under review

ராஜா சந்திரசேகர்

From Tamil Wiki
Revision as of 20:59, 7 September 2022 by Navingssv (talk | contribs)
ராஜா சந்திரசேகர்

ராஜா சந்திரசேகர் (பிப்ரவரி 9, 1955) தமிழ்க்கவிஞர், ஊடகவியலாளர், ஆவணப்பட தயாரிப்பாளர். விளம்பரத்துறையில் பணியாற்றுகிறார். 

பிறப்பு, கல்வி

ராஜா சந்திர சேகர் பிப்ரவரி 9, 1955-ல் சென்னையில் கண்ணன் – ராதா இணையருக்குப் பிறந்தார். தென்னாற்காடு மாவட்டம் விருதாச்சலத்தில் ஆரம்பக்கல்வி முடித்து அங்கேயே கணிதம் பயின்று பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

திரைப்படடங்களில் எழுத்தாளராகவும் விளம்பரப்பட இயக்குநராகவும் பணியாற்றுகிறார். (Rghtfeel Productions). ராஜா சந்திரசேகர் சுந்தராம்பாளை 1993-ல் மணந்தார். ஒரே மகன் அருண் முருகன்.

இலக்கியவாழ்க்கை

ராஜா சந்திரசேகரின் முதல் படைப்பு. 1984-ல் எழுதிய கைக்குள் பிரபஞ்சம் என்னும் கவிதைத்தொகுதி . இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடி ஜெயகாந்தன்

விருதுகள்

  • 2002 திருப்பூர் தமிழ் சங்க விருது (ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்’ கவிதை நூல்)

திரைப்படம்

  • சந்தோஷ் சிவன் இயக்கி சர்வதேச விருதுகள் பெற்ற டெர்ரரிஸ்ட் படத்திற்கு வசனம். அவரின் மல்லி படத்திற்கு வசனம் பாடல்கள்.
  • நவரசா படத்திற்க்கு திரைக்கதை பங்களிப்பு வசனம்.
  • கவிஞர் அபி பற்றிய ஆவணப்படம் அந்தர நடை தயாரிப்பாளர்.

நூல்கள்

  • கைக்குள் பிரபஞ்சம்
  • என்னோடு நான்
  • ஒற்றைக்கனவும் அதை விடாத நானும்
  • நினைவுகளின் நகரம்
  • அனுபவ சித்தனின் குறிப்புகள்
  • மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
  • மிதக்கும் யானை
  • மைக்ரோ பதிவுகள் (ட்விட்டர் பதிவுகளின் தொகுப்பு)

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page