அந்தியூர் குருநாதசுவாமி ஆலயம்
அந்தியூர் குருநாதசுவாமி கோவில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சியின் வடக்குப் பகுதியில் புதுப்பாளையம் என்னும் கிராமத்தில் அமைந்தது. 300 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில் மடப்பள்ளி என்றழைக்கப்படுகிறது. இக்கோவிலின் மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனக் கோவில் குருநாதசுவாமியின் ஆவேசத்தைக் கொண்ட சுயம்பு ஸ்தலம் என நம்பப்படுகிறது.
தல வரலாறு
ஆற்காடு நவாப் காலத்தில் சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாபுரத்தில் வன்னிய மக்கள் ’குட்டியாண்டவர்’ என்ற பெயரில் கோவில் அமைத்து வழிபட்டனர். நவாப் அக்கோவில் பூசாரியின் மகளைப் பெண் கேட்டு வந்தார். பூசாரி தன் உறவினர்களிடம் கேட்ட போது அவர்கள் அதற்கு மறுத்தனர். நவாப் பெண் தர மறுத்தால் குடும்பம் முழுவதையும் சிறை சேதம் செய்துவிடுவதாகச் சொல்லிச் சென்றார். அன்றிரவே பூசாரி தன் குடும்பத்துடன் தாங்கள் தெய்வமாக வழிபட்ட மூன்று கற்களையும் எடுத்துக் கொண்டு பிச்சாபுரத்தை விட்டுப் புறப்பட்டனர். செல்லும் போது மூன்று கற்களின் பாரம் தாங்காமல் அவற்றை ஆற்றில் விட்டுவிட்டு புறப்பட்டனர். மறுநாள் காலை பூசாரிகளில் ஒருவரான சாந்தப்பன் என்பவரின் கூடையில் அந்த மூன்று கற்களும் இருந்தது. “இக்கற்சிலைகளையே தெய்வமாக வழிபட வேண்டும்” என முடிவு செய்து அனைவரும் சாந்தப்பன் பின்னால் சென்றனர்.
அப்போது மைசூர் மன்னரின் ஆட்சியின் கீழிருந்த அந்தியூர் புதுப்பாளையம் கிராமம் வந்த போது மன்னரிடம் தங்களுக்கு அடைக்கலம் தரும்படி வேண்டினர். தற்போதுள்ள புதுப்பாளையம் கற்கோட்டை மன்னர் காலத்தில் அமைக்கப்பெற்றது இதற்கு ஆதாரமாக தூண்கள், உத்திரத்தில் சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. சாந்தப்பன் மன்னரிடம் கல் மண்டபத்திற்கு அடுத்துள்ள இடத்தில் மூன்று கற்களையும் பிரதிஷ்டை செய்ய அனுமதி கேட்டான். மன்னர் போரின் போது தன் படையில் பங்குக் கொண்டு போர் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தைப் பெற்று கோவில் அமைக்க அனுமதி கொடுத்தார். கல்மண்டபத்தின் அருகே மூன்று கற்களையும் பிரதிஷ்டை செய்து அதனைச் சுற்றி மக்கள் தங்கள் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்து வந்தனர்.
பெயர் காரணம்
கோவிலில் அமைந்த மூன்று மூல கற்களுக்கு முறையே காமாட்சி, பெருமாள் என முதல் இரண்டு கற்களுக்கும், மூன்றாவது கல்லிற்கு தந்தையான சிவனைக்கு போதனை செய்த மகன் முருகன் ஒருங்கே அமைந்த கல் என்ற அர்த்தத்தில் குருநாதசுவாமி எனப் பெயரிட்டனர். குரு - ஈஸ்வரன், நாதன் - முருகன். தெலுங்கு பேசும் பக்தர்கள் பாலகுருநாதசுவாமி, உக்கிரகுருநாதர் என்றும் அழைக்கின்றனர்.
இக்கடவுளுக்கு கூலிக்கார குருநாதசுவாமி என்ற பெயரும் உண்டு. கோவிலில் வேலை செய்தவர்களின் கூலியை கோவில் மண்ணில் கலந்துக் கொடுப்பர். அதில் அதிகம் வேலை செய்தவர்களுக்கு அதிகப் பணமும், குறைவான வேலை செய்தவர்களுக்கு குறைவான காசும் இருந்ததாக இப்பெயர் காரணத்திற்கு தொன்ம கதையைக் கூறுகின்றனர்.
இக்கோவில் வனத்தில் வளர்ந்து குருநாதரின் உருவத்தையும், சக்தியையும் பெற்றதால், ‘குன்றாய் வளர்ந்த குருநாதர், வனத்தில் உள்ள சுயம்பு குருநாதர்’ என்ற அடைப் பெயர்களும் உண்டு.
மூலக் கடவுள்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.