under review

காரி கூட்டம்

From Tamil Wiki
Revision as of 05:53, 15 June 2022 by Madhusaml (talk | contribs)

காரி கூட்டம் :காரி குலம். கொங்குவேளாளக் கவுண்டர்களின் உட்பிரிவுகளாகிய அறுபது கூட்டங்களில் ஒன்று. காரி என்றால் கரியவன் என்றும் மழையைச் சார்ந்தவன் என்றும் பொருள். காரி சங்க காலம் முதலே இருந்துவரும் பெயர்களிலொன்று.

(பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

பெயர்

காரி என்பது கருமை நிறக் குதிரை என்று உ.வே.சாமிநாதையர் பொருள் கொள்கிறார். காரிக்குதிரைகளை வைத்திருந்த சிறப்பால் மலையமான் காரி என அழைக்கப்பட்டான் என்கிறார். காரி என்னும்சொல் கரியவன் என்னும் பொருளிலும் மழைசார்ந்த நிலத்தவன் என்ற பொருளிலும் பழைய நூல்களில் கூறப்படுகிறது. திருமாலின் பெயர்களில் ஒன்று காரி. சங்க காலத்தில் காரிக்கண்ணனார் , காரி கிழார் போன்ற புலவர்கள் இருந்தார்கள். காரி கடையெழு வள்ளல்களில் ஒருவன்.

ஊர்கள்

காரிக் குலத்தவர் உஞ்சணை, சேமூர், ஆனங்கூர், எழுமாத்தூர், மொடக்குறிச்சி , நல்லிபாளையம் ஆகிய ஊர்களை காரிக் குலத்தினர் காணியாகக் கொண்டனர்.

உசாத்துணை


✅Finalised Page