under review

அறத்தொடு நிற்றல்: Difference between revisions

From Tamil Wiki
m (Spell Check done)
(changed template text)
Line 64: Line 64:
*[https://saravanamcatechi.blogspot.com/2017/08/blog-post_94.html தொல்காப்பியம் பொருளியல் அறத்தோடுநிற்றல்]
*[https://saravanamcatechi.blogspot.com/2017/08/blog-post_94.html தொல்காப்பியம் பொருளியல் அறத்தோடுநிற்றல்]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/151 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை]
*[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.pdf/151 தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:Spc]]
[[Category:Spc]]

Revision as of 13:38, 15 November 2022

அறத்தொடு நிற்றல்: சங்கப்பாடல்களில் பேசப்படும் பொருள்களில் ஒன்று. தலைவியுடன் தலைவன் களவுறவுக்கு முற்படுகையில் தலைவியோ தலைவியின் தோழியோ,செவிலியன்னையோ, அன்னையோ முறையான கற்பொழுக்கத்தைநாடி மணம்புரிவதற்கு வழிவகுத்தல் அறத்தோடு நிற்றல் எனப்படும். பலதருணங்களில் கவிதையின் கூறுமுறையில் அந்த அறிவுறுத்தல் உள்ளுறையென மறைந்திருக்கும். களவுறவை குறிப்பாக பிறருக்கு உணர்த்திக்காட்டுதலும் அதன் நோக்கம் மணவுறவுக்கு இட்டுச்செல்லுதல் என்பதனால் அறத்தொடு நிற்றல் என்னும் துறையின்கீழ் அமையும்.

அறத்தொடு நிற்பவர்கள்

தலைவி, தோழி, செவிலி, நற்றாய் ஆகிய நால்வரும் அறத்தொடு நிற்பவர்கள்.பெண்டிற்கு அறமென்பது கற்பு .கற்பின் தலைநிற்றல் அறத்தொடு நிற்றலாகும் என இறையனார் களவியல் உரை கூறுகிறது.

அறத்தொடு நிற்கும் முறைகள்

தலைவி - தோழிக்கும், தோழி - செவிலிக்கும், செவிலி - நற்றாய்க்கும், நற்றாய் - தந்தைக்கும் தமையன்மாரிடமும் உண்மை உணர்த்தி அறத்தொடு நிற்பார்கள்.

தலைவி

தலைவியின் களவுப் புணர்ச்சியைச் செவிலி கண்டாலோ, தன் இல்லத்தில் காவல் மிகுந்திருக்கும்போதோ தலைவி அறத்தொடு நிற்பாள். அவளே தலைவனிடம் சொல்வதுபோல் பாடல் அமையும். இது ஏழுவகைகளில் அமையலாம் என தொல்காப்பியம் சொல்கிறது

எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல்

கூறுதல் உசாதல் ஏதீடு தலைப்பாடு

உண்மை செப்புங் கிளவியோடு தொகையை

ஏழு வகைய என்மனார் புலவர் ( தொல்காப்பியம் நூற்பா-12)

தலைவனின் எளிய தன்மையைச் சொல்லுதல், அவனுடைய பெருமையைச் சொல்லுதல், தன் வேட்கையைச் சொல்லுதல், தன் உள்ளக்கிடக்கையைக் கூறுதல். வெறியாடும் வேலன் முதலியோரிடம் வினவுதல் , ஏதேனும் ஒரு நிமித்தத்தை வைத்து உள்ளத்தில் இருப்பதைச் சொல்லுதல், நேரடியாக உண்மையைச் சொல்லுதல் என ஏழுவகை என்கிறது தொல்காப்பியம்.

இது ஏழு வகைகளில் அமையலாம் என நம்பியகப்பொருள் கூறுகிறது.

  • தோழி தன் துயரைக் காணும்போது தன் துயருக்கான காரணத்தைக் கூறுதல்.
  • தலைவன் தெய்வத்தைச் சான்றாக வைத்துத் தன்னை மணந்து கொள்ளும் உறுதி கூறியதை வெளிப்படுத்துதல்.
  • உறுதிமொழி கூறிய பிறகு தலைவன் தன்னை விட்டு நீங்கியதை, தோழியிடம் கூறுதல்.
  • தோழி, தலைவனின் பண்புகளைப் பழித்துக் கூறுதல் ; அது கேட்ட தலைவி தலைவனது பண்புகளைப் புகழ்ந்து கூறுதல்.
  • தெய்வத்தை வேண்டிக் கொள்ள இருவரும் செல்வோம் என்று தலைவி கூறுதல்.
  • தன் தாய் தன்னை வீட்டுக்காவலில் வைத்தாள் என்று தலைவிதோழியிடம் கூறுதல்.
  • செவிலித் தாய் இரவு நேரத்தில் தலைவன் வந்ததைப் பார்த்து விட்டாள் என்று தோழியிடம் கூறுதல்.
தோழி

அறத்தொடு நிற்குங் காலத் தன்றி அறத்தியல் மரபிலள் தோழிஎன்ப. (தொல்காப்பியம் பொருளியல் - 11) தலைவி அறத்தொடு நிற்கும்போதுதான் தோழி அறத்தொடு நின்று அதை பிறருக்கு உணர்த்தவேண்டும் என்று தொல்காப்பியம் கூறுகிறது.

  • செவிலித் தாய் தலைவியின் உடல் தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் தற்போது நிகழ்ந்துள்ள வேற்றுமைகளுக்குக் காரணம் யாது? எனக் கேட்ட போது தோழி அறத்தொடு நிற்பாள்.
  • தலைவியின் மாறுபாட்டிற்கான காரணத்தைக் கண்டறிவதற்காக வேலனை அழைத்து வந்து வெறியாட்டு என்னும் நிகழ்ச்சியைச் செவிலி மேற்கொள்வாள். அப்போது, அத்தகைய வெறியாட்டை எந்தப் பயனையும் தராது என்று கூறி, வெறியாட்டைத் தடுத்து நிறுத்தும் தோழி உண்மைக் காரணத்தைப் புலப்படுத்தி அறத்தொடு நிற்பாள்.

செவிலி வினவிய போது தலைவியின் களவு வாழ்க்கையை அறத்தொடு நின்று வெளிப்படுத்தும் தோழி, தலைவனின் காதல் உறவானது மலர்ந்ததற்கு மூன்று நிலைகளைக் காரணமாகக் காட்டுவாள். அவை யாவன:

  • பூத்தரு புணர்ச்சி: தலைமகன் தலைவியின் கூந்தலில் மலர்க் கொத்தைச் சூட, அவனையே தலைவனாகத் தலைவி முடிவு செய்தல்.
  • புனல் தரு புணர்ச்சி: தலைவி ஆற்று வெள்ளத்தில் மகிழ்ந்து நீராட, அப்போது நிகழ்ந்த இடையூற்றில் இருந்து மீட்ட ஆடவனையே தனக்குரிய காதல் தலைவனாகக் கொள்ளுதல்.
  • களிறு தரு புணர்ச்சி: தலைவி தினைப் புனம் காவல் புரிந்த காலத்தில் களிறு (யானை) ஒன்றின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்த தலைவனையே தனக்குரியவனாக உள்ளத்தளவில் முடிவு செய்தல்.

தோழி தலைவியின் நலன் கருதி அறத்தொடு நிற்பாள். அவள் நேரடியாக தலைவன் அல்லது தலைவியிடம் சொல்வது முன்னிலை மொழி எனப்படும். தலைவனிடமோ தலைவியிடமோ சொல்லவேண்டியதை வேறு எவரிடமோ சொல்வதுபோல உணர்த்துவது முன்னிலைப் புறமொழி எனப்படும்.

செவிலி

செவிலி தோழியிடம் சில வினாக்களை எழுப்பி அவற்றின் மூலமாகத் தலைவியின் களவு ஒழுக்கத்தை உணர்ந்து கொள்வாள். அதை அவள் தலைவியின் அன்னையிடம் முன்னிலை மொழியாகவோ முன்னிலைப் புறமொழியாகவோ கூறுவாள்.

அறத்தொடு நிற்றலுக்கு காரணங்கள்

  • ஆற்று ஊறு அஞ்சுதல் (களவுறவுக்கு வழியில் விளையும் துன்பங்களை அஞ்சுதல்)
  • அவன் வரைவு மறுத்தல் (தலைவன் தலைவியை சந்திப்பதையும் மணப்பதையும் உறவினர் மறுத்தல்)
  • வேற்று வரைவு நேர்தல் (தலைவிக்கு இன்னொரு மணம் பேசப்படுதல்)
  • காப்புக் கைம்மிகுதல் (தலைவிக்கு வீட்டில் காவல் மிகுந்துவிடுதல்)

உதாரணம்

அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக்கோப் பன்ன நன்னெடுங் கூந்தல்

அகவன் மகளே பாடுக பாட்டே

இன்னும் பாடுக பாட்டே -அவர்

நன்னெடுங் குன்றம் பாடிய பாட்டே

(குறுந்தொகை – 23 ஒளவையார். கட்டுக் காணிய நின்றவிடத்து,தோழி அறத்தொடு நின்றது.)

இல்லத்துக்குப் பாடவந்த விறலியிடம் தலைவனின் குன்றை புகழ்ந்து பாடிய பாட்டை மீண்டும் மீண்டும் பாடும்படி தலைவி சொல்கிறாள். அதன் வழியாக அவள் தோழிக்கு தன் காதலை உணர்த்துகிறாள். இது தொல்காப்பியம் சொல்லும் ஏத்தல் என்னும் வரையறைக்குள் வரும் அறத்தொடு நிற்றல்.

உசாத்துணை


✅Finalised Page