மகள்கள், இரண்டு மகன்கள். அவரது மகன்கள் அண்ணாசாமி, அய்யாசாமி இருவரும் அவருக்கு முன்னாலேயே இறந்துவிட்டனர். அவரது மகள் பாப்பாளின் திருமணம் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது என்று தெரிகிறது.

பங்களிப்பு

பதிப்பு வரலாறு

ஆனந்தரங்கம் பிள்ளையின் மறைவுக்குப் பிறகு அவரது நாட்குறிப்புகளை பின்னால் வந்த தலைமுறைகள் கவனமாகப் பராமரிக்கவில்லை. 1846-இல் அன்றைய பாண்டிச்சேரி மேயராக இருந்த கால்வா மாண்ட்பர்ன் அவற்றை கண்டெடுத்து ஃப்ரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தார். விட்டுப்போன சில பகுதிகள் பிற்காலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. 1894-இல் ஜூலியன் வின்சென் முழுமையான குறிப்புகளை ஃப்ரெஞ்சு மொழியில் பதிப்பித்தார். 1896-இல் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளிவந்தது.

உள்ளடக்கம்

நாட்குறிப்புகள் அன்றைய சமூக நிகழ்வுகளை உண்மையாக விவரிக்கின்றன. இந்தியர்கள் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய பின்னும் ஜாதிப் பிரிவினைகள் மறையாதது, ஹிந்து கோவில் ஒன்றின் மீது கிறிஸ்துவ சர்ச்சிலிருந்து கழிவுப்பொருட்கள் வீசப்பட்டது, சென்னையை ஃப்ரெஞ்சுப் படை வெற்றி கொண்டது பாட்டுகளோடு கொண்டாடப்பட்டது, அடிமை முறை, கடற்கரையில் காலைக்கடன்களை கழிக்கக் கூடாது என்ற அரசு உத்தரவு ஆகிய சிலவற்றை எடுத்துக்காட்டாக சொல்லலாம்.

அன்றைய அரசியல் நிகழ்வுகளும் விவரிக்கப்படுகின்றன. டில்லியில் நாதிர் ஷா படையெடுத்தது பற்றிய் செய்தி தெற்கே பாண்டிச்சேரியில் எப்படி கிடைத்தது, மராத்திய படைகள் ஒரு கிராமத்தை சூறையாடியது, ஆளுநர் டூப்ளேயின் மனைவி லஞ்சம் வாங்குவது என்று பல நிகழ்வுகள் விவரிக்கப்படுகின்றன.

உசாத்துணை

கொலம்பியா பல்கலைக்கழக தளத்தில் நாட்குறிப்புகளின் சில பகுதிகள்