அமலை

From Tamil Wiki
Revision as of 20:50, 19 August 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "அமலை : போருக்குப்பின் வீரர்கள் ஆடும் வெற்றிக்களிப்பு ஆட்டம். வாள் வேல் முதலிய படைக்கலங்களுடன், கள்ளுண்டு இதை ஆடுவார்கள். போரில் தோற்ற எதிரி மன்னனைச் சூழ்ந்து இந்த ஆடலை ஆடுவது...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அமலை : போருக்குப்பின் வீரர்கள் ஆடும் வெற்றிக்களிப்பு ஆட்டம். வாள் வேல் முதலிய படைக்கலங்களுடன், கள்ளுண்டு இதை ஆடுவார்கள். போரில் தோற்ற எதிரி மன்னனைச் சூழ்ந்து இந்த ஆடலை ஆடுவதுண்டு. உண்டாட்டு என்னும் உணவுக்களியாட்டும் இதனுடன் இணைவதுண்டு.

சொற்பொருள்

திவாகர நிகண்டு அமலை என்னு சொல்லுக்கு மிகுதி என்று பொருள் அளிக்கிறது. திரள், சோற்றுத்திரள் என்ற பொருளும் உண்டு. அமலையாடுதல் என்பது மிகுதியான சோற்றை உண்டுவிட்டு ஆடுவது என்னும் பொருளை பின்னர் அடைந்தது. களம்பட்ட பகைவேந்தனைச் சூழ்ந்துநின்று வீரர் திரண்டு ஆடும் ஆட்டம். ‘அட்ட வேந்தன் வாளோராடு அமலையும்’ என்று தொல்காப்பியம் கூறுகிறது. (தொல். பொ. 72, உரை).

  1. திரள் (சோற்றுத் திரள்)